ஐம்பதிலும் ஆசை வரும் 

ஐம்பதிலும் ஆசை வரும்

ஆசையுடன் பாசம் வரும்

இதில் அந்தரங்கம் கிடையாதம்மா

நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா …….

சிவாஜி கணேசன் தனக்கே உரிய பாணியில் கே.ஆர் .விஜயா அவர்களுடன் ஆடி பாடி நடித்துக்கொண்டிருந்தார் ….

அட ஆமாம் ஐம்பதில் ஆசை வரத்தான் செய்கிறது….

என்னென்ன  ஆசைகள் ?

ஐம்பதில் வேறென்ன ?

மற்ற தோழிகளுடன் பேசும்போது புலப்பட்டது….

  சமையல் சிம்பிளாக செய்ய வேண்டும்

கோவில்களுக்கு போய்  வரவேண்டும் ( கணவரோடு)

வாரத்தில் ஒரு நாள் …

” எனக்கு இன்னிக்கி  சாப்பாடு கட்ட வேண்டாம்மா ” என்று சொல்கிற நாள் ஒரு சின்ன break !

சுட சுட கரமுர தோசைகள் எல்லோர்க்கும் சுட்டு கொடுத்தபின், நீ உக்காரு நான் போட்டு தரேன் என்று யாராவது சொல்ல வேண்டும்(நான் பாக்கியசாலி…என் 2 மகள்களும் செய்வது இதுதான்)

நம்முடன் பள்ளியில் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் வருடம் ஒரு முறையாவது சந்திப்பது…

நாலு நாள் hotel லில் தங்கி நாலு இடங்கள் பார்ப்பது… ஏன் ஹோட்டல்? 

ஏன் என்றால்… 

எழுந்து காப்பி கூட போட கூடாது,  சாம்பாரா வெத்தல் குழம்பா/ கூட்டா கரியா, / இப்படி எதுவுமே மூளையை கசக்காமல், இருக்க தான் ….

மருந்து சாப்டியா, உனக்கும் சுண்டல் எடுத்து  வைத்துக் கொண்டாயா?  என்னை பார்த்து கொள்வதில் உன்னை கவனித்துக்கொள்ள தவராதே எனும் ஒரு சின்ன வார்த்தை செய்யும் பெரிய ஜாலம்….

மனதில் உள்ளதை வெளியில் வெளிப்படையாக பேசு… மனதில் பூட்டி வைத்து அழுத்திக்கொள்ளதே என்று சொல்லும் பாங்கு..(ஏனோ முக்கால்வாசி ஆண்களுக்கு இது  50 தாண்டியப்பின் தான் உதிக்கிறது)!

நீ பேசு நான் இடைமரிக்காமல் கேட்கிறேன் என்று சொல்வது…

இங்கு தான் என்று இல்லாமல், காலாற நடந்துவிட்டு வரலாம் என்று கூப்பிடுவது…

ஒரு long drive போகலாமா…என்று கேட்பது

இன்னும் எத்தனை எத்தனையோ…எல்லாம் சின்ன ஆசைகள் ஆனால் பெரிய நிறைவுகள்… 

உங்களுக்கு என்ன ஆசை …?

கீழே பதிவு செய்யுங்களேன்…

ஆண்களும் பங்கேற்கலாம்…உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன என்று எங்களுக்கும் தெரியட்டுமே…

2 responses to “ஐம்பதிலும் ஆசை வரும் 

  1. ஐம்பதைத் தாண்டி அறுபதில் பாதி கடந்தாகிவிட்டது. இப்போது இருக்கும் ஒரே ஆசை சமையல் அறையிலிருந்து விடுதலை. நினைத்தபோது எழுத உட்கார வேண்டும். மனதில் ஐடியா தோன்றி அதை எழுத்தில்செ யல்படுத்துவதற்குள் பல நாட்கள் சென்று விடுகின்றன என்பது என்னுடைய பெரிய வருத்தம்.
    யாருக்குத்தான் இல்லை வருத்தம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

    Like

  2. நல்ல ஆசை. அவ்வப்போது இப்படி இருப்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது!

    Like

பின்னூட்டமொன்றை இடுக