நான் பெறாத தலைச்சன் பிள்ளை நீ…..
உனக்கு பின்னல் இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து விட்டாலும், உனக்கு பிடித்த சவலை இன்று வரை போகவில்லை…..
செல்லமாக கடிந்து சொன்னாலும், ஒரு சில சந்தர்பங்களில் மிரட்டி சொன்னாலும் ஏற்க மறுக்கும் பிடிவாதக்காரன் நீ…..
சுயபச்சாதாபத்தில் பல நேரங்களில் மூழ்கிவிடுகிறாய்……….
உன் சண்டித் தனம் உன்னை விட்டு போகவில்லை………
நினைத்துக்கு கொண்டு விட்டால் பிடிவாதம் பிடிக்கிறாய்………
மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு என் கவனத்தை ஈர்ப்பது உன்னால் மட்டும் தான் முடியும்…….( நானும் ஈர்க்கப்பட்டு பழகி விட்டேன்)
யார் மீதோ உனக்கு இருக்கும் கடுப்பை என் மேல் திணிப்பதில் நீ மிகவும் தேர்ச்சி பெற்றவன்…….
திடீரென்று ‘மூட்’ போய்விடுகிறது…. ( காரணம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ள இசையமாட்டேன் என்கிறாய் )
தொப்புள் கோடி சம்பந்தத்தில் உண்டான பிள்ளைகள் கூட உன்னை கையாள கற்றுகொண்டுவிட்டார்கள் ……………
உன் ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி, நீ உதிர்க்க போகும் அடுத்த வார்த்தையை கூட என்னால் யூகிக்க முடியும்….
இது பல வருட பரிச்சயத்தால் வந்த தெளிவல்ல, உன்னை ஆழ் மனதிலிரிந்து நேசிப்பதால் வந்த தேர்ச்சி ……..
எந்த ஒரு மனிதனும் முற்றிலும் சரியானவன் அல்ல….
மேல் சொன்ன புகார்கள் வெறும் புகார்கள் மட்டுமே…… பழிப்புகள் அல்ல……..
இவை எல்லாவற்றையும் தாண்டி/தவிர்த்து நீ என் மனதில் பெரிய பீடம் அமைத்து அமர்ந்திருக்கிறாய்…….
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாய் ………….
fantastic. i never knew that u can write so meaningfully.great flow and every word is genuine. polithanamana alangarangal illada unmayiana padivu. keep writing. you have one more fan now. all the best.
LikeLike
idarku badilcholluvadu romba kadimam evvalau anubavithuirundal ippadi ezudha mudiyum
LikeLike
Idhula neraya pesanum Akka … Coimbatore varum podhu pesalaam
LikeLike
Akka visit http://www.anusrini.wordpress.com and read the post ‘the journey so far’ where I have talked about chinu… You will like that too…. And also read the other articles
LikeLike
முன்னாடி தெறிந்து கொள்ள இது, உண்மையானதா?அல்லது
கவிதையா?
LikeLike
என் கணவரை பற்றி நான் எழுதியது…. ரசித்தீர்களா?
LikeLike
ரஸித்தேன். ஒன்று தத்தோ, அல்லது வேறு வகையில் பிள்ளையின் ஸ்தானமோ என நினைத்தேன். கணவரைப் பற்றி என நினைக்கவில்லை. என்னுடைய ப்ளாகுக்கும் வாம்மா.
Chollukireen wordpress.com.
LikeLike
kandippa vara thudikkiren…anaal paarkka mudiyavillai…web addressil thavara?
LikeLike