அப்பம் வடை பொறிஉருண்டை …………

 

அட இது போரும்…முதல்ல களருங்கோ ….பொறி எல்லாம் ஒண்ணு சேர்ந்துதுனா சரியாய் இருக்கும்….

சரியாய் வராது பார்…..

முதல் வாக்கியம் என் மாமியார் …இரண்டாமாவது என் மாமனார்….

கொஞ்ச நெஞ்சம் சமையல் அறிவு இருக்கிற ஆண்பிள்ளைகள் இருக்கிற வீட்டில் எல்லாம் நடக்கற காட்சி தான்….

ரிடைர் ஆகிற வரை தலையிடாதவர்கள்., பின் நிறைய நேரம் இருப்பதாலோ என்னவோ, அவர்கள் பங்களிப்பை அதிகப்படுதுகிறார்கள் !!

வயது, வேறு ஆகிவிடுகிறது ( இருவருக்குமே தான் ) ….அப்பா சொல்வதை அம்மா மறுப்பதும், அம்மா சொல்வதை அப்பா ஏளநிப்பதும் சகஜம் ..

பொறி உருண்டையை பிடித்துவிட்டு, உள்ளங்கையை கொண்டு வந்து காட்டி, “சூட்டோட பிடிச்சாதான் உண்டு ” என்று சொல்லும் போது, ஒரு நாளாவாது அம்மா இப்படி கையை காட்டியதில்லையே என்று எண்ணத் தோன்றும்….!!!

வடைக்கு அரைக்கும் பொது, கொஞ்சம் பருப்பை அரைக்காம, அப்பிடியே போட்டுக்கோ….நல்ல மொரு மொறுன்னு வரும் என்று என்னிடம் வருவார் ..

அப்பத்துக்கு வெல்லம் பாது போடு, இளகிபோச்சுன அலண்டு போகும்….

முந்திரி பருப்பு ஒடச்சு தரவா ………..பாயசத்துக்கு ?

எல்லாத்தையும் சீக்கரமா பண்ணுங்கோ நான் வெளில போய்ட்டு வந்து பெருமாளுக்கு அம்சி பண்ணுகிறேன்……

இந்த வெளக்கெலாம் நகத்தினாதானே நான் ஒக்கார முடியும் ….

வெளக்குல எண்ணெய் ஒழுகர்து பாரு….திரியை நிமிண்டி விடு….

அம்மா விடமிறிந்து ஒரு சத்தமும் வராது…பொறுமை போய்க்கொண்டிருக்கிறதோ என்னமோ….தெரியாது….!!!!!!!!!!!!!!!!!

எல்லாம் முடிந்தபின் எல்லாத்தையும் கொழந்தேளுக்கு கொடேன் ….என்று ஒரு சத்தம் போட்டு விட்டு தான் கிளம்பி விடுவார்.

அவர் வயித்துக்கு ஒன்னும் ஒத்துக்காது எதையும் வளைத்து கட்டி சாப்பிடுவதில்லை….

ஒரு சின்ன தட்டில், ரெண்டு வடை, ஒரு அப்பம் வைத்து எடுத்து வந்து கொடுத்துவிட்டு தான் எடுத்துக்கொண்டார் அம்மா….

ஒருவரை ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாலும், அதில் ஒரு அன்யோன்யம் தெரியும்…..

சும்மாவா 50 வருட தாம்பத்யம் முடித்திருக்கிறார்கள்?????

தொட்டதுக்கெல்லாம் டிவோர்ஸ் கேட்க்கும் இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு புரியுமா இந்த ஊடல் கலந்த உறவும் அதன் சுகமும்…………….

 

10 responses to “அப்பம் வடை பொறிஉருண்டை …………

 1. anu… kalakittel! can get the festive feel along with the conversations…. enna dan irundalum aged ppl kita irukara anyonyame thani than:) Lovely… Long live your MIL n FIL:)

  Like

 2. Pramadham! Not just the Appam and Vadai but all that udaals too! I have Many Times witnessed a few of such incidents in my parents Life! True… Many a man and Women as partners …will Never know what Love and care is in their Ripe Age where companionship and friendship dominates!!

  Like

 3. ஓல்ட்ஏஜ் ஊடல் என்று சொல்லலாமா? இரண்டுபேரும் பேசிப்பழகி இரத்தத்தில் ஊறிப்போன பழகுமுறை. எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.

  Like

 4. appam vadai pori fine singaporela onnum illai swargame endralum cbe pola varuma pesame naanum athium 37 years kuppai kottiyachu

  Like

 5. எங்கள் வீட்டில் நடப்பதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள், அனு?
  இன்னும் வயதாக ஆக பெண்கள்தான் பொறுமையைக் கடைப்பிடிக்கணும்!

  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், அவர்கள் போடும் சத்தத்தை ஒருநாள் நாங்கள் திரும்பப் போட்டால் என்ன ஆகும் என்று நினைத்தே பார்க்க மாட்டார்களா?
  எத்தனை வயதானாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்று நினைக்கிறார்களா?
  அப்படித்தானே இருக்கிறோம்!

  Like

  • என் எழுத்துக்கள் உங்கள் மனதை தொட்டதற்கு சந்தோஷம்
   ஆம் நாம் தான் கேட்டு கேட்டு பழக்கிக்கொண்டு விட்டோம் நம்மையும் அவர்களையும். யார்யாரிடமோ பேச்சு கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது…
   நமக்காக கடவுள் தந்த உறவிடம் மனம் வல்லிக்காமல் கேட்டுக்கொள்வோமே …
   என்ன சொல்கிறீர்கள் ?

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s