இன்று காலை செய்தித் தாளில் படித்த ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.
யுக்ரேன் நாட்டில் ஒருவர், ‘ சவப் பெட்டி தெரபி ‘ தருகிறாராம்…
உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது.!!!!
உயிருடன் இருக்கும் போதே சவப் பெட்டியில் படுக்க வேண்டும் என்றால் எப்பிடி இருக்கும் ?நினைத்து பாருங்கள். !!
அச்சமாகவும், அச்சான்யமாகவும் இருக்கும் !!!!
ஆனால் யோசித்து பார்த்ததில், அட இது நம்மளை எவ்வளவு மேம்படுத்தும் என்று தோன்றியது.
நம் மதத்தில், நாம் நெற்றிக்க்கிட்டுக்கொள்ளும் பழக்கம் அதற்க்கு தான்…சாம்பலாகிய விபூதியை பூசும் போது, உன் உடம்பும் ஒரு நாள் சம்பலாகப்போகிறது பார்த்து நடந்துகொள் என்று நினைவூற்றிக்கொள்வதர்க்கு …..
திருமான் காப்பும் அதே தத்துவத்தை தான் கூறுகிறது…நீ மண்ணிலிரிந்து வந்தாய் மீண்டும் மண்ணிற்கு போவாய்…. என்று…
ஆனால் இன்று நெற்றிக்கு இட்டுக்கொள்வதும் குறைந்து விட்டது, அது கற்று கொடுக்கும் பாடமும் மறந்து விட்டது…
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது …..
என்ன ஆழ்ந்த அர்த்தபூர்வமான வரிகள் கவிஞர் வைரமுத்து அவர்களது…!!!!!!
நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததை விட்டுவிட்டால் இந்த மாதிரி தெரபியை தேடி ஓடலாம்…
நினைத்து பாருங்களேன்….
ஒரு பதினைந்து நிமிடம் படுக்க வேண்டுமாம் அந்த பெட்டியில்….
மூடியை திறந்து வைத்துக்கொள்வதும், மூடி வைத்துக்கொள்வதும் நமக்கு ‘சாய்ஸ் ‘ !!!!
அடா அடா என்ன ஒரு சாய்ஸ் !!!!
அந்த பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு, இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கைக்கு தயாராகி போகிறார்களாம் மனிதர்கள்….
அந்த நேரம் பெட்டியில் இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் தோன்றும்….
வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம் …..
எவ்வளவு செய்ய வேண்டி உள்ளது …நாம் காலத்தை எப்படி விரயம் செய்கிறோம்
ஏன் பந்துக்களுடம் சண்டை போடுகிறோம்….
ஏன் மற்றவர் மனது புண் படும்படி நடக்கிறோம் ……….
ஏன் உதவி செய்ய யோசிக்கிறோம் ………
ஏன் சின்ன விஷயங்களை ஊதி ஊதி (பலூன் வியாபாரி போல் ) பெரிதாக்கிக் கொள்கிறோம்…..
ஏன் நமக்கு கிடைத்த /நடந்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு நடக்காததையும் கிடைக்கததையும் நினைத்து புலம்பி, அங்கலாய்த்து போகிறோம் ……….
எல்லாம் எல்லாம் தோன்றும்
சுய பரிசோதனை நடதிக்கொள்வோம்….
ஒரு தடவை பெட்டியிலிருந்து வெளியே வந்தோமானால், மனது இதெல்லாவற்றையும் மறந்து விடுகிறததா ? ……நினைக்க மறுக்கிறதா?
ஒருவரது, இறப்பிலும், சவ ஊர்வலத்திலும், ஈமக்க்ரியைகள் நடக்கும் போதும் இதெல்லாம் நமக்கு தோன்றும் …பிறகு..எதையும் நாம் நினைக்க விரும்புவதில்லை….
அது தான் ஸ்மசான வைராக்யமா ?
thought provoking experience, anu. Goes to show that we need to realise the ultimate truth to know what it is to have a human birth. (though,I feel we dont need to be inside a coffin to get a feel of it. lying on a stretcher under strong lights and masked doctors is good substitute. 🙂
LikeLike
inda theraty thevai thaan anaal ellarukkum idu garbattil irukkum podhe unara mudiyum veliyil vandadum marandu vidugiradu
LikeLike
எனக்குக் கூட இந்த தெரப்பி தேவை இல்லை என்றே தோன்றுகிறது. எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்று இது.
மனித மனம் ரொம்பவும் விசித்திரமானது.
நிதர்சனம் என்று தெரிந்தாலும் நமக்கு இது இல்லை என்றே எண்ணும்!
LikeLike
அற்புதமான பதிவு.
LikeLike