நொந்து உடலாம் கிழமாகி தளர்ந்தபின்…..
என்று தொடங்கி மிக அற்புதமாக நம் கடைசி காலத்தை படம் படிக்கும் ஒரு blogpost என்னுடைய வலை தலத்தில் உள்ளது .
எனது வெளிநாட்டு வாசத்தில் கிடைத்த ஒரு தோழியின் அண்ணன் அகாலமாக மறைந்து விட்ட போது, அவர்கள் வீட்டில் இதை அச்சடித்து ஈமக்க்ரியைகள் நடந்த கடைசி நாளில் எல்லோருக்கும் கொடுத்தார்களாம். அவளை பார்க்க சென்ற பொது, இதை படித்து விட்டு வேறு பேப்பர் இல்லாததால், pizza விளம்பரம் வந்த பேப்பர் ஒன்றில் அதை அப்படியே எழுதிக்கொண்டு வந்து, ஓரிடத்தில் பதிவு செய்து வைத்தேன். blogger ஆனா பிறகு, எல்லோரும் படித்து ரசித்து, உணரட்டுமே என்று, இங்கு பதிவு செய்துள்ளேன்.
அப்பிடி உடல் தளர்ந்த பின் செய்ய முடியாததை, உடல் வலுவுள்ள பொது செய்து விடுவது மிக சிறந்தது.
நன்றே செய் அதை இன்றே செய் என்பது போல, செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை ஒத்திப்போடாமல் முடித்து விட வேண்டும்.
பிற்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால், மறுபடியும் செய்துக்கொள்வது……
அப்பிடி நான் செய்ய முற்பட்டது தான் உதித் சைதன்யா அவர்களின் கீதை உபன்யாசம் கேட்க முற்பட்டது.
asianet tv யில் பல சந்தர்பங்களில் அவர் உபன்யாசம் கேட்டதுண்டு. நான் வசிக்கும் முலுன்டில் உபன்யாசம் என்றதும் கிளம்ப தயாரானேன்.
”உனக்கு என்ன புரியும், அவர் மலையாளத்தில் பேசுவார்”என்று சொன்னவர்களை மறுத்து,
“எனக்கு புரியும் “என்று கூறிவிட்டு, ( நிஜமாகவே எனக்கு புரியும் ) !!!! புறப்பட்டேன் .
சரியாக 7.30 மணிக்கு தொடங்கிவிட்டார்.
நல்ல நகைச்சுவை கலந்த பேச்சு.
ஆங்கில வார்த்தைகளின் ப்ரயோகம் …..(
நாமெல்லாமும்………….
அப்பிடியே பேசுவதால். உடனே ஒரு நெருக்கம் உண்டாகிறது )
சிறு குழந்தைகளுக்கு கர்ப்பிப்பது போல் உவமானங்கள் ……
வாக்கியத்தின் முற்பகுதியை தான் கூறிவிட்டு பிற்பகுதியை நம்மை நிரப்ப சொல்வது, ( ஒரு நல்ல ஆசிரியர் பள்ளியிலும், அம்மா வீட்டிலும் பாடம் சொல்லிக்கொடுக்கும் முறை. )
நல்ல தைரியம் …. மற்ற மதங்களை விமர்சித்து நம் ஹிந்து மதத்தின் பெருமையை விளக்குகிறார்
புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக இல்லாமல்
” இது தான் கீதை ” என்று நமக்கு நம் level ல் புரிய வைக்கிறார்.
Body , intellect அண்ட் mind இந்த மூன்றும் மூன்று தூண்கள், இதில் தான் நம் இயக்கம் இருக்கிறது என்கிறார்.
கடவுளை வெளியே தேடாதீர்கள் என்கிறார்.
நாம் மற்ற மதத்தினரிடமிரிந்து கற்ற சொற்றொடர்கள் தான்….
” நான் கடவுளை நம்புகிறேன்”
“நான் பிரார்த்திக்கிறேன் ”
என்பதெல்லாம்…..நம்மில் கடவுள் இருப்பதால், அவனை வெளியே தேடுவது தவறு என்கிறார்.
(கமல்ஹாசனின் ‘அன்பே சிவம் ” படம் ஞாபகத்திற்கு வந்தது….தவறொன்றுமில்லை…..)
மேலும்
மற்ற மதத்தினர் நம்மை விமர்சிப்பதற்கு காரணம், அவர்கள் கொண்டாடுவது ஒரு கடவுளை , நமக்கோ பல கடவுள்கள்.
அதற்கு அற்புதமான கதை ஒன்று….
அக்பர் இந்த கேள்வியை பிர்பலிடம் கேட்டாராம்….
அதற்க்கு பீர்பல், தலையில் முண்டாசு கட்டிய ஒருவனை கொண்டு வந்து நிறுத்தினாராம்.
இது என்ன துணியை நீ தலையில் கட்டியிருக்கிறாய் என்று கேட்ட அக்பரிடம் அந்த ஆள் ‘முண்டாசு ‘என்றானாம்.
அதே துணியை உருவி, மடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு, இப்போது இதன் பெயர், ‘உத்திரீயம் ‘என்றும்
அதையே, அவிழ்த்து போர்த்திக்கொண்டால் shawl என்றும்
இடுப்பில் உடுத்திக்கொண்டால் ‘துன்டு ‘ என்றும் கூறினானாம்.
ஆகா எப்பிடி ஒரே துணி, முன்டாசாகவும், உத்திரீயமாகவும், shawl ஆகவும், துண்டாகவும் இருக்குமோ,
ஒரே கடவுள், பல ரூபங்களில் கட்சி தருகிறார் என்பதை விளக்கினாராம் பீர்பல் .இன்னும் பல பல மேற்கோள்கள் , உதாரணங்கள்…..
இரண்டு மணி நேரம் [போனதே தெரியாமல், நல்ல விஷயத்தில், புத்தியை செலுத்திய திருப்தியோடு வீடு திரும்பினேன்