இன்றும் என்றும்

எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…..

கோவிலுக்கு சென்று வந்தீர்களா ?

நல்ல துடக்கமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

மக்கள் யாவரும், ஒருவருடன், ஒருவர் அன்புடனும், நட்புடனும்  பொறுமையுடனும், வாழ வேண்டுவோம்.

வீட்டில் எல்லோருடனும், நட்புடனும், அன்யோன்யதுடனும் பழகுவோம்….

உடல் நலத்திற்கு முக்யத்துவம் கொடுப்போம், வருடாந்திர செக் அப் செய்யவேண்டியதை நேரத்திற்கு செய்வோம். அலட்சியப் படுத்தாதீர்கள்.

முடிந்தால், ஒரு குழந்தைக்காவது, இலவசமாக, பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

நேரத்தை திட்டமிட்டு, செயல் படுத்தலாம்.

ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த ஒருவர் வாரம் ஒரு முறை மௌன விரதம் இருப்பார்…..( அரை  நாள் கூட முடியுமா என்னால் என்று தெரியவில்லை.)ஆனால் இருந்தால் எனக்கும் நல்லது, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதோ என்னமோ !!!!!மௌன விரததன்று இங்கு வலைபதிவில் கொட்டித் தீர்க்க வேண்டியதுதான். !!!!!!!!!!!!!!!!!!!!!

தினமும் சிறிது நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, இந்த ஆண்டில், தன்னம்பிக்கையுடனும், தைர்யத்துடனும், மன உறுதியுடனும், இருந்து, நமக்காகவும்,பிறர்காகவும் வாழ்வோமே..!!!!!

 

 

 

 

 

 

11 responses to “இன்றும் என்றும்

  1. new year greetings to you and your loved ones, anu!

    warm regards prabha

    Like

  2. Happy New year !!!!!

    Like

  3. athodu mukyamaana letter anuppavendi irundhaal adhai udanadiyaaga anuppa vendum. Edhayum plan panni pannanum ! (Veettu peyar matram seyyavendiya kadidhathaithan ninaivupaduthukiren)

    Like

  4. நானும் இந்த வருடம் ஆரோக்கியத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க இருக்கிறேன்.
    இரவு பத்து மணிக்குத் தூங்கி ஐந்து மணிக்கு எழுந்து விட வேண்டும் என்று முதல் தீர்மானம். இன்றைக்கே காற்றில் பறந்து விட்டது!
    ஒரு பெண் குழந்தைக்காவது இலவசமாகப் பாடம் சொல்லித் தர வேண்டும் என்று மாற்றிக் கொள்ளுங்கள் அனு.
    எல்லாத் தீர்மானங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்!

    Like

  5. indrum endrum fine very imp. health checkup i decided enda aasaiyum kidayadu if i get any thing ok if not no loss

    Like

  6. ”…எனக்கு தெரிந்த ஒருவர் வாரம் ஒரு முறை மௌன விரதம் இருப்பார்…..( அரை நாள் கூட முடியுமா என்னால் என்று தெரியவில்லை.)ஆனால் இருந்தால் எனக்கும் நல்லது, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதோ என்னமோ !!!!!மௌன விரததன்று இங்கு வலைபதிவில் கொட்டித் தீர்க்க வேண்டியதுதான். !!!!!!!!!!!!!!!!!!!!!”

    சகோதரி அனு! நல்ல புத்தாண்டுத் தீர்மானங்கள்!
    முயற்சிப்போம் நல்ல மனிதர்களாக.
    இனிய 2013 புத்தாண்டு வாழ்த்து.
    சகல சம்பத்துகளும் நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    Like

  7. அனு உனக்கும்,உன் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.. போன் நம்பர் எழுதிவைத்தது.கிடைக்கலே. திரும்பவும் உன் நம்பர் கொடுக்கமுடியுமா?
    நல்ல தீர்மானங்கள். நன்ராக எழுதியுள்ளாய். தைரியத்துடனும்,
    மன உறுதியுடனுமிருந்து, திரும்பத்,திரும்ப மனதில் ஏற்றிக்-
    -கொள்கிறேன். ஸரியான வார்த்தை.

    Like

  8. 2013/1/17 Prabha Chakravarthy

    > hi > > i had somehow missed reading the blog on maths. Just read it and loved it. > Sorry am not able to identify with the feelings, but recognize them as my > daughters, both of them, were vary of continuing with maths beyond class > 10. Having enjoyed maths in school, i could never understand their fear. > However, all said and done, it is important to be a good person, that is > what counts in life. > > Also, wanted to tell u that i liked the multi color shawl u made for the > lady in the old age home.. Next time u send something, give me a couple of > days warning, and I will try to make something n give u, for those ladies. > > love > Prabha > > >

    Like

பின்னூட்டமொன்றை இடுக