தித்திக்கும் என் 25 வருஷ சக்கரை பொங்கல் !

அன்புள்ள ஷ்ரியா ,
உன்னோடு இருக்கும் போது
நான் உலகத்தை திரும்பி பார்க்க விரும்புவதில்லை !
என் நெஞ்சில் முகம் புதைக்கும் போது
உன் கண்கள் மூடி நீயும் அதையே உணர்த்துகிறாய் .
உன் வயது ஏற ஏற என் வயது குறைகிறது
என் புடவை தலைப்பில் நீ ஒளிந்த காலம் மாறி உன் துப்பட்டாவில் நான் முகம் புதைக்கிறேன் .
உனக்கு பால் சாதம் ஊட்டியது போய் இன்று நீ எனக்கு பாஸ்தா ஊட்டுகிறாய் !
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்று பாரதியின் பாட்டு உனக்காக அன்று நான் பாடினேன்
என் கண்ணில் பிறரால் நீர் வழிந்தால் உன் கண்ணில் கனல் பறக்கிறது இன்று !
25 வருஷம் உன் தலை கோதி , உச்சி முகர்ந்து ( அந்த மணம் ஒரு கிறக்கத்தை தரும் ) என் கண்ணின் கருமணியாய் உன்னை வளர்த்து, இன்று பெருமையாய், உன் சேயாய் மாறியுள்ளேன்.

நீ எல்லா வளமும் குணமும் நலமும் பெற்று
ஆசைகள் நிறைவேறி, இன்று போல் என்றும் தெளிவாக தைரியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
இப்படிக்கு ,

உனக்கு அம்மாவாக படைக்கப் பட்டதில் கர்வம் கொள்ளும் தாய் !
தித்திக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
💕💕💕💕🥰🥰🥰😘😘😘😘

One response to “தித்திக்கும் என் 25 வருஷ சக்கரை பொங்கல் !

  1. அன்பு சிரியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மிக்க அன்புடன் கட்டுரை வாசித்தேன் மிகவும் அழகாக இருக்கிறது அவள் படிப்பு முடிந்து ஒரு உத்தியோகத்தில் இருக்கிறாரா தெரிந்துகொள்ள ஆவல் எல்லோருக்கும் ஆசீர்வாதங்கள் அன்புடன்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s