கணக்கும், கடுக்காயும்…….

கணித மேதை ராமானுஜமும் நானும் என்ற தலைப்பில் எழுதவேண்டும்a என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதி விட்டார்கள்……

www.ranjaninarayanan.wordpress.com

அவர்களின் ஒவ்வொரு வரியும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும், நான் பேசிக்கொண்டிருந்ததாகவும் இருந்தது !!!!

என்ன ஆச்சர்யம் இப்பிடிக் கூட ஒருவருடன் ஒருவர் எண்ணங்களில் ஒற்றுப் போக முடியுமா என்ன…

இருந்தாலும், என் கண்ணோட்டத்தில் அதே தலைப்பில் எனது எண்ணங்களை வெளியிட நினைத்தேன்.

ஆக பின் வரும் வரிகளில், எனது எண்ணங்கள் ….

ராமானுஜமும் நானும்……

எனக்கும் அவருக்கும் எட்டாத தூரம்……

அவர் மேதை…………. நான் பேதை…..

இருந்தாலும் அவரை பார்த்தும் அவரை பற்றி படித்தும் வியந்து போயிருக்கிறேன்.

கணக்கு ஏனோ என்னோடு நட்பு பாராட்ட மறுத்தது. ( மத்த பாடங்கள் என்ன வாழ்ந்தது என்று கேட்காதீர்கள் ) !!!!

ஆங்கிலம் மட்டும் பாசம் மேலிட ஈஷிக்கொண்டது……!!!

நான் தமிழை காதலித்தேன்…. !!!

எஞ்சியது, அறிவியல், பூகோளம், சரித்ரம்……அவை தூரத்து பங்காளிகள் போல் பட்டும் படாமலும் உறவு கொண்டன என்னிடம்…!!!!

கையே ஆயுதம் என் அம்மாவுக்கு … டீச்சர் வேறு…வலது கை பழக்கமுள்ளவர் தான் என்றாலும், நான் இடது கை பக்கம் உட்கார்ந்திருந்தாலும், செம்மையாக அடி வாங்குவேன்…அவ்வளவு சமத்து பாடம் படிப்பதில்…..

பாவம் எவ்வளவு பாடு பட்டார்கள் என்னோடு என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.

ரொம்ப எதிர்ப்பார்ப்பு… ஈடு கொடுக்க என்னால் முடிய வில்லை.

நானும் எவ்வளவோ போரடிப் பார்த்தேன்.

statement sumsல் கணக்கு புரியும், போடத் தான் வராது…..

குட்டும், அடியும், ஒரு ஸ்டேஜுக்கு மேல் பழகி / மரத்து போனது….

அப்பா மட்டும், என்னையும் அம்மாவையும் ஒரு சேர சமாளிக்கப் பார்ப்பார்….

கொஞ்சம் கவனிச்சு படி என்று என்னையும்,

போனா போட்டம், அதுக்கு புரியராப்ல கொஞ்சம் மெதுவா சொல்லிக்கொடு என்று அம்மாவையும் சமாதானப் படுத்துவார்….

திக்கித் தடுமாறி, பத்தாவது …………………….fail ஆனேன்… ஆனால் கணக்கில் இல்லை.. அறிவியலில்….. ( கூத்து தானே….)!!!

சீ…. வெக்கமாயில்லை ? என்று கேட்கிறீர்களா …?

“இல்லை ” என்று பளிச்சென்று சொல்வேன்….

என் வெட்கப்பட வேண்டும்….

வாழ்க்கை ஒன்றும் அன்று முடிந்து விட வில்லையே….

அது ஒரு சின்ன சறுக்கல் …. அவ்வளவு தான்…

சறுக்கினால் என்ன உயிரா போய் விடும் ?

திரும்ப எழுந்தால் போச்சு….

சிம்பிள் ……

அப்படித்தான் நானும் எழுந்தேன் …வெறியுடன் படித்தேன்… ஒரு வருஷம் போனது போனது தான் ….ஆனால் முழு மூச்சுடன் படித்து 70% வாங்கினேன் அறிவியலில்…..

11வதில் அறிவியல் பாடம் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள் என் பள்ளியில்…..

‘அடக் கடவுளே, ஏதோ மார்க் வாங்கி விட்டேன் என்பதற்காக அறிவியலை தொடரச் சொல்கிறார்களே ” என்ற கவலை…

வேண்டவே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு commerce பக்கம் வந்தேன்…

அங்கேயும் கணக்கு…..

சரி காசிக்கு போனாலும் , பாவம் விடாதா…. என்னவோ சொல்வார்களே… அதை போல், என்னை கணக்கு அனகோண்டா பாம்பு போல் சுற்றி அழுத்தியது……

12இல் பொது பரிட்சையின் போது கண்ணீர் மல்க எழுதிக்கொண்டிருந்தேன்…….

கணக்குக்கு பிரியா விடை கொடுக்கும் தருணம் அல்ல….

ஒரு மண்ணும் தெரியவில்லை …அதனால்…..

எனக்கு அன்று வந்த மேற்பார்வையாளர் கண்களில் பரிதாபம் ….

ஏதோ என் அப்பா அம்மா செய்த புண்யம், மூதாதையர்கள் ஆசீர்வாதம், 72 மார்க் வாங்கி தப்பித்தேன்……70 பாஸ் மார்க்…..

அன்று போட்டேன் ஒரு முழுக்கு…….

பின் ஆங்கில இலக்கியம்…..முடித்து, கழுத்தை என்னவருக்கு நீட்டினால்….தெரிந்த, கணக்கு புலிக்கு நீட்டியிருக்கிறேன் கழுத்தை என்று…..

வேண்டாத தெய்வமில்லை….XX XY க்ரோமொசோன்கள் நல்ல படியாக வந்து, என் சந்ததிகள் கணக்கில் புலியாகவும், சிறுத்தயாகவும், இருக்க வேண்டுமே என்று….

என்னவரோ வாயாலேயே பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய கணக்கெல்லாம் நொடியில் போடுவார்… வாய் பொளந்து கொண்டு பார்ப்பேன்.

ரசிப்பது தப்பில்லையே….எனக்கு நல்ல ரசனையுண்டு….!!!!!

இன்று வரை…எந்த சின்ன கணக்கு போட வேண்டும் என்றாலும், போட்டு விட்டு….’ சரிதானே ‘ என்று என்னவரிடம் ஒரு அப்ரூவல் வாங்கி கொள்கிறேன்…

மளிகை சாமான் வாங்கினாலும், காய்கறி வாங்கினாலும், கரெக்டாக சில்லறை வாங்கி வந்துவிடுவேன்…..

அப்பா என்ன ஒரு மேதை என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது….கணக்கு இல்லேனா வாழ்க்கை இல்லை என்று சொல்வது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது….

என் செல்வங்களில் ஒன்று கணக்கில் என்னை கொண்ட போது , உணர்ந்து, அவளுக்கு உற்சாகம் அளித்து, கணக்கு இல்லாத க்ரூப் எடுத்து படிக்க வைத்து,

சில பல ஏசல்களுக்கு பாத்திரமாகி …..உன்னைபோலவே அவளையும் ஆக்காதே…. என்று கூரினவர்களுக்கு மத்தியில்,

அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று தோன்ற…அவளுக்கு பிடித்த பாடத்தில் சேர்த்துவிட்டேன்….

ஒரு கஷ்டமும் இல்லாமல் படிக்கிறாள் ….

என்னமோ …. யோசித்துப்பார்த்தால், கணக்கோ ஆங்கிலமோ அறிவியலோ….. எதில் புலியோ, பூனையோ… நல்ல மனிதனாக இருக்க வேண்டும் முதலில்….

தைரியம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,

வெற்றியின் முதல் படி தோல்வி….. என்பார்கள்..அப்போ மற்ற படிகள் வெற்றிப் படிகள் தானே… ( இந்த கண்ணோட்டம் ரொம்ப முக்கியம்….. )

எத்தனை முறை விழுகிறோம் என்பது பெரிதல்ல, விழுந்த பின் எழுந்திருக்கிரோமா என்பது தான் கேள்வி…

இவை எல்லாவற்றையும் தாண்டி நமக்கென்று ஒரு வாழ்க்கை கடவுள் வடிவமைத்துள்ளான் என்ற நம்பிக்கை வேண்டும்…..

நமக்கு வராததை பிடித்துக்கொண்டு, மாங்கு மாங்கு என்று போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வருவதில், திறமையை காட்டலாமே….

ராமானுஜருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்……..

13 responses to “கணக்கும், கடுக்காயும்…….

  1. good post anu, co incidentally My next is abt education vs knowledge. 🙂 great minds and great friends think alike. Many of us are under delusion that if we are not good in math, we are good for nothing. There are other areas of brain waiting to be exlplored/used . 🙂 🙂

    Like

  2. கற்றோரை கற்றோரே காமுறுவர் – கணக்கு வராதவர்களின் கஷ்டம் கணக்கு வராதவர்களுக்கே தெரியும், இல்லையா?

    எப்படி நம் இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்கள் அமைந்தன என்ற ஆச்சரியப் பட்டு இருக்கிறீர்கள். என்னுடைய ஆச்சர்யம் நம் இருவரின் துணைவர்களும் கணக்கில் – மனக் கணக்கில் புலியாக இருப்பது!

    பரீட்சையில பெயில் ஆகிவிட்டால் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் அனைவருக்கும் நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் போய் சேரவேண்டும்.

    //நமக்கு வராததை பிடித்துக்கொண்டு, மாங்கு மாங்கு என்று போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வருவதில், திறமையை காட்டலாமே….//

    உங்களின் கூற்றை வழி மொழிகிறேன்.

    என் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதில் என் பதிவுக்கு இணைப்பு (hyperlink) கொடுத்துவிடுங்கள். உங்கள் பதிவை படிக்க வருபவர்கள் என்னுடைய பதிவையும் படிப்பார்கள்.

    Like

    • அருமை அருமை அருமை…. கொடுத்துவிட்டேன் உங்களது வலைதளத்தின் முகவரியை…..
      நீங்களும் என்னுடையதை கொடுக்கலாமே…..உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்.

      Like

  3. அனு,
    பதிவு இரண்டுமுறை திரும்பத் திரும்ப வந்திருக்கிறது. சரி செய்யுங்கள்.
    தோழி என்று என்னைக் குறிப்பிட்டது அளவில்லா ஆனந்தத்தைக் கொடுக்கிறது!

    Like

  4. உங்கள் பதிவுக்கு என் தளத்தில் இணைப்புக் கொடுத்திருக்கிறேன்.

    Like

  5. ”..கற்றோரை கற்றோரே காமுறுவர் – கணக்கு வராதவர்களின் கஷ்டம் கணக்கு வராதவர்களுக்கே தெரியும்–”

    உங்களோடு என்னையும் சேருங்கள். மதமட்டிக் புரியலை மாமா கேட்டார் ஏன் புள்ளி குறைவு என்று. ( இவர் இந்தியன் பி.ஏ. )
    எனக்கு படிப்பிக்கையில் ஒன்றும் புரியலையே என்றேன். எல்லாம் கேடடு முடிந்து அடுத்த நாள் எனக்கு தெரியாமலே கல்லூரி அதிபரிடம் வந்து விளாசியிருக்கிறார்.
    (ஏதோ தன் மருமகள் பெரிய திறமைசாலி என்று) இதன் பிறகும் இது எனக்கு வரவே இல்லை. இது நிற்க – தோழிகள் இருவரும் ஒரே மாதிரி நகைச்சுவையாக எழுதுகிறீர்களே! என்னே ஒற்றுமை!
    ரஞ்சனியின் பதிவு மூலம் வந்தேன்.
    பதிவு சுவையாக இருந்தது. வாழ்த்து அனு.

    Like

  6. தைரியம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,

    வெற்றியின் முதல் படி தோல்வி….. என்பார்கள்..அப்போ மற்ற படிகள் வெற்றிப் படிகள் தானே… ( இந்த கண்ணோட்டம் ரொம்ப முக்கியம்….. )

    அருமையான பாடம் ..!

    Like

  7. அனு,
    உங்கள் பதிவு அருமையாக இருந்தது.
    எத்தனை நிதர்சனமான உண்மைகளை அழகாக எழுதிவிட்டீர்கள்.
    பரீட்சையில் ஃப்ர்ஸ்ட் வருவதுதான் வாழ்வின் ஒரேகுறிக்கோள் என்று எவ்வள்வு பெற்றோர் நினைக்கிறார்கள் தெரியுமா?
    தோல்வியைத் தாண்டும் மனப்பக்குவம் அருமை!அருமை!
    ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியையாய் உங்களுடைய மனப் பக்குவத்திற்கு பாராட்டுக்கள்.
    பதிவிற்கும் தான்.
    ராஜி

    Like

    • கண்டிப்பாக.. பாதிக்கு மேல் பெற்றோர்களின் அழுத்தத்தில் தான் குழந்தைகள் தற்கொலை முயற்சிக்கிறார்கள்….இது போனால் அடுத்தது என்று தைரியமூட்ட தவறக் கூடாது..

      நன்றிகள் பல …அடிக்கடி வாருங்கள் என் எழுத்துக்களை படிப்பதற்கு

      Like

  8. I would say the main reason children start disliking maths is that Maths is the only subject where there is a continuity in every level (class) as one goes to higher standards. All other subjects being text/theory, it is possible to understand without any difficulty. In the case of Maths, if the student did not pay attention during younger years, s/he will find it difficult when they go to higher classes, as all those basics will have to be applived to solve the problems at higher classes. Also, since this fact is not known to many adults/parents/students, generally maths is neglected at lower classes (where the basics are being taught) by many students. Added to the fact is peer pressure, even an average student good at maths can listen to the “fear of maths” (as though it is a GHOST) from his/her friend who is weak in maths and neglect maths. Generally, parents/student start to realise that maths is important during 8/9th class and it is definitely late. It is not possible to go back 8 years of learning again, so what happens then, some student manage struggle somehow and get a passmark, some other students escape by going away from maths and rest of others fail. Basic Maths is the only subject next to language which is required for everyone – as one has to keep / take care of one’s accounts like income/ expenses/ savings/ investments etc…………….

    Like

பின்னூட்டமொன்றை இடுக