உலக பெண்கள் தினம்……
ஒரு சிறு இடைவெளிக்கு பின்பு, மீண்டும் எழுத வேண்டும் போல் இருந்த போது, என் இந்த நன்னாளில் எழுத கூடாது என்று தோன்றியது.
மகள், சகோதரி, மனைவி, அம்மா, என பல வேடங்கள் …
எல்லாவற்றையும் செவ்வனே செய்யத்தக்க நேர்த்தி,
எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ள கூடிய பரிவு,
நேற்றைய குழந்தை மனப் பெண்ணாக
இருந்த போதும், இன்றைய நவ நாகரீக நங்கையாக இருக்கும் போதும், தன பொறுப்புணர்ந்து, செயல் படுபவள்,

இல்லறத்தையும் பணி புரியும் இடத்தையும், மிக அழகாக சமாளிப்பவள்,
தசாவதானி ….
அதற்க்கும் மேலும் கூட செய்ய கூடியவள்
ஒரே சமயத்தில் இளகின மனமுடயவளாகவும், எந்த சந்தர்ப்பத்தையும் தைர்யமாக எதிர் கொள்ள கூடியவளுமாக இருப்பவள்.
தன அன்பால் எல்லோரையும் கட்டிப்போடக் கூடியவள்.
நம் ஒவ்வொருவரையும் இந்த உலகுக்கு கொண்டு வந்த நம் தாய்க்கு நன்றி சொல்லி,
தாய்மையை போற்றுவோம்,
நம் சகோதரிகளையும், மனைவியையும், மருமகளையும், மகளையும் நேசிப்போம்……
மகளிர் தின வாழ்த்துகள்!
LikeLike
உன்னைக் காணோமே போன் செய்வோம் என்று நினைத்தேன்.. வாவா,மகளிர்தின வாழ்த்தோடு
வந்துள்ளாய். ஸந்தோஷம். அன்புடன்
LikeLike
good reentry, happy womens day, write more
LikeLike