ஆத்ம திருப்தி

.ஆத்ம திருப்தி …….
இதை மீண்டும் இன்று ஒருமுறை நான் அனுபவித்தபோது, நான் இருந்த இடம்
அக்ஷயா டிரஸ்ட் நடத்தும் முதியோர் இல்லத்தில்…..

இன்று கணவரின் பிறந்தநாளை ஒட்டி, முதியோர் இல்லத்து வாசிகளுக்கு, ஒரு நாள் உணவுக்கு, பணம் கட்டியிருந்தோம் . அத்தோடு நின்றுவிடாமல் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடவும் அவர்களுக்கு உணவு பரிமாறவும் எண்ணி அங்கு சென்றேன்….

முதியோர் இல்லங்களுக்கு போவது எனக்கு இது முதல் தடவை அல்ல
.பல முறை சென்றாலும்’, மனதை நெருடுகிறது..
நம்மை பெற்றவர்களை, எப்படி இப்படி விட முடியும்?
நாம் குடிக்கும் கஞ்சியோ .கூழோ ஏன் அவர்களுக்கு ஊத்த முடியாமல் போகிறது
தனது சாப்பாட்டில் ஒரு பகுதியை கருவிலேயே நமக்கு கொடுக்க தொடங்கியவளுக்கு உணவளிப்பதும் அவளை பராமரிப்பதும் அவ்வளவு பெரிய கஷ்டமா..?
நம் படிப்பிற்கும், ஏனைய தேவைகளுக்கும் அயராது உழைத்த தந்தையை, உதறி விடுவது அவ்வளவு எளிதானதா?
வருங்கின்ற உபயதாரர்களை பார்த்து என்பதும் எண்பத்தி ஐந்து ம் தொட்டவர்கள் கை எடுத்து கும்பிடுவது மனதை வாட்டுகிறது …..
உங்கள் கைகள் உயர்வது என்னை ஆசிர்வதிக்க மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் கூறினேன்…..
தங்களின் பழைய கால கதைகள் ……
தாங்கள் அங்கு வந்த கதை …
புறக்கணிக்க பட்டது எப்படி…..
இவை கேட்கப்படும் போது , ”
கடவுளே, எனக்கு நல்ல புத்தி தந்தமைக்கும், நல்ல குணம் கொடுத்ததற்கும் நன்றி என்று கூறத் தோன்றிற்று…..
அழகாக வரிசையாக வந்து சாப்பிட உட்காருகிறார்கள்…..
அழகாக ஒரு பிரார்த்தினை ….
அன்றைய தினம் பிறந்தநாள் காண்பவரோ , கல்யாண நாள் காண்பவரோ , அவர் பெயர் சொல்லி அவரும் அவர் குடும்பத்தினரும் வாழ்க என்று வாழ்த்தும் போது , மனது நிறைகிறது
தங்கள் தட்டை கைவசம் கொண்டு வந்து, கீழே உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுகிறார்கள் ….

old couple

இதுல ஒண்ணு அதுல ஒண்ணு பெத்தேன் ….. ஆனால் இன்று இங்கு இருக்கிறேன் (மகன் ஒன்று மகள் ஒன்று ) என்பதை அப்படிச் சொன்னார் அந்த அம்மையார் …..
அடுத்த நிமிடமே,
இங்கு சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறவும் தவறவில்லை எதையும் நினச்சு பாகர்தில்லை என்று அந்த அம்மையார் கூறிய போது , அதில் ஒரு வலியும் வலி கற்று தந்த பக்குவமும் தெரிந்தது …..
தன் தந்தைக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற நாடு துறந்த அந்த தசரத சக்ரவர்த்தியின் கதையை நாம ராமாயணமாக அவர்களக்கு பாடிவிட்டு, என்ன ஒரு முரண்பாடு என்று எண்ணிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டேன்.

3 responses to “ஆத்ம திருப்தி

  1. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பதிவு! அதையும் மனதை நெகிழ்த்துவது போல ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மிக நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    உங்கள் கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    Like

  2. this ia the truth ANU, not only poor people even richer parents are settling down in old age home due to lack of care lot of panakkara anadaigal irukkirargal, publicla cholla mudiyadu

    Like

  3. வலைச்சரத்தில் இன்று உங்கள் தளம் அறிமுகம் ஆகியிருக்கிறது. பாருங்கள். வாழ்த்துகள்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s