Monthly Archives: ஜூன் 2020

மஹா பெரியவா பாட்டு !

ஒரு இரண்டு வருஷம் முன்னாடி எங்க ஆத்து பக்கத்துல இருக்கற மல்லிகா மாமி கிட்ட மஹாபெரியவா பத்தி ஒரு பாட்டு கத்துண்டேன். ஆனா இப்போ ஒரு வார்த்தை கூட ஞாபகமில்லை . ரொம்ப தேடினேன் அந்த நோட் புக் கிடைக்காதான்னு ஆனா கிடைக்கல . இப்போ நிறைய நேரம் இருக்கறதால அந்த பாட்டை நன்னா பழகிக்கலாமே னு பாத்தேன். ம்ஹூம் …

அரளி பூச்சொரியல் !

ரெண்டு நாள் முன்னாடி மாமியோட பொண்ணுக்கு மெசேஜ் பண்ணி அம்மாவை கேட்டு சொல்லறியா மா னு கேட்டேன். அவளும் சரி னு சொன்னா. எனக்கோ அனுஷத்துக்குள்ள சொன்னா ரெண்டு வாட்டி பாடி பாக்கலாமே னு ஒரு நப்பாசை / பேராசை ஏதோ ஒண்ணுனு வெச்சுக்கலாம் ! ஆனா அவளை நச்சு நச்சு னு கேட்கவும் தர்மசங்கடமா இருந்துது. சரி னு மனசை தேத்திண்டேன். ஆனா அந்த மஹான் நமக்கு வேற விதமா அனுக்கிரஹம் பண்ணிருக்கார் னு அனுஷத்துக்கு மறுநாள் காத்தால தான் புரிஞ்சுது. என் friend உஷா ஒரு பாட்டு எழுதி பாடி, அந்த வீடியோ ல நான் எங்காத்துல பெரியவாக்கு ஆர்த்தி காற்றதையும் சேர்த்துருக்கா ! இத அவரோட அனுகிரஹமா எடுத்துக்கறேன் .

எவ்வளவோ மனசு அழுத்தங்கள், படபடப்புகள் கவலைகள் எதிர்பார்ப்புகள் இதுக்கு நடுவுல இப்பிடி ஒண்ணு நடந்தா அது conversations with god ங்கிற பிரிவுல தான் வரும் ! அதனால உஷா எழுதின இந்த பாட்டை கத்துண்டு பாடிருக்கேன்!

பெரியவாளுக்கு எங்களுடைய சின்ன சமர்ப்பணம். ஏன் அந்த பாட்டு கெடைக்கலைனு மனசு தளர்ந்து போற, உஷா மூலமா இந்த பாட்டை தான் கத்துண்டு பாடேன் னு சொல்றாரோ ?

“புண்ணியம் பல செய்து இப்பிறவி நான் எடுத்தேனோ

கருணா மூர்த்தி உன் தரிசனம் கிடைத்திட “

னு சரணத்தில உஷா எழுதிர்க்கறது நூத்துக்கு நூறு உண்மை. சின்ன பொண்ணா சங்கரா ஸ்கூல் ல படிக்கறச்ச எங்க ஸ்கூல் ல கேம்ப் பண்ணுவா. ஒட்டகம் குதிரை பசுமாடு யானை எல்லாம் அங்க இருக்கும். கோபூஜை நடக்கும், பந்தல் போட்டு , மேள தாளத்தோட ஜே ஜே னு கூட்டம் இருக்கும். கிட்ட நின்னு பாக்கற சான்ஸ் கெடச்சுது. அப்பரம் நேர கல்யாண பத்திரிக்கை கொண்டு போனோம் நானும் அம்மாவும். அவரோட இருந்த பாலு மாமாவும் அம்மாவும் ஒரு காலத்தில ஒண்ணா வேலை பண்ணினாளாம். பத்திரிகையை அனுகிரகிச்சு ஒரு மட்டை தேங்காயை ப்ரசாதமா தந்தார். மட்டை தேங்காய் பரிபூரணமான அனுக்கிரஹம் னு சொல்றா ! வேற என்ன வேணும் ?

நான் வேற ஒண்ணும் கேக்கல…

உஷா எழுதிருக்காப்ல அந்த “கடைக்கண் பார்வையிலே கவலையெல்லாம் தீர்ந்து போச்சு “

இதை எழுதி முடித்து பதிப்பதற்குள் மற்றொரு வாய்ப்பும் அவர் புகழ் பாட கிடைத்தது

இந்த பதிவின் முடிவில் வீடியோ கொடுத்துள்ளேன் என் பாட்டின்

நம்பினோர் கைவிடப்படார் இது நான்கு மறை தீர்ப்பு !

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர !!

என் தாழ்மையான முயற்சி