வாட்சாப் – இன்றைய நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு மூலப் பொருள்.
நமக்கு பல நேரங்களில் வைக்கிறது ஆப்பு !
லாஸ்ட் சீன் – நேர்ல எப்போ கடைசியா பாத்தோம் னு தெரியாது ஆனா வாட்ஸ் ஆப் ல
“நா பாத்தேன் கடைசியா 5.53 கு இருந்தான் சார் அவன். ” னு நம்ப அவரை வேவு பாக்றத பெருமை பேசும் காலம் இது.
ப்ளூ டிக் வந்தது, உடனே offline போய்ட்டாங்க என்று குத்தம் சொல்லும் காலம்.
மெசேஜ் பார்த்துட்டாங்க எப்பவோ ஆனா இன்னும் ரிப்ளை பண்ணல என்று குமுறும் காலம்.
நாம கேக்காமலேயே காலைல கண் முழிக்கும் போது ,
You have been added to ……..என்று ஒரு இம்சை. நாம கடுப்புல இருந்தா , add பண்ணவன் எவனா இருந்தாலும் பரவா இல்லை னு உடனே exit பண்ணிடுவோம். அவன் நேரம் நல்லா இருந்து, நம்ம போயிட்டு போறான் பய னு விட்டோம், செத்தோம். காலை வணக்கத்தில ஆரம்பிச்சு, இரவு வணக்கம் வரைக்கும், சகல விதமான forward கள் போட்டு நம்மை திக்குமுக்காட வெச்சுருவாங்க.
உடனே அந்த குரூப் அட்மின் செட்டிங் மாத் துவாரு. ஓன்லி அட்மினிஸ் னு. அப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.
அதுலேயும் என்னை போல நடுத்தர வயதும், எழுவது எண்வதுகள் ல இருக்கறவங்களும் அடிக்கற லூட்டி இருக்கே சொல்லி மாளாது போங்க !
என் பிறந்தநாளுக்கு ஒரு குரூப் ,
என் வீட்டு நாய் குட்டிக்கு ஒரு குரூப், என்அடுக்குமாடி குடியிருப்பு குரூப்
என் பள்ளி தோழிகள் / தோழர்கள் ஒரு குரூப் ( இதுல நீங்க 2/3 பள்ளிகள் படிச்சிருந்தீங்க அவ்ளோ தான் சுத்தம் )
கல்லூரி தோழர்கள் ஒரு குரூப் , அதுல நம்மோடு நல்லா ஒத்துபோகற நாலு பேரோட ஒரு தனி கூட்டணி( குரூப்)
ஆன்மீக குரூப் (கள் )
இப்பிடி அடுக்கிக்கிட்டே போகலாம்
(எண்ணியதில், விருப்பத்துடன் இரண்டு அல்லது மூன்றிலும், கட்டாயத்தில் மற்றவைகளிலுமாக நானே பதினோரு குரூப் களில் இருக்கேங்க 🙂 🙂
சரி இருக்கறது கூட பரவாயில்லைனு பாத்தா , இந்த மனஸ்தாபம் இருக்கே , இது ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி. தனி மெஸ்ஸஜும் சரி, குரூப் லேயும் சரி, குண்டக்க மண்டக்க புரிஞ்சுக்கறதே மக்களுக்கு பொழப்பா போச்சுங்கறேன் !
ஒரு நல்ல பழமொழி பாத்தோம்னா சரி பகிரலாம்னா உடனே அதுக்குள்ளாற பூந்து அவங்களா ஒரு அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு ஏன் என்ன வருத்தம், உன்னை யாரு என்ன சொன்னாங்க னு கேட்டு ஒரே கொடச்சல்.
K னு போட்டா ஒகே வாம்
S னு போட்டா yes ஆம்
TIA நா THANKING IN ADVANCE ஆம்
இப்படி ஒரு தனி அகராதியை இருக்கு ….
இதேயும் மீறி ஒகே னு அடிச்சதை பிச்சி பீராஞ்சு நான் அவமானப்பட்டேன் அசிங்கப்பட்டேன் எப்பிடி நீங்க ஒகே மட்டும் அடிக்கலாம்னு ஐந்து வருட உறவு ஒன்று கசந்து போனது போன வாரம். நானும் மன்னாடி பார்த்து, கெஞ்சி அழுது புரியவைக்க பார்த்தேன். நாப்பது நிமிடம் போராடிய பின் கைவிட்டேன். சில பரிச்சயங்கள் எக்ஸ்பயரி தேதியோடு வருமோ என்னவோ. !!!
எது எப்படியோ, இந்த பூமில இருக்குற கொஞ்ச காலத்தில தேவையில்லாத மனஸ்தாபங்களை தவிர்ப்போம். என்னை போல பேசி தீர்க்க முயற்சிப்போம். அதையும் மீறி விதி இருந்தால் தாங்கும். இல்லையென்றால் நாலு நாட்களுக்கு நம் மண்டையை காயவெச்சிட்டு போகும். !!!
ஒரு டெக்னாலஜி வந்தா அதை ஆக்கபூர்வமா கூட பயன் படுத்தலாம். சிறு பிள்ளை தனமாக விவாதங்களிலும், வெறுப்பிலும் ஈடுபடவேண்டாம்.
மொத்தத்தில் வாட்ஸ் ஆப் ஆப்பு உறவுகளிடையே வைக்காமல் இருக்க வாழ்த்துக்கள்
Awesome buddy 👏 Enjoyed reading 👍உங்கள் நடையில் நல்ல நகைச்சுவை உணர்வு இழையோடுகிறது. இந்த வாட்ஸ் அப்பால் நொந்து நூடுல்ஸ் ஆனது தான் அதிகம். அதுவும் இந்த Please share with so many people போன்ற forward கள் எக்கசக்கம். இது இல்லாமல் இருக்க முடியல இப்போ. This has become a necessary evil now ☹️
LikeLike
அற்புதங்கள் & அவலங்கள் இரண்டுமே நம் எண்ணத்திலும் செயலிலும் கண்ணோட்டத்திலும் ஒன்றை உபயோகப் படுத்துவதிலும் உள்ளது என்பதற்கு what’s up ஓர் உதாரணம் ,அதை அழகாக சொன்னீர்கள் தோழி👍👍பல பேரின் ஆதங்கத்தை அழகாக சொல்லிவிட்டீர்கள்👍👍
LikeLike