படம்

அந்த 21 நாட்கள்!!!!!!!

என்ன ஒரு அழிச்சாட்டியம்…..

என்னை நானே திட்டிக் கொண்டேன்……

எழுத பிடித்திருக்கிறது, நான் எழுதுவதும் மற்றவர்களுக்கு பிடித்திருக்கிறது, இருந்தும் எழுதுவதில்லை….
இது அழிச்சாட்டியம் தானே. ?

ஓயாமல் என்னை உற்சாகப் படுத்தும் ஒரே ஜீவன் ரஞ்சனி நாராயணன்.!!!!

” எழுதுங்கள் அனு ”

என்று ஒவ்வொரு முறையும் நான் தொலை பேசியில் பேசும் போதெல்லாம் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

நேற்று கூட, வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,
‘ அதிகம் முடியாவிட்டாலும் வாரத்துக்கு ஒரு போஸ்ட் என்று ஆரம்பித்து தொடர்ந்து எழுதுங்கள் ‘ என்றார்.

ஒரு நல்ல ஆசிரியை உந்துதல் இல்லாத மாணவிக்கு உதவுவது போல, என்னை ஊக்குவிதிதார்…

இதற்க்கு மேலும் செய்யாதிருந்தால், மஹா மட்டம் என்று தோன்றியது.

அதன் விளைவு, இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருப்பது!!!!!!

அது சரி, ஆனால், நேற்று முழுவதும், ஆராய்ந்து கொண்டிருந்தேன், ஏன் இந்த, இடைவெளி?
ஏன் இந்த உற்சாகம் இல்லாமை?
ஏன் இந்த, discipline இல்லை ?

அதை சொல்லுங்கள், discipline இல்லை …………..
எதை எடுத்தாலும், தொடர்ந்து செய்வதில்லை.
ஏன் இப்படி ஆகிறது…..

consistent ஆகா செய்ய மாட்டேன்கிறாய்……
என்னவரின் புகார் என் மேல்….

ஒரு வாரமாக, எனக்கு நானே போட்டுக்கொண்ட timetable படி, ஒரு விஷயம் நடந்துக் கொண்டிருப்பது நினைவிற்கு வந்தது,

அட,!!!! பரவாயில்லையே, அனுராதா !!! ஒரு வாரம் தாண்டி விட்டதே, …. இன்னும் இரண்டு வாரங்கள் தான் டி செல்லம் என்று என்னை நானே முதுகில் ……….மன்னிக்க தோளில் தட்அதாங்க டிக்கொடுதுக்கொண்டேன்.

அதென்ன இன்னும் இரண்டு வாரம்…. ஆகா மொத்தம் மூன்று வாரம்…

அதாங்க the 21 day challenge

Maltz என்பவற்றின் ஆராய்ச்சியின் படி,நமது மூளைக்கு ஒரு விஷயம் பழக்கமாக பதிவாக 21 நாட்கள் தொடர்ந்து செய்வது அவசியமாகிறது. இன்னும் சொல்லப் போனால், 21 நாட்களுக்கு பின்பு அந்த பழக்கத்தை விடுவது கஷ்டமாம்.

21 நாட்கள், தொடர்ந்து செய்ய வேண்டும், ஒரு நாள் கூட நடுவில் விடக்கூடாது.

அது எந்த வேலையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த, பழக்கத்தை, நீங்கள், விடாமல் உங்கள், நடை முறை வாழ்க்கையின் ஒரு பகுதியாக, ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த விஷயமாக கூட இருக்கலாம்.
http://www.pluginid.com/21-day-challenge/

அதற்காக, 21 நாட்கள் தொடர்ந்து எழுதி, உங்களை கொல்லப் போகிறேன் என்று பயந்து விடாதீர்கள். ….

வேறு எந்த பழக்கத்தையாவது கடை பிடிக்கவோ, விட்டு விடவோ, பிரயத்தனப் பட்டுக்கொண்டு இருந்தீர்களானால், இந்த வழியில் செய்யலாம் என்று சொல்ல வந்தேன்.

நன்றி, நண்பர்களே, மீண்டும் அடுத்த வியாழன் ஒரு போஸ்டுடன் உங்களை சந்திக்கிறேன்.

ஒரு வேளை உற்சாக மிகுதியில், இடையில் எழுதினால், உங்களின், அருமையான, விலை மதிப்பில்லாத கருத்துக்களை கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்க

13 responses to “அந்த 21 நாட்கள்!!!!!!!

 1. இந்த 21 நாள் சேலஞ்சில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அனு அக்கா 🙂

  Like

 2. காத்திருக்கிறேன்…

  தொடர வாழ்த்துக்கள்…

  Like

 3. தொடர்ந்து எழுத முடிவு செய்ததற்கு வாழ்த்துக்கள். தினமும் உங்களுக்கு தொலைபேசி நினைவூட்டவும் தயார்.
  வாழ்த்துக்கள், தொடருங்கள்

  Like

 4. அனு ஏன் எழுதலே நான் என்னைக் கேட்கும் கேள்வி இது.
  உனக்கு என்னை ஞாபகம் இருக்கோ இல்லையோ. எழுது. எழுதிக்கொண்டே அன்புடன்

  Like

 5. எழுதிக் கொண்டே இரு. அன்புடன்

  Like

 6. 21 நாள் சேலஞ்சில் வெற்றி பெற வாழ்த்துக்கள் . காத்திருக்கிறேன் padikka! எழுதிக் கொண்டே இருங்கள்!

  Like

 7. Think what to write in your blog continuously for 21 days and come out after advising your admirers. By this they can take respite for 21 days atleast. Just kidding – that’s my way !!

  Like

 8. ஓவ்வரூ மாதமும் அந்த மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிைய பற்றி ஏழூதினால் நன்றாயிறுக்கும். உன் ஏழுதும் பாணி நன்றாகவே இருக்கிரது.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s