என் பாட்டி

image

காலையில் எழுந்தது முதல் கை தொலை பேசியில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.

விதியாசமாக வந்த செய்தி… என் பாட்டியை பற்றி தெலுங்கு செய்தித்தாளில் வந்த செய்தி மற்றும் புகைப்படம்.
image

102 வயது இந்த வருடம்  பூர்த்தியாக போகும் குமரி !

image

கடமை, காருண்யம், கனிவு இது மட்டுமே அவளுக்கு தெரியும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் காப்பியை குடுத்துவிட்டு தான் மறு வேலை.

தொலைநோக்கு பார்வை….
நாகரீகம் என்பது உடையில் இல்லை , உள்ளத்திலும் சிந்தனையிலும் உள்ளது என்பதற்கு அவள் ஒரு நல்ல உதாரணம்.

ஐந்து பிள்ளைகளை பெற்று அதில் இரண்டை பலி கொடுத்து,
இதுவும் கடந்து போகும் …..
என்று வாழ்கையை நடத்திக்கொண்டிருப்பவள்.

கொள்ளு பேத்திகளாகிய என் மகள்களுக்கு அவ்வபோது டிப்ஸ் தருபவள். !!!!

image

image

படிக்கவா கல்யாணம் பண்ணிக்கவா என்றும் கேட்க்கும் என் மூத்த மகளிடம் ……முகத்தை சுளித்து கல்யாணம் அப்பறம் ஆகட்டும்… மேல படி ….. நன்னா படி என்று சொல்லும்போது, என்ன ஒரு தெளிவான சிந்தனை என்று நான் வியக்காத நிமிடம் இல்லை.

அனாவச்ய மன உளைச்சல்கள் இல்லை.
இப்போது நினைவு அதிகம் இருப்பதில்லை….( பார்க்க பொறாமையாக இருக்கிறது…)
வருவோரை பொக்கை  பல்லை கட்டி சிரித்து வரவேற்க வேண்டும்…
காபி குடிக்க சொல்ல வேண்டும்
அவர்கள் விடை பெரும் பொது காலில் விழுவார்கள் , நன்றாக வாய் நிறைய வாழ்த்த வேண்டும்
மீண்டும்பொக்கை  வாய் சிரிப்பு…
டாட்டா  காண்பிக்க வேண்டும்…..

அடேயப்பா என்ன ஒரு வாழ்க்கை.

image

புகைப்படம் எடுத்த கையோடு அதை வாங்கி பார்ப்பது !!

அவள் கடந்து வந்த பாதை கரடு முரடானது என்றாலும்….
நாம் கற்றுக்கொள நிறைய பாடம்….

எதையும் அமைதியாக அணுக வேண்டும்
இது(சுகமோ துக்கமோ ) நிரந்தரம் இல்லை எதுவும் நிரந்தரம் இல்லை
அடுத்த தலைமுறையை / அடுத்தவர்களை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க விடுவது
விருந்தோம்பல்
மனமார வாழ்த்துவது
தன்னை எப்போதும் பளிச்சென்று வைத்துக்கொள்வது
( கழுத்தில் இரண்டு சங்கலிகள் கைகளில் வளையல்கள், மோதிரங்கள் )…
மனமும் அமைதியாக இருந்து சிறிது ஒப்பனையும் செய்து கொண்டால் நமக்கே நம்மை பிடிக்கும்

அவள் வாழும் ஒவ்வொரு தினமும் எங்கள் குடும்பத்தார்க்கு ஒரு போனஸ் ……
வாழ்த்த வயதில்லை எனக்கு ஆனால் என் பாட்டி  என்று மார் தட்டிக்கொள்ள  தவறுவதில்லை….

அவளை போலவே வாழ பழக்க படித்திக்கொண்டு விட்டேன்….
அவளை போலவே நெடுநாள் வாழ்வேனா என்பது தெரியாது… வாழ்ந்தாலும் அதுவும் அவளை போல தான் இருக்கும் என்பது மட்டும் தெரியும்…..

image

பாட்டியின் கால்களை பின் தொடர ஆசை….

image

நான் குழந்தையாக இருந்த போது…..அவள் கைகளில்…

6 responses to “என் பாட்டி

  1. நம் பாட்டிகள் போல, நம் அம்மாக்கள் போல, நம் அக்காக்கள் போல நாம் இருப்போமா என்பது சந்தேகம் தான் அனு. //அனாவச்ய மன உளைச்சல்கள் இல்லை.
    இப்போது நினைவு அதிகம் இருப்பதில்லை….( பார்க்க பொறாமையாக இருக்கிறது…)
    எனக்குக் கூட!
    எப்போதும் பார்க்கப் பளிச்சென்று இருக்க வேண்டும் – மிக மிக முக்கியமான செய்தி இது.
    எல்லாவற்றையும் ரசிக்க முடிந்த என்னால் அதிக ஆயுளுடன் இருப்பது என்பதை மட்டும் ஏற்கமுடியவில்லை. அதுவே ஒரு சாபமாகப் போய்விடுகிறதோ சிலசமயங்களில் என்று தோன்றுகிறது.

    Like

  2. அனு இந்தக்கட்டுரை,இல்லை நிஜ உரை என் பெண்ணின் மருமகளின் பாட்டியின் நகலோ என்று தோன்றுகிறது. சென்னையில் இருக்கும் அவரும் இதே அச்சு அசல்,உருவம் மற்றும் யாவும். வந்தவர்களை, உபசரிக்கச் சொல்வதும்,ஆசிகளை வாரி வழங்குவதும்,மனுஷாளைக் கண்டவுடன் கட்டி அணைத்துக்கொண்டு அன்பைப் பொழிவதும் ,நல்ல ஞாபகத்திறனோடு பேசுவதும் வியப்பாகத்தான் இருக்கிறது. 102 முடிந்திருக்கும். மெல்ல நடையும் இருக்கிறது. வியப்பு. அபூர்வம்தான். ஆசிகளைக் கொண்டு நாம் பெருமையடையலாம். வயோதிகத்தின் சிரமங்கள்
    அவர்களுக்கும் உண்டு. ஸந்ததிகள், செய்பவர்கள் அவர்களுக்கு இந்த வலுவு இருப்பதில்லை. அவர்களின் உள்ளுணர்வு என்பது தனிப்பட்ட விஷயம். இருக்கும்வரை நல்ல ஆரோக்கியத்துடன் நம்மிடையே அவர்கள் இருக்க கடவுளை வேண்டுவோம். இது எல்லோருக்கும் கிடைக்கும் பாக்கியமல்ல. உன் பாட்டிக்கு என் நமஸ்காரங்கள். அருமையாக எழுதியுள்ளாய். இந்தக்காலத்தில் செய்வதற்கு யாரும் தயாரில்லை.வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிரார்கள். எல்லோருக்கும் இல்லா விட்டாலும் நிதரிசனம் இதுதான். ்அவருக்கு
    கொள்ளுபேரன் பேத்திகளை தினமும் ஸ்கைப்பில் பார்க்க வேணும். நான் அவரைப் பார்க்கப் போனால் எனக்கு சம்பந்தி உபசாரம் செய்யவேணும். இப்படியும் மனிதர்கள். பெருமைக்கு உகந்தவர்கள். இல்லையா அனு. அன்புடன்

    Like

  3. மிக அருமையான பதிவு. உன்னுடைய எழுத்தாறலுக்கு என் வாழ்த்துக்கள். இத்துடன் பேட்டியின் நகலை அனுப்பியுள்ளேன். படிக்கமுடிந்தால் ரசிக்கலாம்.

    Like

  4. மனமும் அமைதியாக இருந்து சிறிது ஒப்பனையும் செய்து கொண்டால் நமக்கே நம்மை பிடிக்கும்
    Yes..true..my pranams & to your Chamatthukkudam paati😍💕

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s