பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..

அவள் ஒரு இல்லத்தரசி. மாலை வேளையில் முகம் கழுவி, தலை சீவி, பொட்டு வைத்து, கடவுள் முன் விளக்கேற்றி வழிபட்டு தன்னை நேர்த்தியாக பராமரித்துக் கொன்டு கணவனுக்காக காத்திருப்பவள்.

மணம் முடித்து வருடங்கள் பல ஆகியும், அவள் இதை பின்பற்றிக்கொன்டிருந்தாள்.

இரவு
கணவன் கைதொலைப்பேசியில் பேசிக்கொன்டே அழைப்பு மணியை அழுத்திய போது, துள்ளி எழுந்து வாயிற் கதவை திறந்தவளை பார்த்து கண் சமிட்டியபடியே உள்ளே நுழைந்தான். அவளுக்கு உள்ளமெல்லாம் பூரிப்பு.

படபடவென்று சாப்பாட்டு தட்டை வைத்து பரிமாறினாள். அவன் சம்பாஷனை முடியாததால் பேசிக்கொன்டே சாப்பிட்டு எழுந்தான்
அவள் மற்ற வேலைகளை முடித்துக் கொன்டு படுக்கை அறைக்கு வந்தாள்.
(தலைப்பில் இருப்பது போல் பாலும் பழமும் கைகளில் ஏந்தாமல்)
குளிர்சாதன பெட்டி இதமாக மெட்டு கட்டிக் கென்டிருந்தது. ஒரு பக்கம் தொலைக்காட்சி பெட்டியில் ஒருவர் அனல் பரக்க விவாதித்துக் கொன்டிருந்தார்.

கணவன்அருகில் வந்து படுத்தாள்.அவளை பார்த்து புன்னகைத்தான் கணவன்.தன் விரல்களால் விளையாடினான்.இடையிடையே பேசினான்.சிரித்தான்நடுவில் முகத்தை துடைத்தான்.ஒரு மணி நேரத்திற்கு பின்பு ……………….தன் விரல்களால் விளையாடி,இடையிடையே பேசிக்கொன்டிருந்த,சிரித்துக் கொன்டிருந்த,ஸ்க்ரீனை துடைத்த”கை தொலைபேசியை”வைத்துவிட்டு திரும்பிய போது அவள் ஒரு மணி நேரம் முன்பே ஆழ்ந்து உறங்கியிருந்தாள்…..மனைவிகளுக்கு இக்காலத்தில் கணவன்களின்கைதொலைபேசிகள் தான் சக்களத்திகள் !!!!!

5 responses to “பாலும் பழமும் கைகளில் ஏந்தி…..

 1. சொந்த அநுபவம் பதிவில் வந்ததேன் ???

  Like

 2. சரியாகச் சொன்னீர்கள், கைப்பேசிதான் இன்று பலர் வீட்டிலுமுள்ள ஒரே தொல்லை. கணவன் மனைவிக்குமிடையே வரும் சக்களத்தி!!
  ~தன் விரல்களால் விளையாடினான்.
  இடையிடையே பேசினான்.
  சிரித்தான்~
  இன்றைய நிலையை அழகாகவும், யதார்த்தமாகவும் சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்..

  Like

 3. i know many people who are not friendly with neighbours
  are absorbed in face book people
  whom they have not seen

  Like

 4. Semma twist.. enjoyed

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s