இங்கிலீஷ் விங்க்லிஷ் !!!!!!!

சிறுமியாக இருக்கும் காலத்திலிருந்தே, இந்த இங்கிலீஷ் மொழி மீது எனக்கு ஒரு ஈர்ப்பு…என் தாயரோடு வெளியே செல்லும் போது  அவர்கள் தமிழில் பேசினால்,

“டாக் டு மீ இன் இங்கிலீஷ்,   பீபுள் வில் திங் ஐ டோன்ட் நோ இங்கிலீஷ் ”

என்று சொல்வேனாம்….. நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டுமே என்று தோன்ற வில்லை… சிறுமி தானே …..

ஆனால் அந்த ஈர்ப்பு, வளர்ந்து, வளர்ந்து, கொழுந்து விட்டு எரிந்து எனக்குள் ஒரு பெரும் தாகத்தை உண்டு செய்து, என்னை ஆங்கில இலக்கியம் படிக்கச்  செய்தது ……

என்று சொல்ல மாட்டேன் ….காமர்சில் கணக்கு பாடம் இருந்ததாலும், அறிவியலுக்கும் எனக்கு, ஆகவே ஆகாது என்பதாலும் ஆநா ங்கில இலக்கியம் எடுத்து படித்து தேறினேன். !!!!!!!!

ஆனால், நான் உணர்ந்தது என்னவென்றால், நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களை கண்டால் எனக்கு பிடித்தது …..அது தான் நிஜம்.

புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தால், கணவரும் மாமனாரும் மட்டும் ஆங்கிலத்தில் சம்பாஷிக்க தெரிந்தவர்கள்…..[தமிழ் குடும்பத்தில் வாக்கப்பட்டவளுக்கு இது ஒரு பிரச்சனையா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது…..]!!!!!!

இல்லை தான் அனால் ஏனோ கொஞ்சம் மாதங்களுக்கு இங்கிலீஷ் பேசுகிறவர்கள் யாரும் தென்படாதது ஒரு குறையாகவே இருந்தது ……

பிறகு ஒரு தோழி கிடைத்தாள் ….. போகும் போதும் வரும் போதும், ‘ஹாய் ‘சொல்லி நல்ல நண்பிகள் ஆகிவிட்டோம் …..

இன்று வரை அவளை நான் விடவில்லை !!!!!!

ஒரு நான்கு வருடங்களில், பக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில், டீச்சர் வேலையில் சேர்ந்தேன், ….

அதுவும் எல்.கே.ஜி ….டீச்சர். … 52 குழந்தைகள் எடுத்த எடுப்பில்…ஜூன் மாதம் பள்ளி திறந்ததும் வெளியே கொட்டும் மழை….[உள்ளேயும் தான்.]

ச்சே ச்சே ……ஏதோ திறந்த வெளி திண்ணை பள்ளிக்கூடம் என்று எண்ணி விடாதீர்கள்……குழந்தைகள்  கண்ணீரை சொன்னேன்….!!!!!!

அழுகை ஓய்ந்து ஒருவழியாக அவர்கள் செட்டில் ஆனதும் A,B,C,Dசொல்லிக்கொடுக்க முற்பட்டேன்…

டேக் அவுட் யுவர் நோடேபூக் ……என்றேன்

எந்த ஒரு reactionம்  இல்லாமல் என்னை பார்த்தார்கள்…..

ச்சே ….சின்ன குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே என் பெருமையை காட்டவேண்டாம் என்று எண்ணி …..

“notebook  நிகாலோ” என்றேன் [இது ஹிந்தியாமா !!!!]

…அப்பவும் அப்படியே பார்த்தார்கள்…..

நான் குழம்பினேன்…..ஐயையோ இப்போது எந்த பாஷையில் பேசுவது??????

ஆபத் பாந்தவனாக ஒரு குழந்தை notebook ????? என்று திரும்ப கூறிற்று …..

அப்பா, ராசா, படையப்பா, அதே தாண்டா  …. என்று எண்ணிய நிமிஷத்தில், கையில் நோட்டை பிடித்துக்கொண்டு,

“வை”என்றது….”. ஆஹா இது வையா “என்று எண்ணி…..

“”வை நிகாலோ “” என்றவுடன் சமர்த்தாக நோட் புக்கை  எடுத்தார்கள்….

அட ராமா  இன்னும் எதனை வார்த்தைகளை வைத்துக்கொண்டு நான் முழிக்க போகிறேனோ என்று எண்ணினேன்…….

சின்ன சின்ன வார்த்தைகளுக்கு கூட ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்க மறுக்கும் அவர்களின் பெற்றோர்களின் தாய் மொழிப்பற்றை என்னவென்று கூறுவது…..!!!!!!!!!!!!!!!!!

நல்ல விழயம் தான் ….தாய் மொழியில் பேசுவதும், தெரிந்திருப்பதும், கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும்,….

ஆனால், ஆங்கிலம் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து ……

முட்டி மோதி அவர்கள் என்னிடமிருந்தும் நான் அவர்களிடமிரிந்தும் நிறைய கற்றுக்கொண்டோம்….!!!!!!!!!!!!!!!!!!

இன்று, அந்த குழந்தைகள், படித்து முடித்து, வேலைக்கும் சென்று விட்டார்கள், சிலர் அமெரிக்காவில்……75 சதவிகிதம் பேர் என்னுடன் facebook  தொடர்பில் உள்ளனர்…!!!!!!!!!!!!!!!!!

வேலையே விட்ட பின்பு, வீட்டில் tution  சொல்லிக்கொடுக்கும் பொது வேறு சில அனுபவங்கள் …..

gender  change  சொல்லிக்கொடுக்கும் பொது,

king ————-queen

father ———mother

boy ————–girl

monk —————–?????monkey  என்றான் ஒரு குழந்தை……

மற்றொருவன், wizard  க்கு lizard  பெண் பால் என்றான்…..

awe  எனும் வார்த்தையை ஆவி என்றது இன்னொரு குழந்தை….

இப்படி பல சுவையான அனுபவங்கள்……

தனது தாய் மொழி மீது பற்றும் விசுவாசமும் இருப்பதில் தவறில்லை…..

ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆங்கிலமும் அதே அளவு தேவை படுகிறது ….

எனது தமிழ் இடுகைகளை [posts ] ஆங்கிலத்தில் எழுதுமாறு சில நண்பர்கள் கேட்டார்கள்….அது என் எழுத்தின் ஆழத்தை குறைத்து விடும் எனக்  கூறினேன்……

தமிழுக்கும் அமுதென்று பேர்….. தொலைகாட்சி பெட்டியில் பாட்டு போய்க்கொண்டிருக்கிறது ………

10 responses to “இங்கிலீஷ் விங்க்லிஷ் !!!!!!!

 1. superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr missing those day we were together …. enjoying with the tiny tots

  Like

 2. english winglish attagasama irrukku taminglish ezudalame

  Like

 3. manasila irukarada kotti teekanumna aduku thai moziya vida vera mozhi velaiku aagadu endru unardadirku sabaash.

  Like

 4. ரொம்ப அழகாயிருக்கு பதிவு. இங்லீஷ் விங்லீஷ் படம் பற்றிய பதிவோ என நினைத்தேன். அந்தப்படம் பார்க்கும்போது, என்னை ஸ்ரீதேவியாகவே கற்பனை பாதிபடம் வரை இருந்தது.
  இங்லீஷ் அவசியம்தான். பாஷையே தெறியாதவர்களிடம் தமிழ் பேசினால் கௌரவக்குறைவென்று இங்லீஷ் பேசும் மாடர்ன் யுவதிகளும் இருக்கிறார்கள். அவசியமான மொழி இங்லீஷும்தான்.

  Like

  • நன்றி மகாலட்சுமி… வெள்ளிக்கிழமை அந்த தாயாரே வந்து சொன்னாப்ல இருக்கு !!!!
   படம் பார்த்த பொது நானும் என்னை ஸ்ரீதேவியில் பார்த்தேன்… 40+il இருப்பவர்கள் பார்வையோ என்னமோ….
   உங்களை என் வயதொத்தவர்களில் சேர்க்கலாமா என தெரியாது… !!!!!
   மற்றவற்றையும் படித்து தங்கள் விமரானங்களை பதிவு செய்யுங்களேன் ….

   Like

  • Sorry mahalingam was etched as mahalakshmi in my mind kamatchi… Its alright kamatchi Meenakshi mahalakshmi ellam onnu thane !!’n

   Like

 5. ஸாரி எல்லாம் வேண்டாம். நான் 80+இல் இந்த அனுபவம். எப்படி இருக்கு? எல்லாம் இங்லீஷா? என் பதிவின் பெயர் சொல்லுகிறேன். தமிழ்ப்பதிவு. இங்லீஷ் சுமாராகப் புரியும்.
  எழுத ப்ராக்டீஸ் இல்லை. படிக்கவுமில்லை. வாங்கோ,நீங்களும்.. தமிழ்ப் பதிவானால் கட்டாயம் பின்னூட்டமிடுகிறேன். பாட்டி வயது எனக்கு.. உன் பதில்
  மகிழ்ச்சியாக இருந்தது. அன்புடன்

  Like

  • ஓ ….பிரமாதம்…எல்லாம் தமிஹ் பதிவுகள் தான் www .anusrinitamil.wordpress.com போய் பாருங்கள்…..எங்கு வசிக்கிறீர்கள்…நான் மும்பையில் இருக்கிறேன். பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் சென்னையில். மைலாப்பூர்

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s