அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் ஒரு இடைவெளிக்கு பின் எழுத வேண்டும் என்று தோன்றிய அளவுக்கு இன்றைய நிகழ்வுகள் இருந்ததால். எழுதுகிறேன
தீபாவளி ஷாப்பிங் எல்லாம் முடிந்து விட்டது… கடைசி நிமிஷ ஷோப்பிங்க்க்கு தனி சுகம் என்பதால் மதிய உணவிற்கு பின் போய்விட்டு வரலாம் என்று மகள் கூறவும், உணவை முடித்துக்கொண்டு போனோம்,
அதற்க்கு முன், சாப்பிட உட்கார்ந்த உடன் வெளியே தண்ணீர் ஊற்றி பெருக்கும் சத்தம் கேட்டு எழுந்து பொய் பார்த்தேன்.
எப்போதும் எங்கள் flat மாடிப்படிஎல்லாம் சுத்தம் செய்யும் பெண்மணி வேலையை செய்து கொண்டிருந்தார். வாய் பேச முடியாதவர். ஆனால் நல்ல சிரித்த முகம். சில மாதங்கள் முன்பு எனக்கு கழுத்து வலி வந்து கீழே குனிய முடியாமல் இருந்தபோது, புதன் தோரும் அவர் வந்து மாடி படி கழுவியதும் என் வீட்டில் கோலம் போட்டு கொடுத்து விட்டு போவார்.
ஒரு சின்ன செயல்…என் முகத்தில் ஒரு புன்னகை…
இன்று என்னிடம் இருந்த இரண்டு புடவைகள்… ஒரு வருடம் முன் வாங்கியவை… அதிகம் உடுத்தவில்லை …புது மெருகு போகாமல் இருந்தது…அதை எடுத்து அவருக்கு கொடுத்தேன். அவரை உள்ளே அழைத்து நாலு பழங்களுடன் கையில் கொடுத்தவுடன், காலை தொட்டு கும்பிட குனிந்தவரை தூக்கி நிறுத்தி அனுப்பிவைத்தேன்.
எனக்கு ஒரு வருட பழைய புடவை… அவருக்கு அது புது துணி…
எனக்கு திருப்தி ……..
சாப்பிட்ட கையேடு கிளம்பி கடைக்கு போய் சுற்றிவிட்டு, மகளுக்கு ஒரு புடவை வாங்கி விட்டு, காப்பி குடித்துவிட்டு வெளியே வந்து ஆட்டோ பிடித்தோம். எண்பது ருபாய் கேட்டார் ….இறங்கும் போது நூறு ருபாய் கொடுத்து
வெச்சுகோங்க ஹாப்பி தீபாவளி என்று சொன்ன போது
அவருக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்
எனக்கு திருப்தி …….
பக்கத்தில் இருக்கும் கடையிலிரிந்து ஒரு இரண்டடு வயது குழந்தைக்கு, என் வீடு எதிரே துணிகளுக்கு இஸ்திரி போடுபவரின் குழந்தை ஒரு ஜோடி துணி வாங்கி கொடுத்த போது அந்த குழந்தையின் தாய்க்கு அவ்வளவு மகிழ்ச்சி…
எனக்கு திருப்தி ……
பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மாமி என்னை அழைத்து பேசவும் தெரிய வந்தது அவர்களும் காலையில் அந்த குழந்தைக்கு புது துணி வாங்கி கொடுத்தார்கள் என்று….
அதோடு இல்லாமல் தங்கள் பேர குழந்தைகள் அமெரிக்காவில் வசிப்பதால், இந்த குழந்தை தங்களை தாத்தா பாட்டி என்று அழைப்பது ஆதூரமாக இருக்கிறது என்றார் மாமி.
வயதான காலத்தில் தன ஒரே மகனும் அவரது குடும்பமும் தன்னுடன் இல்லையே என்று புலம்பாமல் வாழ்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்பது மனதுக்கு இதமாகவும், வயதானால் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெளிவு படுத்தியது…..
இது இல்லை, அது இல்லை, அப்பிடி இல்லை, இப்பிடி இல்லை வேறு மாதிரி இருந்திருக்கலாம் …இப்பிடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றெல்லாம் புலம்பாமல்….
எனக்கு என்ன குறைச்சல்….நன்றாகத்தானே இருக்கிறேன் என்று திருப்தியோடு கடவுளுக்கு நன்றி சொல்லி பாருங்கள்… அந்த சுகமே தனி…..
அது படித்து அறிந்து கொள்வதல்ல கேட்டு தெரிந்து கொள்வதல்ல…..உணர வேண்டிய விஷயம்……..
lovely
LikeLike
நல்ல அனுபவங்கள். நீங்கள் உணர்ந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் சிறப்பு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
LikeLike
உங்கள் பின்னூட்டம் என் பலம்
LikeLike
super anu 🙂 loved the post!!
LikeLike
What a perspective about life! I am becoming a great admirer of your way looking at things!
LikeLike