அஷ்டவிநாயக்…..பாகம் இரண்டு *

இனிய இரவு தூக்கத்திற்கு பிறகு, காலை, குளித்து முடித்து, சிற்றுண்டி சாப்டுவிட்டு, புறப்பட்டோம், லேன்யாத்ரி என்ற கோயிலை நோக்கி.
ஒரு ஒன்றரை மணி நேர பிரயாணத்திற்கு பிறகு, லேன்யாத்ரியை அடைந்தோம்,
சரி நேற்று நான்கு கோயில்கள் முடித்துவிட்டோமே, இன்று இரண்டு தானே என்று சாவகாசமாக, வழியில் கண்ட வயல்களில் எல்லாம் நிறுத்தி, என் மகள் புகைப்படம் எடுக்க, நாங்கள் இயற்கையை ரசிக்க என்று நிதானமாக, கோவிலை அடைந்தோம்…
சற்று கடை தெருவை தாண்டி சென்றால், டிக்கெட் வங்கிக் கொண்டு மேலே போக வேண்டியிருந்தது…..
நிமிர்ந்து பார்த்தால் …………….பார்த்தால் என்ன…………..எங்கோ மலை உச்சியில் இருக்கு கோயில்…..
ஆஹா………முடியுமா நம்மால், என்று ஒரு சின்ன தயக்கம்.
டோலி வசதியும் உள்ளது….500/- ரூபாய் என்று எழுதி போட்டிருக்கிறார்கள்
” நீ வேணுமானால், அதில் வருகிறாயா என்று நாத்தனார் கணவர் கேட்டார்,……
வேண்டாம் அத்தி …..இன்னிக்கி நடக்க முடிகிறதே, நடந்தே வரேன்” என்று கூறினேன்.
முடியும் அனுராதா, தயங்காதே ஏறு என்கிறது, உள்மனது ….. ஒரு பக்கம் பாதி போன பின்பு முடியாவிட்டால்….மற்றவர்களுக்கும் வருத்தமாக இருக்குமே என்று….
சில விஷயங்கள் ரொம்பவும் யோசிக்க கூடாது….. மனதை ஒருமுகப்படுத்தி, பிள்ளையாரப்பா நீ தான் துணை என்றி கூறிவிட்டு ஏறத் தொடங்கினேன்…..
திருப்தி மலையில் நடந்து செல்லும்போது ஓரிடத்தில், ‘முழங்கால் முடிச்சு ‘ என்று ஒரு இடம் வருமாம்….இந்த மலையோ பூராவுமே, முழங்கால் முடிச்சு தான். சரியாய் 90 டிகிரி மடக்க வேண்டியுள்ளது கால்களை…… நல்ல பயிற்சி….
தஸ், புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டு ஒரு முக்கால் மணி நேரத்தில் மேலே பொய் சேர்ந்தோம்…… நல்ல தரிசனம்….
இங்கு இருக்கும் மூர்த்தி கிரிஜாத்மாஜ் ……..
குக்குடி என்ற ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது இந்த கோயில்.
கிரிஜாத்மாஜ் என்றால் கிரிஜாவின் மகன் என்று அர்த்தமாம்.
விநாயகர் தனக்கு மகனாக வேண்டும் என்பதற்காக பார்வதி தேவி பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்தாராம் இந்த மலையில்.
அவரது பக்தியை மெச்சி, பத்ரபாத சுத்த சதுர்த்தி அன்று அவர் முன் தோன்றி அவருக்கு அந்த வரத்தை அளித்தாராம்

அருமையான காட்சி மேலிருந்து…..தரிசனம் முடித்து, இறங்குவதற்கு தயாரானோம் …
ஏறுவதை விட இறங்குவது சற்று ஸ்ரமமாக இருந்தது…. கைப்பிடி வேறு இல்லை… உடம்பை பாலன்ஸ் செய்துக்கொண்டு ஜாகிரதையாக இறங்கினேன்….
வழியில், ஆஞ்சநேய சுவாமியின் விளையாட்டு வேறு…. எல்லோர் கையிலும் உள்ள பிளாஸ்டிக் பையை பிடித்து இழுத்து, சேட்டை செய்துக்கொண்டிருந்தார்.
நான் படிகளை எண்ணிக்கொண்டே இறங்கினேன்…..
அட……ஆச்சு கடைசி படி….. 272…… என்ன ஒற்றுமை, அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நம்பர் என்றேன் என்னவரிடம்….
அதான் மலேசியாவின் பாத்து குகையில் உள்ள முருகன் கோவிலிலும் 272 படிகள் தான்…..
கீழே இறங்கி, நல்ல வெள்ளரிக்காயில் உப்பு மிளகாய்பொடி போட்டு வாங்கி கொடுத்த கணவரை மனமார வாழ்த்தினேன்!!!!!!!!!
வெளியே வந்து, ஒரு சின்ன ஹோடேலில், அந்த இடத்திற்கு உரிய, “பர்லி வாங்கி” எனும் எண்ணை கத்திரிக்காய் கறியும், “ஷேவ் பாஜி ” எனும், காராசேவில் செய்த ஒரு கறியும், சப்பாத்தியும் நல்ல நீர் மோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்

புனெவிலிரிந்து 85 கீ.மீ தூரத்தில் உள்ளது ஒசர் எனும் ஸ்தலம்.
இங்குள்ள விநாயகரின் பெயர், விக்னேஷ்வர். இவரை தரிசித்தால், நம் கஷ்டங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
விஞாசுரன் எனும் அசுரன் முனிவர்களுக்கு தொல்லை கொடுதுக்கொண்டிருந்தானாம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி விக்னேஸ்வரர் அவனிடன் போரிட முற்ப்பட விஞாசுரன் அவரிடம் சரணடைந்து, இனி தொல்லை தராமல் நல்ல பிள்ளையாக இருப்பதாக சொன்னானாம்.
அதை கொண்டாடும் விதமாக, கணேஷ் சதுர்த்தி அன்று விக்னேஸ்வறரை பிரதிஷ்டை செய்து பூஜிதார்களாம்.

இதை முடித்துக்கொண்டு ஹோட்டல் ரூமிற்கு வந்து இளைப்பாறி….தூங்கிவிட்டோம்.
மறுநாள் காலை இரண்டு கோயில்கள் முடித்துக்கொண்டு, வீடு திரும்ப திட்டம்.

மறு நாள் காலை, பாலி என்ற இடம் நோக்கி புறப்பட்டோம். இந்த கோயில் மும்பையில் நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேர பிரயாணம் தான் என்பதால், நாங்கள் அடிக்கடி செல்லும் கோயில்.
இங்குள்ள மூர்த்தி பல்லாலேஷ்வர் .
கணபதியின் பக்ததரின் பெயரில் பிரசித்தி பெற்ற ஒரே கோவில் இதுதான்
கல்யான் என்கிற வியாபாரிக்கும், அவரது மனைவி இந்துமதிக்கும் பிறந்த பிள்ள பல்லால். அவன் தன நண்பர்களுடன், பூஜை பூஜை விளையாடுவானாம். (இந்த காலத்து குழந்தைகள் விளையாடுவதே இல்லை… அது வேறு விஷயம்.)
அப்படி ஒரு நாள் குழந்தைகள் யாவரும், ஊருக்கு சற்று வெளியே போன பொது, ஒரு பெரிய கல் ஒன்றை கண்டதும், இதையே நாம் கணபதியாக நினைத்து விளையாடுவோம் என்று தீர்மானித்து, விளயடிக்கொண்டிருந்தார்களாம். நேரம் போனது தெரியாமல் விளையாட மற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேட, பல்லால் காரணமாக தான் அவர்கள் வீடு வரவில்லை என்பதை கல்யான் காதில் போட்டார்களாம்.
கோபமுற்ற கல்யான், தன் மகனை அடிக்க தடி ஒன்றை எடுத்துக்கொண்டு கிளம்பினாராம். அங்கு சென்றால், பல்லால் பக்தியில் மூழ்கி இருந்தானாம்.
கோபத்தில், அவன் பூஜித்த கல்லை தூக்கி எரிந்து விட்டு அவனை ஒரு மரத்தில் கட்டிவிட்டு வீடு திரும்பினாராம் தந்தை
பசி மயக்கத்தையும் பொருட்படுத்தாமல், கணபதியை த்யானம் செய்த பல்லால், மயங்கி விழுந்தானாம்.
ஒரு முனிவரின் ரூபத்தில் வந்த விநாயகர் அவனை விடுவித்து, அவனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பல்லால் அவரை அங்கேயே தங்கச் சொன்னானாம்.
அங்கு அவரை துதிக்க வரும் பக்தர்களின் குறை தீர்க்க வேண்டினானாம்.
அதற்க்கு கடவுள், என்பெயருக்கு முன்னால் உன் பெயரை சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி, பல்லாலேஷ்வர் ஆனார்.
பல்லாலின் தந்தை விட்டெரிந்த, கல் முதலில் தொழப் படுகிறது. அவர் ‘துந்தி விநாயகர்.’ இந்த விக்ரஹமும் சுயம்பு தான்.

அவரை நன்றாக தரிசித்த பிறகு, வெளியே இருக்கும் கடைகளில், அவல் அப்பளம், பூண்டு சட்னி, சில மராட்டிய வகை ஊறுகாய்கள் இவை வாங்குவது வழக்கம் ….வாங்கிக்கொண்டு, கடைசி விநாயகரை தரிசிக்க கிளம்பினோம்

அடுத்து மஹட் இங்குள்ள மூர்த்தி வரத விநாயகர். தம்மை நாடி வரும் பக்தர்களின், குறை தீர்த்து அவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பவர்
அருகில் உள்ள ஏரியில் 1690 AD யில் கிடைத்ததாம் இந்த விக்ரஹம்.
சுபேதார் ராம்ஜி மகாதேவ் என்பவர் இந்த கோவிலை 1725AD யில் நிர்மாநித்தாராம்.
இதன் அருகில், நம் தமிழ் நாட்டு கோயில்களில் இருப்பது போல் அழகான குளம் ஒன்று இருக்கிறது.

நல்ல படியாக, 8 வினாயகர்களையும் தரிசித்த திருப்தியோடு, வீடு வந்து சேர்ந்தோம் ……

10 responses to “அஷ்டவிநாயக்…..பாகம் இரண்டு *

 1. Hi Anu

  reading your travelogue gave me the impression that I was travelling with you to all these places and have been blessed with the darshan! Thank you!

  regds prabha

  Like

 2. நல்ல தரிசனம் அனு. எனக்கு திருநெல்வேலி மலைமேல் நம்பி கோவில் போய் வந்த ஞாபகம் வந்தது.

  டோலியில் பிரயாணம் செய்யும்போது நம்மை தூக்குகிறவர்களுக்குக் கால் தடுக்கி அவர்கள் நம்மைக் கீழே போடுவதைவிட, நாமே ஏறிப் போய் கீழே விழுந்தாலும் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றும்.

  மலை ஏறும்போது நம் காலே நமக்குத் துணை, இல்லையா?

  Like

 3. என்ன இப்பவே Indi granny என்று போட்டுக் கொண்டு விட்டீர்கள்?
  பாட்டி ஆனவர்களே தங்களைப் பாட்டி என்று கூப்பிட ஒப்புவதில்லையே!

  தமிழ்மணம் என்னவாயிற்று?

  Like

 4. சிறப்பான கட்டுரை. இரண்டு பகுதிகளாக உங்களுடன் சேர்ந்து நாங்களும் அஷ்ட விநாயகர்களை தரிசித்தோம். பகிர்வுக்கு நன்றிம்மா.

  Like

 5. இந்தப் பதிவில் பல விவரங்கள் நமக்குத் தெரியாதவை இருந்துது. அறிந்தேன். மிக்க நன்றி.
  .மலேசியாவில் இந்தத் தடவை ஏறுவோமா எம்மால் முடியுமா என்ற தயக்கம் இருந்தது. நின்று ஆறுதலாக ஏறினோம். .272 படி என்றதும் நினைவு படுத்தியது எனக்கும் நினைவு வந்தது. இனிய நல்வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.

  Like

 6. சிலவுமில்லாமல், கஷ்டமும் படாமல் எனக்கு அஷ்டவினாயக்
  தரிசனம் செய்ய உன் ப்ரயாணம் உதவியது. மனக்கண்ணால் தரிசனம் முடிந்தது. மிக்க ஸந்தோஷத்தைக் கொடுத்தது உன் பதிவு.

  Like

 7. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட.-http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_11.html?showComment=1386724732568#c7005872673239012691

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s