குழந்தையும் தெய்வமும்

குழந்தையும்  தெய்வமும் குணத்தால் ஒன்று என்று கூறுவார்கள்…

ஏன், குழந்தையும் பெரியவர்களும் கூட குணத்தால் ஒன்று தான்…..

உங்கள் வீட்டில் பெரியவர்கள்,…………………………..

உங்களுக்கு teenage  பையனோ பெண்ணோ இருந்தால் ‘பெரிசு’என்று செல்லமாக) !!!!!! அழைக்கப்படும் பெரியவர்கள் இருந்தால் ……………..,

உங்களுக்கு அவர்களை அனுசரித்துப்போகும் குணம் இருந்தால்,…………

உங்கள் பொறுமையை அவர்கள் சோதிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்காமல் இருந்தால……………..,

உங்களுக்கும் ஒரு நாள் வயசாகும், நீங்களும் முதியவர்கள் கணக்கில் வருவீர்கள், என்கிற உணர்வு இருந்தால்……………..

உங்களை விட வாழ்கையை அதிகம் வாழ்ந்தவர்கள் என்கிற கண்ணோட்டத்தோடு அவர்களை பார்த்தீர்களானால்……………..

தங்களின் தேவைகளை குறைத்துக்கொண்டு, உங்கள் மனதை நிறைத்தவர்கள் என்கிற உண்மையை உணர்தவரனால் …………….

இன்று நீங்கள் வாழும் வாழ்க்கை, அவர்கள் இட்ட வித்திலிறிந்து வளர்ந்த மரம் என்று நம்பிநீர்க்ளனால் ……………………….

In  1940 ….என்று அவர்கள் அந்த காலத்து கதைகள் பேசும்போது, ‘போ பா …ஒனக்கு வேற வேலை இல்லை” என்று சொல்லாமல் …..”கரெக்ட்…அந்த காலமெல்லாம் இனிமே வராதுப்பா …” என்று கூறி அவர்கள் சொல்ல வந்ததை கேட்டு விட்ட திருப்தியை அவர்களுக்கு கொடுபீர்களேயானால் …..

தன்னை பெற்றவர்கள் மற்றும் தன்  இறந்து போன உடன் பிறப்புகள் பற்றி எண்ணி அவர்கள் சிந்தும் கண்ணீரை, தேற்றும் விதத்தில், அவர்கள் தோள்  தொட்டு அழுத்துபவரானால் …….

உங்களையும், உங்கள்  நடவடிக்கைகளையும் குறு குறு என்று நோட்டம் விட்டாலும், உங்கள் bank  passbook  சரி பார்ப்பது, உங்கள் டெபொசிட் mature  ஆகும் தேதியை உங்களுக்கு நினைவூட்டுவது, நீங்கள்  income tax  file  பண்ண வேண்டியதை நினைவுபடுத்துவது, இவை எல்லாம் செய்துவிட்டு,

‘”நான் ஞாபக படுத்லேன்னா …..நீ எங்கே பண்ண போறே ?”……என்று சொல்லும்போது

அமாம் கண்டிப்பா…மறந்தே போயிருப்பேன்,” என்று சொல்லி ஒரு சின்ன சந்தோஷத்தை அவர்களுக்கு அளிப்பவரானால் ………

உங்களைப் பராமரித்ததை விட உங்கள் பிள்ளைகளை, கண்ணின் கருமணி போல் பாதுகாப்பவர்கள் என்று நீங்கள் அறிந்திருந்தால்,

ஒரு விஷயத்தில் / நிமிஷத்தில் , குழந்தையாகவும். மறு நிமிஷத்தில், பெரியோர்களாகவும் நடப்பதை, நீங்கள் ஒத்துக்கொள்பவரானால் …………………..

சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய விஷயமாக பேசுபவர்கள்  என்று நீங்கள் அறிந்திருந்தால் …….

வேலை பளுவால் நீங்கள் சோர்ந்திருப்பது தெரியாமல், அன்று வந்த தபாலை பற்றியும், அன்று அவருக்கு வங்கியில் நடந்த கொடுமையை !!!!!

[ இவர்கள் சொல்லவதை கேட்க பொறுமையில்லாத இளவட்டம் ஒன்று கவுன்டரில் இருந்திருக்கும்……………..அதனால், அவருக்கு இழைக்கப்பட்டது “கொடுமை’!!!!!! ]

பற்றி பேசுபவரிடம் ……கனிவாக சற்று பொறுக்கும் படி சொல்பவரானால் ………………………….

நீங்கள் வெளியிலிருந்து தாமதமாக வந்தால், கவலை படுபவரும் , உங்கள் குழந்தைகள் வர தாமதமானால் பதரிபோவரும் …..தன்னிடமும், தன்   பிள்ளைகளிடமும், வேறு யாருமே இந்த உலகத்தில், இந்த பாசத்தை காட்ட முடியாது என்று உணர்ந்தவரானால் ……………………..

உங்கள் குழந்தைகளோடு, குழந்தைகளாக அவர்களையும் பராமரிப்பீர்கள் …….

முதியோர் இல்லங்கள் இல்லாமல் போகும்.…….

உங்கள் சந்ததிகள் நீடூழி வாழ்வார்கள்.…..( எனது அனுபவித்தில் சொலிகிறேன் )

உங்களது இன்றைய இளமை நாளைய முதுமை.……

அவர்களுக்கு நீங்கள் செய்யும் பணிவிடை வீண் போகாது..

க்ஷண நேரம் எரிச்சல் வந்தாலும் …….முயன்று அந்த எரிச்சலை தகர்த்தி, கனிவான வார்த்தைகளை பேசுங்கள்…..

(இதில் வேடிக்கை பாருங்கள், நான் இதை எழுதிக்கொண்டிருக்க, என் மாமனார் வந்து,

அடுத்தது எழுதுகிறாயா , என்ன topic ? …..என்று கேட்க..

முழுவதும் எழுதிவிட்டு காண்பிக்கிறேன் என்று சொன்னதை காதில் வாங்காமல்,

“காட்டாமல் போனால் போயேன் ” என்றவுடன்,

“இல்லைப்பா …….முழுசா எழுதிட்டு காட்றேன் ”   என்றபோது

நான் எழுதிக்கொண்டிருக்கும் விஷயம் கதையல்ல நிஜம் என்று உணர்ந்தேன்….

ஆமாம் அனு  …….குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் என்று என்னோடு நீங்கள் ஒத்துக்கொள்வது என் காதுகளில் விழுகிறது…..

நன்றி

….

6 responses to “குழந்தையும் தெய்வமும்

  1. anu unnal eppadi ippdi ezudha mudiyardhu kanna thatha madiri naanum kekkaren aduthu enna ezudhera

    Like

  2. Missing that atmosphere Anu … 😦 hard hitting now without the elders ….

    Like

  3. பல வீடுகளில் நடக்கும் நிதரிசனத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள், அனு!

    அவர்களை இடைஞ்சல் என்று நினைக்கிறார்கள். மறைமுகமாக எவ்வளவு உதவுகிறார்கள் என்று புரிவதே இல்லை.
    இளைய சமுதாயம் படிக்குமா?

    Like

    • இளைய சமுதாயம் படிக்க வேண்டும், படிப்பார்கள் என்கிற நம்பிக்கையில் எழுதியிருக்கிறேன்…பார்க்கலாம்…
      ஆனால் , என் தலைமுறையின், கடமை அதை அடுத்த தலைமுறைக்கு கற்று தருவது…. என் வரையிலும், என் நண்பர்களிடமும் இதை எப்பொழுதும் வலியுறுத்துகிறேன்…..
      உங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி…. என்னை ஊக்கப்படுத்துகிறது உங்கள் வார்த்தைகள்…..

      Like

  4. எங்கள் எல்லாருக்கும் ஒரு கால்க்கட்டு இருக்கு என்று, பெறியவர்களை கால்க் கட்டாக வர்ணிக்கும் ஸமுதாயமும்,
    இருக்கே! அவர்கள் கைக்கட்டாக இல்லாமல் ஒரு காலம் வரும் போதுதான் அவர்களால் உணற முடியும்..

    Like

பின்னூட்டமொன்றை இடுக