காது கொடுத்து கேட்டேன் … என்றவுடன்
ஆஹா ….குவா குவா சத்தம் என்று பாடினீர்களா?
அதுதான் இல்லை. …
நான் சொல்வது
Listening !…கேட்பது…
“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ” என்று தமிழ் படங்களில் கடைசீ சீனில் வருமே..
முக்கியகிமாக சொல்ல வருவதை கதாநாயகநோ கதாநாயகியோ கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று நாம் தவிப்போமே !!
அது போல அல்லாமல், கேட்பது … சொல்ல வருபவர்கள், சொல்ல வருவதை, சொல்ல விடுவது…..பேசாமல் கேட்பது!
பேசாமல் கேட்பது …
அவர்கள் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கும் வரை வாயை திறக்காமல், பொறுமையாக கேட்பது…
ஹ்ம்ம் கொட்டுவது, தலையை அசைப்பது வேண்டுமானால் allowed…மற்றபடி…
உங்களுக்கு அந்த வயதில் என்ன நேர்ந்தது, நீங்கள் எப்பிடி சமாளித்தீர்கள், எப்படி வென்றீர்கள், கொடி நட்டீர்கள், கிரீடம் கிடைத்தது…. அது எல்லாம் கேட்டால் மட்டுமே பகிரவும்.
சொல்பவரின் மன நிலை என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு உங்கள் புராணம் பாடினால் போதும்.
சொல்ல வருபவர் ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக , அழுதாலோ, குரல் உடைந்தாலோ, கோபப் பட்டாலோ, பொறுமையாக இருந்து, ஆதரவாக அவர்கள் கரம் பற்றுங்கள். முடிந்தால் கட்டி பிடித்துக் கொள்ளுங்கள்.
கரம் பற்றும் போதும் கட்டி பிடிக்கும் போதும் மனது லேசாகுறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கண்டிப்பாக மனசு தளர்வதை ஒருவர் ஆறுதலாக கரம் பற்றும் போதும், கட்டி முதுகில் தடவும் போதும் உணரலாம். இது இரண்டுமே செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை செவி மடுத்தால் போதும். அதுவே அவர்களுக்கு ஆறுதல். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த உடன், தேவை பட்டால், உங்கள் பக்க கருத்துகளையும், உங்கள் அனுபவத்தையும் கூறுங்கள்.
Happy listening !!
உண்மையில் நல்ல listner ஆக இருப்பது கடினமான ஒன்று. அப்படி இருப்பது நல்லது – நாளை நாம் சொல்வதை அவர்களுக்கும் பொறுமையாகக் கேட்பார்கள், இல்லையா?
LikeLike
.ஆமாம் ரஞ்சனி.. அது ஒரு கலை
LikeLike
good article anu!
LikeLike