மாலை சூடும் மண நாள்

image

மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள் ….
இன்று  அன்னாளை 25வது முறையாக கொண்டாடுகிறோம்.
பிறந்த வீட்டில் பெற்றோருடன் வாழ்ந்ததை விட 4 வருடங்கள் கூடுதலாக உன்னுடன் வாழ்ந்துவிட்டேன்

என்ன தவம் செய்தேனோ….
உன்   ஒரு பாதியாய் வாழ்வதற்கு

பெற்றவனையும், சிற்றையனையும் காப்பேன்
என்னுடன் இருப்பாயா என்றாய்…

என்னை பெற்றவர்களுக்கும் ஆண் பிள்ளை இல்லை
அவர்களை பேண நீ என்னுடன் இரு,
நானும் இருக்கிறேன் என்றேன்

image

உன் வாக்கை நீ நிறைவேற்றிவிட்டாய் …
என்ன புண்யம் செய்தார்களோ உன்னை மருமகனாய்  அடைய

நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் (உன் துணையுடன்)….

image

என் ஆசிகளை மட்டுமே எண்ணிப்  பார்கிறவள் நான்
என் வாழ்வின் ஐந்து ஆசிகள் ….நீயும், என் மகள்களும், அம்மாவும் அப்பாவும்….
ஒரு பதிவில் கூறி விட முடியாது நம் உறவை.
என் மரியதைக்குரியவனே பல தருணங்களில் நீ என் முன் விஸ்வரூபமாய் உயர்ந்திருக்கிறாய்
பல சமயங்களில் உன்  மனதை நானும்
என மனதை நீயும் வேதனை அடைய செய்திருக்கலாம்
ஆனால் அது நல்ல தாம்பத்யத்தின் ஒரு பங்கு

image

9 responses to “மாலை சூடும் மண நாள்

 1. அனு,

  உங்களின் 25 வது திருமண நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்.

  சிறுசிறு ஊடல்கள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸியமாய் இருக்கும்.

  Like

 2. மனங் கனிந்த வாழ்த்துக்கள்

  Like

 3. முதலில் வாழ்த்துக்கள்.
  ஆஹா! இளமை போகும் அனுவும் ஸ்ரீனியும்! கண்ணுக்கு விருந்து.
  சம்சார சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்த (2 முத்துக்கள்!) அனுவும், ஸ்ரீனியும் – நல்தாம்பத்தியத்தின் எடுத்துக்காட்டு.
  இருவரும் பல பல வருடங்கள் உடல் ஆரோக்கியத்துடன், மன வளத்துடன், பெரும் செல்வத்துடன் வாழ ஆசிகள்.

  Liked by 1 person

 4. ஸாரி, அனு! இளமை பொங்கும் என்று தட்டி, அது கடைசியில் போகும் என்று வந்துவிட்டது. ஸாரி, ஸாரி!

  Like

 5. இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்றாலும் எல்லாவற்றையும் நங்கு சமாளிதது வெள்ளி விழா கொண்டாடும் உங்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்

  Liked by 1 person

 6. அனுவின் பதிவுகள் என்றாலே ஓடிவந்து படிக்கும் எனக்கு உன் வெள்ளி விழா மண நாட்பதிவு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. சுருங்கச் சொல்லி அழகுற விளக்கி விட்டாய். உங்களிருவர்க்கும்,குடும்பத்தினரனைவருக்கும் என் அன்பான ஆசிகள். மண விழா மகிழும் விழா. எழுதின விதம் மிக்க அருமை. அன்புடன்

  Like

 7. படங்கள் இயல்பாக அழகுற அமைந்துள்ளது. அன்புடன்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s