பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தஞ்சாவூர் என்பதால் காவிரி தண்ணீர் என் நாடி நரம்புகளில் ஓடிக்கொண்டிருப்பது உண்மை !!!
என் அம்மாவும் பேச்சுக்கு பேச்சு பழமொழி சொல்வாள்…. (சிலர் இவற்றை … ஏதோ ஒரு வசனம் சொல்லுவாளே …….. என்று சொல்லி ஆரம்பிப்பதும் உண்டு….)
என் மாமனாரோ கேட்கவே வேண்டாம்…. சில நேரங்களில் பழமொழி தான் பேச்சே……
அப்பறம் எனக்கேன் தொற்றிக்கொள்ளாது ?
நாளடைவில்,
‘அது என்னது, நீங்க என்னவோ ஒரு பழமொழி சொல்லுவேளே “….. என்று என் தோழிகள் கூட என்னிடம் குறிப்பிடும் நிலை வந்து விட்டது ….பரவாயில்லை அதனாலென்ன ……
என்னை யார் பாராட்டினாலும் நான் தப்பாகவே நினைப்பதில்லை…..என் தோழிகள், உறவுக்காரர்கள், சொந்த பந்தங்கள் ….யாரோ வாசானுக்கு போச்சான் மதனிக்கு உடபொரந்தான் நெல்லுகுத்துகாரிக்கு நேர் உடபொரந்தான் உட்பட ……………
காலையில் எழுந்து குளித்து வாசலில் கோலம் இட்டு, பால் காய்ச்சி, டிகாஷன் போட்டு இறக்கி, இதற்கிடையில் பெருமாள் சந்நிதியில் கோலம் போட்டு, விளக்கேற்றி பூக்கள் சார்த்திவிட்டு, வாய் சுலோகம் சொல்லிக்கொண்டிருக்க, ஒரு பக்கம் பாஜி ( சப்ஜி) செய்து, சப்பாத்திகள் போட்டு சுட்டு எடுத்து, டப்பா கட்டி விட்டு திரும்பிப்பார்க்கும் பொது,
எருமைமாடு கன்னுபோட்ட இடமாட்டம் இல்லாமல் சுத்தமாக இருக்கும் என்று சொல்ல வந்தேன்…… !!!!!!!!!!!!!!!!!!!!!
என் காரியத்தில் அப்பிடி ஒரு நேர்த்தி…..!!!
பிள்ளைகள் இருவரும் கல்லூரிக்கு கிளம்பி போன பிறகு, அவர்கள் ரூமில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற மாமனார் ……
சரச்ச எடத்துல கத்தியும் அறுத்தஎடத்துல அருவாளுமாகெடக்கு என்று சொல்லியபடி குளிக்க போனார்.
கேட்டுக்கொண்டு வந்த நான்
திருப்பதிஅம்பட்டன்போல, கை காரியத்தை அப்பிடியே அம்போ என்று போட்டுவிட்டு ரூமை சரி செய்ய தொடங்கினேன் ….
வேலைக்காரி வரும்முன் மேலே எடுத்து வைக்க வேண்டும்….இல்லையென்றால் அவள் வேலையில் டிமிக்கி கொடுப்பாள்…..
மரமேர்றவன் குண்டியை எவ்வளவு தூரம்தான் தாங்கமுடியும் (sorry for using unparliamentary words!!! ) என்று சின்னதாய் ஒரு சலிப்புடன், எவ்வளவு சொல்லிக்கொடுத்தாலும் தங்கள் சாமான்களை ஏன் சரியாக வைக்க மறுக்கிறார்கள் …………………….
என்ன செய்வது வீட்டில் பொருட்கள் இறைந்து கிடப்பதற்கு பிள்ளளைகள் மட்டு காரணம் என்று சொல்ல முடியாது . பார்பதெல்லாம் வாங்கி விடுகிறோம். இதில் சாமான்கள் சேர்பதில் பெண்களின் பங்கு சற்று அதிகம் தான்
என் வீட்டில் 2 பெண் பிள்ளைகள், நான் என் மாமியார்…..( மாமியாரின் சாமான்கள் எங்கும் இறைந்து கிடைக்காது என்பது வேறு விஷயம்.) இருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அறுக்கமாட்டாத அம்பட்டனுக்கு அறுவத்தெட்டு அருவாளும் கத்தியுமாம் என்பது போல, வீட்டில் பரவலாக, லிப்ஸ்டிக், நைல் பாலிஷ் கிளிப், ரப்பர் பேண்ட், காது தோடுகள், கண் மை, என்று பெண்மையான (!!!!) வீடாக தோற்றமளிக்கும். இது உங்கள் வீட்டு கதையும் தானே……
என்னமோ ……
பொறந்தாது பெருமையை ஒடபொராந்தான்கிட்ட பீத்திண்டாப்ல ….
உங்களிடம் கூறுகிறேன்……
எல்லாவற்றையும் எடுத்து நேராக்கி விட்டு திரும்பினால், ரூம் படு சுத்தமாக இருந்தது……
ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான் கண்ணுல புளிச்சபோச்சுன மாதிரி…….ரூம் சுத்தமானதை எண்ணி திருப்தி அடைந்தேன் …..
சாயந்திரம் பெண்களிடம் கூறினால்,
அம்மா நீ ஒன்னு பண்ணு….
ஒரு டைம் டேபிள் போட்டுக்கோ ,
உனக்கு சமைக்கணும் வெளி வேலையும் பாக்கணும்
க்ரோஷா போடணும்…..
Facebook பாக்கணும் ……
Blog எழுதணும் ….
….ஹ்ம்ம் …….பத்துபுள்ள பெத்தவள பார்த்து தலைச்சன்பிள்ளைக்காரி சொன்னாளாம் ,
“முக்கிபெருடின்னு “……………..
என்பது போல் இருந்தது என் கதை ……!!!!!!!!!!!!!!!!
இதனிடையில் என்னவர் ஆபீசிலிரிந்து வந்தவர்,
கெடக்குறதெல்லாம் கெடக்கறது, கெழவியை தூக்கி மணைலவைங்க்ராப்ல ……
என்னை துரித படுத்தி, ஒரு கல்யாண வரவேற்ப்புக்கு போக தயராகச்சொன்னார் .
மடமடவென்று தயாரானேன் …..ஏற்க்கனவே, மணி 7.45….இன்னும் 45 நிமிடங்களாவது ஆகும் போய் சேர …நேரத்துக்கு போகவில்லை என்றால்
ஆடிகழிஞ்ச அன்ஜான்னாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம் என்று ஆகிவிடும் …..
அனு ……………..ரெடியா ……………..என்று என்னவர் குரலும்,
______________சிங்காரிசிக்கர்துக்குள்ளே பட்டணம் கொள்ளைபோய்டும் என்று என் (வேற யாரு ???) என் மாமனார் குரலும் கேட்டுக்கொண்டிருந்தது !!!!!!!!!!!!!!!!!