பெண்ணின் கண்ணீர்….

எனக்கு மின் அஞ்சலில் வந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிரலாம் என தோன்றியது….

பெண் ஒருத்தி அழுதுக்கொண்டிருந்தாள், அவள் மகன் அவளிடம் கேட்டானாம்,

ஏன் அம்மா அழுகிறாய் என்று…
அவள் சொன்னாளாம்,
நான் ஒரு பெண் என்பதால் என்று.

எனக்கு புரியவில்லையே அம்மா என்றானாம் அவன்,
அந்த தாய் அவனை கட்டிக்கொண்டு கூறினாளாம்

உனக்கு எப்பவுமே புரியாது என்று…

அந்த பையன் அவன் தந்தையிடம் சென்று,

காரணமே இல்லாமல் அம்மா ஏன் அழுகிறாள் என்று கேட்டதற்கு,

எல்லா பெண்களுமே அப்பிடித்தான் காரணமில்லாமல் அழுவார்கள் என்று கூறினாராம் …
தன தேடலுக்கு பதில் தெரியாமலேயே, அவனும் பெரியவன் ஆனான்.

கடைசியில் ஆண்டவனை தொலைபேசியில் அழைத்து, ( அவர் நம்பர் என்ன என்று என்னை கேட்காதீர்கள்)!!!!!
ஏன் கடவுளே இந்த பெண்கள் சுலபமாக அழுதுவிடுகிரர்கள் ?
என்று கேட்டானாம்.

கடவுள் பின் வருமாறு கூறினாராம் …..

பெண்ணை படைத்தபோது, அவளை தனித்தன்மையுடன் படைக்க நினைத்தேன்….

அதனால் தான், அவள் தோள்களை படைத்த போது , அவை உலகத்தின் பாரங்கள் அனைத்தையும் தாங்கும் சக்தி உடையதாக வலுவானதாக அதே சமயம், அவள் தோள்களில் சாய்ந்தால், அது மிக மென்மையானதாக, ஆதரவு அளிப்பதாக இருக்கும்படி செய்தேன்

அவளுக்கு குழந்தை பேரின் போது வலியை தாங்கும் உடலும், பெற்ற பிள்ளை வளர்ந்து உதாசீனப் படுத்தும்போது, அந்த வலியையும் தாங்கும் மன வலிமையையும் கொடுத்தேன்.

தன குடும்பத்தினரின், பசி தூக்கம், உடல் நலக் குறைவு என்று எல்லா தேவைகளையும், அலுக்காமல் சலித்துக்கொள்ளாமல் முகம் கோணாமல், செய்து முடிக்கும் மனோ பலத்தையும் கொடுத்தேன்.

என்னால் முடியாது என்று எளிதில், கை விடாமல் கடைசி வரை முயற்சித்து பார்க்கும், உந்துதலையும் அவளுக்குள் பதித்தேன்.

தான் பெற்ற பிள்ளைகள் தன்னை உதாசீனப்படுத்தினாலும், எல்லா காலங்களிலும் அவர்களுக்கு, தன பாசத்தை மட்டுமே தரும் உன்னதமான குணத்தை படைத்தேன் .

ஒரு நல்ல கணவன் ஒரு போதும் தன் மனைவியை, துன்பப்படுத்த மாட்டான், அனால், சோதிப்பான் என்பதை உணரும் அளவுக்கு, பக்குவத்தை கொடுத்தேன் …..

கடைசியாக, அவளுக்கு கண்ணீர் என்று ஒரு விஷயத்தை கொடுத்தேன்.

அதை எப்போது, எப்படி, எங்கு உபயோகிக்க வேண்டும் என்பதை அவளிடமே விட்டு விட்டேன்….
என்று கூறினாராம் …..

பெண்கள் மனதை தொடும் தருணங்களில் எல்லாம் அந்த கண்ணீரை சிந்துகிறார்கள்
ஆத்மாவை தொடும் தருணங்களில் சிந்தப்படும் கண்ணீர், அவளது இயலாமையில் சிந்தும் கண்ணீராக, புரிந்துக்கொள்ள படுகிறது.
அழுமூஞ்சி என்ற பட்டம் வேறு….
பெண் என்பவள் ஒரே சமயத்தில் மென்மையானவளும் வலுவானவளும்

6 responses to “பெண்ணின் கண்ணீர்….

  1. Kaduvule sollittaara. Appa adhu nijammagathan irukkum. AAN Kulathai vaazhavaikka pirandha penkulame nee Vaazhga.

    Like

  2. பெண்ணின் கண்ணீருக்குப் பின்னல் இவ்வளவு இருக்கிறதா?
    தொடர்ந்து எழுதுங்கள், அனு!

    Like

  3. வணக்கம்…

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_11.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    Like

பின்னூட்டமொன்றை இடுக