புத்தாண்டு வாக்குறுதிகள்

images-1புத்தாண்டு வாக்குறுதிகள்…..நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளும் ஒன்று தான்…

ஆனால் கடைபிடிக்கிறோமா, இன்னும் சொன்னால் தாக்குப்பிடிக்கிரோமா என்றால்…..
ம்ம்ம்ம் …… என்று இழுப்போம் ….
ஆனால் அந்த டிசம்பர் கடைசி இரு தினங்களில், கண்டிப்பாக நினைவிற்கும் வந்தும் லிஸ்ட்டும்  போடுவோம்…… கடைபிடிக்காவிட்டால் என்ன, எண்ணமாவது  வந்ததே….
இன்று காலை செய்தித் தாளிலும் இந்த  விஷயம் வந்ததால்…. சிந்தித்துப்பார்க்க தோன்றியது…
நமது, பர்சனல் வாக்குறுதிகளை தாண்டி, யோசித்துப் பார்த்தல், நிறைய இருக்கிறது….
1.  நான் தினமும், தொலைக் காட்சி பெட்டியை சுவற்றில் இருக்கும் சுவிட்சில் அணைப்பேன் 
ரிமொடினால் அணைப்பதால், மின்சாரக் கசிவு இருந்துக்கொண்டே தான் இருக்குமாம்….
அதனால் இரவு படுக்க போகும் முன்பாவது, அணைத்துவிட்டு படுக்கலாமே…நமது கரண்ட் பில்லில் கணிசமான தொகையை குறைக்க உதவும்.
2. 100% சார்ஜ் ஆகா தேவையான அளவு மட்டுமே, எனது கைதொலைபேசியை சார்ஜ் செய்வேன் ….
சார்ஜில் போட்டு விட்டு தூங்கிவிடுகிறோம்….இதுவும், கரண்ட் கசிவு போலத் தான். வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை விட, நமது கை தொலைபேசி அதிகமாக கரண்ட் சாப்பிடுமாம்.
3. கெய்செர் …வெந்நீர் தரும் சாதனம்…....
பத்து நிமிடங்கள் மட்டுமே, போட்டுவிட்டு, அணைக்க முயலாமே……..வாளியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு குளிப்பதும் உதவும்….
இல்லையென்றால், சோப்பு போடும் போது, ஷவரை மூடி வைக்கலாம்.
( இதனால் தண்ணீர் சுட்டு, உங்கள் உடம்பை பதம் பார்த்தல் அதற்க்கு நான் பொறுப்பல்ல )
4. லிப்ட் ….(இதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா ?)
எனது குடியிருப்புக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது, படியில் ஏறிச் செல்வேன், இதனால், மின்சாரமும் மிச்சமாகும், உடம்பும் சிக்காகும்……( என்ன ஒரு ரைமிங் )!!!
நான்காவது மாடிக்கு கீழ் குடியிருப்பவரானால், ஒரு போதும் லிப்ட் உபயோகிக்காதீர்கள் !!!
உங்களை நீங்களே நேசிக்க தொடங்குவீர்கள்….. அவ்வளவு, அழகாக இருப்பீர்கள் உடம்பு தெம்பாக இருக்கும் போது .!!!!
5. தண்ணீர், தண்ணீர்,……..
பல் தேய்க்கும் போதும், சவரம் செய்யும்போதும், குழாயை மூடிவிடுங்களேன்…..
துணி கையால் துவைப்பதானால்…. சிக்கனமாக தண்ணீர் உபயோகிக்கவும்….
துணி துவைத்த நீரை, பாத்ரூம் தரையை கழுவுவதற்கும், flush  செய்வதற்கும் கூட பயன்படுத்தலாம்…..
6. SMS …..குறுஞ்செய்தி ……….
ஒருவரை தொலை பேசியில் அழைப்பதற்கு முன்பு, அந்த விஷயத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தால் போதுமா / பதில் பெற்றால் போதுமா என்று எண்ணி விட்டு, செயல்படுங்கள்.
உங்கள் கைத்தொலை பேசியின் பில் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இவை தவிர,
எண்ணை  பதார்த்தங்கள் சாப்பிடுவதை, கணிசமாக குறைதுக்கொள்வேன்,
வெளிச் சாப்பாட்டை குறைத்துக்கொள்வேன்,
இனிப்பு குறைப்பேன்,
தினமும், நடை பயிற்சி மேற்கொள்வேன்,
வெயிட் குறைய பாடு படுவேன்…….( நாம் படுவதை படுவோம், ஒரு வேளை, வெயிட்டும், உறுதி எடுத்துக்கொள்கிறதோ என்னவோ …..” குறையமாட்டேன் ” என்று )!!!!
எல்லோரிடமும் அன்பாக பேசுவேன், நடப்பேன்……
தினமும், அரை மணி நேரமாவது, நல்ல புத்தகங்களை படிப்பேன்…..
நேரத்திற்கு, மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்வேன், அலட்சியப்படுத்த மாட்டேன்…….
எனக்கு  தோன்றியவற்றை பட்டியலிட்டுள்ளேன்……
உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்களேன்…..
எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 

8 responses to “புத்தாண்டு வாக்குறுதிகள்

  1. Best thing is not to take any resolutions on the first day of the new year bcz we will feel bad if we fail to follow the resolutions. Live the life as it comes and use your discretion with the use of modern gadgets. Moreover, we can’t be taking resolutions year after year.

    Like

  2. nee chonna resolutionsla 50% apne aap nadakum enna enga oorla power water irandume shortage rest things apne aap nadakkum so no problem

    Like

  3. அனு,
    இந்த தடவை நீங்கள் என்னை முந்திக்கொண்டு விட்டீர்கள்!
    இப்போது நான் வேறு ஏதாவது தேற்றவேண்டுமே!

    Like

    • ஹா ஹா ரஞ்சனி எழுதும்போது தோன்றியது….அதனாலென்ன உங்கள் கண்ணோட்டத்தை படிக்க ஆவலாயிருக்கு

      Like

    • நமக்குத்தான் கொஞ்சம் நட்பானவுடன் நெக்குருகி அடுத்த நாளே காலை சிற்றுண்டியுடன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் குணமாயிற்றே

      I was amazed to read the above lines written by you

      ஐயோ! நீங்களும் என்னை மாதிரியே இருக்கிறீர்களே!!!!
      டூ மச்!!!!!

      Like

  4. அநு எழுதியிருப்பதில், எத்தனைபேர் எவ்வளவு கடைபிடிப்பார்கள் என்ற ஒரு ஸர்வே செய்யணும். கேட்கலாமே தவிர சொல்வார்களா?

    Like

  5. New year resolutions எடுக்கிறோம் ஆனால் பின் பற்றுவதில்லை.
    எப்படி பின் பற்றலாம் என்பதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
    நன்றி பகிர்வுக்கு.

    ராஜி

    Like

பின்னூட்டமொன்றை இடுக