‘ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்…….” என்று நண்பர் ஒருவரது கைத் தொலைபேசியில் ஒலிக்கும் அவரை கூப்பிடும் போது . சட்டென்று நம் மனதில், ஒட்டிக் கொள்ளும் புத்துணர்ச்சி….
“அட, ஆமாம் . எதுவுமே சாத்தியம் தானே என்று தோன்றும்…. “
அந்த பாடல் வரிகளுக்கு அவ்வளவு கனம்
நம் வீட்டு பில்டர் காப்பியை விட பெரிசா ஒண்ணும் நன்றாக இல்லை என்று என் உறவுக்காரர் ஒருவர் சொல்வார்…
இருக்கலாம் ஆனால், இன்றைய தலைமுறை, விரும்பிச் செல்லும் இடமாகவும், விரும்பிக் அருந்துவதுமாக இருக்கிறது காப்பி.
அதான் , Cafe Coffee Day ..
எனக்கும் பிடிக்கும் அங்கே போய் காப்பி குடிப்பதற்கு…..
நல்ல சூழ்நிலை. நுரை பொங்கும் cappuccino காப்பி…நம்மோடு அதை அனுபவிக்கும் நண்பர்கள், உறவுகள்….
மனதுக்கு நல்ல புத்துணர்ச்சி தருகிறது….
எல்லாவற்றையும், சீ இது சரியில்லை, இது மோசம், என்ன வேண்டியிருக்கு என்கிற மனோபாவத்துடன் பார்க்காமல்….
ஒரு தடவை ருசித்து பார்ப்போமே, ரசித்து பார்ப்போமே, என்கிற கண்ணோட்டம் வேண்டும் வாழ்க்கையில்.
அப்பிடித்தான், அவசரமாக, ஒரு” டேக் அவே ” ( முன்னாடி இது ‘பார்சல் ” ) காப்பி ஒன்று வாங்கப் போனேன் இருதினங்களுக்கு முன்.
CCD யின் கதவை திறந்துக் கொண்டு சென்று, கவுன்டரில் இருந்த பையனிடம்,
“ஒன் கப்புச்சினோ ரெகுலர் டேக் அவே என்றேன். “
” கீழே பாருங்கள் என்று கையை காட்டினான்….”
கீழே மெனு கார்ட் இருந்தது….
” இல்லை வேண்டாம் ” என்று கூறிவிட்டு, என் ஆர்டரை மீண்டும் கூறினேன்.
சைகையால், தனக்கு காதும் கேட்காது, வாயும் பேசாது என்றான் அந்த பையன்.
எதிர்பாராததால், ஒரே ஒரு க்ஷண நேரம் திகைத்தாலும், என்னை சுதாரித்துக்கொண்டு,
ஓ ஓகே , என்று கூரிவிட்டும் மெனு கார்டில், எனக்கு வேண்டியதை சுட்டி காட்டி, சின்ன கப் என்பதை சைகையில் காட்டி, டேக் அவே என்பதையும் சைகையில் காட்டினேன் .
ஐந்து நிமிடங்களில் ஆவியுடன் காபி என் கைகளில்…
ஒரு நிமிடம் என்று சைகை செய்த மற்றொருவன், மும் பக்கம் ஓடி வந்து, சக்கரை பொட்டலங்களும், டிஷ்யு பேப்பர், காபியை கலக்குவதற்கு ஒரு சின்ன குச்சியும் எடுத்து கொடுத்தான்…..
சாதரனமாக, ஆட்டோ காரர்கள், முகம் சுளிக்காமல், சில்லறை கொடுக்கும்போதும்,
ஹோடேல்களில் செர்வர்கள் நாம் சாப்பிட்ட தட்டை எடுக்கும்போதும்,
பெட்ரோல் பங்க்கில் என் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேன்க் மூடியை திறக்க உதவும் போதும்
ஏன், நான் ரோடை கிராஸ் பண்ணும்போது, வண்டியை நிறுத்தி ‘போங்கள் ‘ என்று சைகை செய்யும் முகம் தெரியாத மனிதருக்கும். கூட நன்றி சொல்ல மறக்காதவள்,
இந்த பையனை சும்மா விடுவேனா?
என்னுடைய அடையாள புன்னகை ஒன்றை வீசிவிட்டு…..( அவனுடைய confidence குடுத்த உற்சாகம் )!
thank you ……… என்று கூறிவிட்டு வெளியே வந்தேன்…..
லொட லொட என்று பேசுபவர்கள் மத்தியில் ( பேசுவது பாதிக்கு மேல் அபத்தம், மற்றவர்களின் குறை காணல் , தற்பெருமை, மற்றவரை புண் படுத்துவது )
உயர்ந்து நின்றார்கள் இந்த இருவரும் .
அவர்களின், தன்னம்பிக்கை என்னை அசத்தியது.
அவர்களை வேலைக்கு வைத்த நிறுவனமும் என் பார்வையில் உயர்ந்தது .
சின்னதாக ஒரு பின்னடைவு வந்தாலே, கப்பல் மூழ்கினாற்போல் துவண்டு விடுபவர்கள், இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை வாழ்வதற்கே.
யாருக்கும் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை…கிடைத்தாலும் அதன் மதிப்பு நமக்கு தெரிய போவதில்லை….
போராட்டங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை..
எதி நீச்சல் போடுங்கள்,
கரடு முரடான பாதைக்கு பிறகு concrete போட்ட ரோடு வரும் என்று நம்புங்கள்…..
நம்பிக்கை தான் எல்லாம் ( நகைக் கடை விளம்பரம் அல்ல !!!!)
நிலா பேசுவதில்லை
அது ஒரு குறை இல்லையே….
குறை அழகென்று கொண்டால்
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே……
கவிஞர் வைரமுத்துவின் நெஞ்சை மிக மிக ஆழமாக தொட்ட, கண்களில் நீர் முட்டச் செய்த, ஆத்மா திருப்தி அளித்த…..வரிகள்…..
உங்கள் இந்த பதிவை படித்தவுடன் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் தான் நினைவுக்கு வந்தது.
நானும் உங்களைப் போலத்தான். எங்கு போனாலும் நன்றி சொல்லாமல் வர மாட்டேன். இப்போது நன்றியுடன் கூட இனிய புத்தாண்டு வாழ்த்துக்களையும் சொல்லுகிறேன்.
அதேபோல சிறப்பு நாட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கும் வாழ்த்து சொல்லிவிட்டுத் தான் வருவேன்.
வைரமுத்துவின் விசிறியா?
LikeLike
ரைட் … அருமையான பாடல் நீங்கள் குருப்பிட்டுருபது.
ஆமாம் ரஞ்சனி வைரமுத்து அவர்களின் விசிறி தான்
LikeLike
மனதில் பதியும்படி ரொம்ப அழகாயிருக்கம்மா உன்பதிவு.
நீச்சல் கற்காமலேயே எதிர் நீச்சல் போட பெண்கள் கற்றுக்கொண்டு விடுவார்களம்மா. ஸாரி,தேங்க்யூ வெல்லாம்
சிலருக்கு சேப்டர் க்ளோஸ் செய்யவும் மிக்க உதவுகிரது. எங்கம்மா உன்னைக் காணோமே என் வலைப்பூவில்?
என் வீட்டு நம்பர் 26334966. இது. முடிந்தபோது பேசவும்.
அன்புடன்
LikeLike
Nice one. In fact most of us miss this point of thanking someone as well as we talk too much. . Reading such article works as reminder to me
LikeLike
adeyappa enna azhagana varthaigal – thank you anu – thuvandu pogum podu gnabhaga paduthika oru post! love prabha
LikeLike
Thsnks prabha … Such connents r very motivating …. Will def let u know about chsrity shawls !!! When u have tine u cab start making
LikeLike
Super etho solanumnu thonarthu nirya padikanum intha mathiri
LikeLike