உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒரு காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் …. என ஒவ்வொரு பெண்ணும் நோன்பு நூற்று கொண்டிருப்பாள்..
நல்ல கணவன் வாய்க வேண்டும் என்று கன்னி பெண்களும்,
கிடைத்த கணவன் நன்றாகவும், இந்த அன்பான உறவு, எல்லா ஜென்மத்திலும் வாய்க்க வேண்டும் என்று மணமான பெண்களும் வேண்டியிருபார்கள்.
சில எடக்கு ஜென்மங்கள்,
” ஐயோ இதே மனுஷனா வேண்டாம்ன்டா சாமி ” என்று சொல்பர்வர்களும் உண்டு.
ஏதோ ஒன்று, கிடைக்கப் போகும் உறவை பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும்.
கிடைத்த உறவை, உயிரினும் மேலாக போற்ற வேண்டும்.
அது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல என்பது எனக்கும் தெரியும்.
இருந்தாலும் முயன்று பார்க்கலாமே
எந்த உறவு தான் சுலபமானது?
எல்லா உறவுகளிலும் உரசல்கள் இருக்கும்… அந்த உரசல்களை ரணமாக்கி புரயோடிபோகும் வரை கொண்டு செல்வதா
அல்லது
மெலிதாக மயிலிறகால் வருடிக்கொடுத்து ஆற்றுவதா என்பது நம் கையில் உள்ளது.
இதே கணவன் வேண்டும் என பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
எப்பிடி இருக்கிறீர்கள் என்று கேட்டால் சிலர் சொல்வார்கள்….
“ஏதோ பத்துக்கு அஞ்சு பழுதில்லாமல் போய்க் கொண்டிருகிறது “என்று…
அது போல, பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத வரை, சரிதான்.
அதற்காக, உடலாலும், மனதாலும் துன்புறுத்தும் கணவனை கட்டிக் கொண்டு அழச் சொல்லவில்லை.
கல் ஆனாலும் கணவன்….. இதெல்லாம் வேறு கதை.
முயன்று பார்த்து முடியவில்லை என்றால், அந்த உறவை எட்டி உதைத்துவிட்டு வரவும் நாம் தயாராக இருக்க வேண்டும்
அதற்க்கு முதலில், நல்ல கல்வி வேண்டும்,
மனதில் உறுதியும் தைரியமும் வேண்டும்….
தன்னம்பிக்கை வேண்டும்
உறவுகளை காப்பது நம் கையில் தான் இருக்கிறது – அருமையாச் சொன்னீங்க!
பத்துக்கு அஞ்சு பழுதில்லாமல் இருக்கு என்ற பதிலே எனக்குப் பிடிக்காது, அனு. நன்றாக இருக்கிறேன் என்று மனசு நிறைந்து சொல்லலாமே, அதிலேயே நம் மனசும், கேட்கிறவர்களின் மனசும் நிறைந்து போய் விடாதா?
தாமதாமான காரடையான் நோன்பு வாழ்த்துகள்!
LikeLike
சரிதான் ரஞ்சனி
ஆனால் சின்ன சின்ன தோல்விகளுக்கும், சறுக்கல்களுக்கும் கூட, நொந்தும் நூடுல்ஸாகி !!!! போய் , வாழ்க்கையே, தொலைந்து போனது போல் பதில் சொல்பவர்களை விட இவர்கள் மேல்……
ஏதோ 5 விஷயங்கள் நான்றாக இருப்பதாக உணர்கிரார்களே…..
எல்லோரும் உங்களை போலவும் என்னைபோலவும் positivitiyil ஊரினவர்கள் இல்லையே….:)
LikeLike