Category Archives: வாழ்த்துக்கள்

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

என் பாட்டி

image

காலையில் எழுந்தது முதல் கை தொலை பேசியில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருந்தன.

விதியாசமாக வந்த செய்தி… என் பாட்டியை பற்றி தெலுங்கு செய்தித்தாளில் வந்த செய்தி மற்றும் புகைப்படம்.
image

102 வயது இந்த வருடம்  பூர்த்தியாக போகும் குமரி !

image

கடமை, காருண்யம், கனிவு இது மட்டுமே அவளுக்கு தெரியும்.
வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் காப்பியை குடுத்துவிட்டு தான் மறு வேலை.

தொலைநோக்கு பார்வை….
நாகரீகம் என்பது உடையில் இல்லை , உள்ளத்திலும் சிந்தனையிலும் உள்ளது என்பதற்கு அவள் ஒரு நல்ல உதாரணம்.

ஐந்து பிள்ளைகளை பெற்று அதில் இரண்டை பலி கொடுத்து,
இதுவும் கடந்து போகும் …..
என்று வாழ்கையை நடத்திக்கொண்டிருப்பவள்.

கொள்ளு பேத்திகளாகிய என் மகள்களுக்கு அவ்வபோது டிப்ஸ் தருபவள். !!!!

image

image

படிக்கவா கல்யாணம் பண்ணிக்கவா என்றும் கேட்க்கும் என் மூத்த மகளிடம் ……முகத்தை சுளித்து கல்யாணம் அப்பறம் ஆகட்டும்… மேல படி ….. நன்னா படி என்று சொல்லும்போது, என்ன ஒரு தெளிவான சிந்தனை என்று நான் வியக்காத நிமிடம் இல்லை.

அனாவச்ய மன உளைச்சல்கள் இல்லை.
இப்போது நினைவு அதிகம் இருப்பதில்லை….( பார்க்க பொறாமையாக இருக்கிறது…)
வருவோரை பொக்கை  பல்லை கட்டி சிரித்து வரவேற்க வேண்டும்…
காபி குடிக்க சொல்ல வேண்டும்
அவர்கள் விடை பெரும் பொது காலில் விழுவார்கள் , நன்றாக வாய் நிறைய வாழ்த்த வேண்டும்
மீண்டும்பொக்கை  வாய் சிரிப்பு…
டாட்டா  காண்பிக்க வேண்டும்…..

அடேயப்பா என்ன ஒரு வாழ்க்கை.

image

புகைப்படம் எடுத்த கையோடு அதை வாங்கி பார்ப்பது !!

அவள் கடந்து வந்த பாதை கரடு முரடானது என்றாலும்….
நாம் கற்றுக்கொள நிறைய பாடம்….

எதையும் அமைதியாக அணுக வேண்டும்
இது(சுகமோ துக்கமோ ) நிரந்தரம் இல்லை எதுவும் நிரந்தரம் இல்லை
அடுத்த தலைமுறையை / அடுத்தவர்களை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க விடுவது
விருந்தோம்பல்
மனமார வாழ்த்துவது
தன்னை எப்போதும் பளிச்சென்று வைத்துக்கொள்வது
( கழுத்தில் இரண்டு சங்கலிகள் கைகளில் வளையல்கள், மோதிரங்கள் )…
மனமும் அமைதியாக இருந்து சிறிது ஒப்பனையும் செய்து கொண்டால் நமக்கே நம்மை பிடிக்கும்

அவள் வாழும் ஒவ்வொரு தினமும் எங்கள் குடும்பத்தார்க்கு ஒரு போனஸ் ……
வாழ்த்த வயதில்லை எனக்கு ஆனால் என் பாட்டி  என்று மார் தட்டிக்கொள்ள  தவறுவதில்லை….

அவளை போலவே வாழ பழக்க படித்திக்கொண்டு விட்டேன்….
அவளை போலவே நெடுநாள் வாழ்வேனா என்பது தெரியாது… வாழ்ந்தாலும் அதுவும் அவளை போல தான் இருக்கும் என்பது மட்டும் தெரியும்…..

image

பாட்டியின் கால்களை பின் தொடர ஆசை….

image

நான் குழந்தையாக இருந்த போது…..அவள் கைகளில்…

இன்றும் என்றும்

எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…..

கோவிலுக்கு சென்று வந்தீர்களா ?

நல்ல துடக்கமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

மக்கள் யாவரும், ஒருவருடன், ஒருவர் அன்புடனும், நட்புடனும்  பொறுமையுடனும், வாழ வேண்டுவோம்.

வீட்டில் எல்லோருடனும், நட்புடனும், அன்யோன்யதுடனும் பழகுவோம்….

உடல் நலத்திற்கு முக்யத்துவம் கொடுப்போம், வருடாந்திர செக் அப் செய்யவேண்டியதை நேரத்திற்கு செய்வோம். அலட்சியப் படுத்தாதீர்கள்.

முடிந்தால், ஒரு குழந்தைக்காவது, இலவசமாக, பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

நேரத்தை திட்டமிட்டு, செயல் படுத்தலாம்.

ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த ஒருவர் வாரம் ஒரு முறை மௌன விரதம் இருப்பார்…..( அரை  நாள் கூட முடியுமா என்னால் என்று தெரியவில்லை.)ஆனால் இருந்தால் எனக்கும் நல்லது, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதோ என்னமோ !!!!!மௌன விரததன்று இங்கு வலைபதிவில் கொட்டித் தீர்க்க வேண்டியதுதான். !!!!!!!!!!!!!!!!!!!!!

தினமும் சிறிது நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, இந்த ஆண்டில், தன்னம்பிக்கையுடனும், தைர்யத்துடனும், மன உறுதியுடனும், இருந்து, நமக்காகவும்,பிறர்காகவும் வாழ்வோமே..!!!!!

 

 

 

 

 

 

பிறந்த நாள் வாழ்த்து

408144_369876636372193_370103795_nபளிச்சென்ற சிரிப்பு

ஆண்பிள்ளை போல் வெட்டப்பட்ட முடி,

நெஞ்சின் நடுவே. குறுக்கே. போடப்பட்ட பை .

வலது கையில் கடிகாரமும், இடது கையில் வளையல்களும்.

பேன்ட் சட்டை,

கழுத்தை ஒட்டி ஒரு மெல்லிய சங்கிலி.

அதில் தொங்கும் ஒரு அழகான பென்டன்ட் …

பார்ப்பவர்களின் கவனத்தை கண்டிப்பாய் ஈர்க்கும் கனிவான, தோழமையான கண்கள்….

இது தான் சுதா

தொலைவிலிரிந்தே அந்த அன்யோன்யத்தை உணர்ந்தேன்

மற்றொரு தோழி மூலம் அறிமுகமானபோது

‘ஹாய் ‘என்று என் கையை பிடித்து குலுக்கியது இன்றும் நினைவில் உள்ளது.

முதல் இரு சந்திப்புகளிலேயே, ஏதோ வலியை பற்றிய பேச்சு எழ yoko yoko வை எனக்கு அறிமுகப்படுத்தியவள்

உடல் வலிக்கு மட்டுமல்லாது. மன வலிக்கும் மருந்துண்டு அவளிடம் ….

அவளது ‘எனெர்ஜி ‘ஒரு தொற்று நோய் ….

அவளையும் அவள் நடவடிக்கைகளையும் தொடர்ந்தால் புரியும்

வாழ்க்கை வாழ்வதற்கே என்று….

அவள் இருக்கும் இடத்தில், சிரிப்புக்கு பஞ்சமே கிடையாது.

யாரைப்பற்றியும் புறம் கூறி நான் பார்த்ததில்லை.

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு பம்பாய் வந்த பொது தொலைபேசியில் என்னை அழைத்த மறு நிமிடம் ஒப்புக்கொண்டேன்

அவளை பொய் சந்திப்பதற்கு ……

அடுத்த ஒரு மணி நேரத்தில், அவள் தோழியின் வீட்டில் சந்தித்தப்போது ,

கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

‘கிளிங் ‘

என்று ஒரு சத்தம் ….

என்னை கை தொலைபேசியாகவும் அவளை சார்ஜெராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் ….

( சார்ஜிங் தொடங்கியதன் அறிகுறி தான் அந்த கிளிங் )

அடுத்த முறை பார்க்கும் வரை தாங்கும்…..

அப்பிடிப்பட்ட பெண்மணிக்கு, அஞ்சா நெஞ்சம் கொண்டவளுக்கு, மற்றவர்களின் நலன் விரும்புவளுக்கு

மற்றவர்களால் விரும்பப்படுபவளுக்கு, என் விசிறிக்கு, அவள் ரசிக்கும் என் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என் கண்ணின் கருமணி !!!!!!!!!

என் கண்ணின் கருமணி,

என் இதயத்தின் துடிப்பு,
என் உயிர் நாடி,
எனக்கு பதவி உயர்வு அளித்தவள்,
வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்று தந்தவள்,
வாழ்கையை செம்மை படுத்தியவள்,
நான் உதிர்த்த, உதிர்க்கும் கண்ணீரை தன் பிஞ்சு விரல்களால் அன்றும், கனிவான இதயத்தால் இன்றும், தேற்றுபவள்,
என்னை தன் குழந்தையாக ஒரு நிமிடமும், தாயாக மறு நிமிடமும் பார்க்கும் திறன் உள்ளவள்,
என்னை முற்றிலும் அறிந்தவள், என் பலங்களையும் பலவீனங்களையும், அறிந்து, ஆராய்ந்து விஷயங்களை பகிர்பவள்,
என் செவிலித்தாயாக ஆறு மாத காலம் என்னை பாதுகாத்தவள்,
எனக்கு வலி தெரியாமல் இருக்க என் நெற்றி வருடி என்னை தூங்க வைத்தவள்,
என் கை பக்குவத்தின் முதல் விசிறி !!!
என்னை போலவே சிந்திப்பவள், ( ஆனால் என்னை விட தெளிவாக சிந்திப்பவள்),
என் ஆசிரியை, என் தோழி, என் நலன் விரும்பி, என் விசிறி,
என் எல்லாம் …….
என் மகள்,
நான் வணங்கும் என் செஞ்சுலட்சுமி தாயாரின் பிரதிநிதி…..