மலையும் எலியும்
ஒரு நாள் ஒரு பெரிய மலைக்கும் ஒரு சுண்டெலிக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது
மலை கூறியது, சீ நீ எவ்வளவு சிறிய உருவம் படைத்தவன். என்று.
அதற்க்கு சுண்டெலி உடனே,
எனக்கு தெரியும், நான் உன்னை போல பெரிய உருவம் கொண்டவன் இல்லை என்று…. ஆனால், நீ என்னை போல் இல்லை….
பெரிதாக இருப்பதனால், எவ்வளவு நன்மைகள் என்று உனக்கு எங்கு தெரிய போகிறது என்றதாம் மலை.
என்னைத் தாண்டிச் செல்லும் காற்றினையும் மேகங்களையும் கூட என்னால் தடுத்து நிறுத்த முடியும் என்று மார் தட்டியதாம்.
ஆமாம் ஆமாம் கண்டிப்பாக, என்று ஒத்துக்கொண்டு விட்டு, சுண்டெலி கூறியதாம்,
உன் அடிவாராத்தில், பெரிய பெரிய பொந்துகளை சுரண்டுவதிலிரிந்து ஆனால் நீ என்னை தடுக்கு முடியாது ….என்று கூறி மலையின் அகம்பாவதிர்க்கு வைத்ததாம் ஒரு முற்றுப்புள்ளி…
மேலே உள்ள கதையை கூறி என் இளைய மகள் ஜூனியர் கே ஜி யில் இருக்கும் போது முதல் பரிசு வாங்கினாள் ….
அவர்கள் சிறுவர்களாக இருக்கும் பொது vikas story books என்று வேறு வேறு வண்ணங்களில் வரும்… இன்னமும் இருக்கிறது… குழந்தைகள் படிக்கிறார்களா என்று தான் தெரியவில்லை….
அதிலிருந்து, அத்தனை கதைகளும் படித்திருக்கிறார்கள். அதை தவிர, அவர்களின் தாத்தா தினமும் கதை சொல்லித்தான் தூங்க வைப்பார்….அவரின் கதை சொல்லும் திறனே திறன். ஒரே மாதிரி வார்த்தைகள், ஒரே கோர்வை, ….. அது ஒரு கலை … எனக்கு கூட அவர் சொல்லும் குட்டிக் குரங்கு கதை ரொம்ப பிடிக்கும்.
அன்று படித்தது, உள் வாங்கியாது, இன்றும் அவர்களுக்கு உதவுகிறது…. அவர்களை, அவர்களின், உருவ அமைப்பை யாரேனும் குறை கூறினால், இந்த மாதிரி கதை ஞாபகம் வந்து, நல்ல பதில் அடி கொடுக்கிறார்கள்.
மிகச் சமீபமாக நேற்று ஒரு மனிதர், நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்…..பெரியவர்கள், அவர்கள் வயதிற்கு ஏற்ப பேசவில்லை என்றால் இது தான் கதி …..
அந்நாளில் அவர்கள் பார்த்த cartoon கூட, நல்ல விஷயங்களை கற்றுத் தந்தன…. பிங்கு என்ற penguin …. வார்த்தைகளே பேசாது… எல்லாம் செய்கை தான்… ஆனால் எவ்வளவு நன்றாக இருக்கும்… இந்நாளில் உள்ள zoozoo போல….எனக்கு பிங்கு ரொம்ப பிடிக்கும்,… எப்போதாவது போட்டு பாக்க, தனியாக ஒரு சி .டி …வைத்துக்கொண்டிருக்கிறேன்.
என்னைப் போலவே, எனது, தோழி, ரஞ்சனி நாராயணனும் பிங்கு பிடிக்கும் என்று எழுதியிருந்தார்.
நல்ல விஷயங்கள் என்றும் மாறாது……
உண்மை தான்… நல்ல விஷயங்கள் என்றும் மறக்காது…
வாழ்த்துக்கள்…
LikeLike
கதை எல்லாம் நன்ராக இருக்கிரது. அன்புடன்
LikeLike
Thanks eppidi irukkel? Mama eppidi irukka?
நான் கிழ விழுந்து ஆபரேஷன் ஆயிருக்கு கைல
LikeLike
சற்றுநாழி முன்புதான் உன்னைப் பற்றிப் பேசினேன். வயதானவருக்கு மிளகுரஸம் வைத்துக் கொடுத்ததாகச் சொன்னதைப பற்றி.
என்ன கையில் அடிபட்டிருக்கா? என்ன பொண்ணுநீ. ஏதாவது
படுத்திண்டே இருக்கே. எல்லாம் நல்லபடி ஆகணும்.
பின்னூட்டம் முடிக்கலே.கைஸரியில்லே. எதற்கு எழுதணும்
பக்கத்தில் சொல்லியிருப்பா.யூகிக்க முடிகிரது.
நானும் நலமாக இல்லை. இருந்தாலும் உன்பதிலைப் பார்த்துச்
சும்மா இருக்க முடியவில்லை. நீ நலமாக வேண்டும் பெண்ணே.
என் ஆசிகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்
LikeLike