Monthly Archives: மே 2011

சூறாவளி அடித்து ஒய்ந்தது ………………

கட்டியும் நானும்  !!!!!!!
ஆஹா உங்கள் புருவங்கள் உயர்வதை என்னால் உணர முடிகிறது……
சில வருடங்களுக்கு முன்பாக வயிறு மேடு விழுந்ததை பார்த்து நம் எடை கூடிவிட்டது  எடையை குறைத்தால் வயிறும் வடிந்துவிடும் என்று நினைத்து, சில பல ஜிம் விஜயங்களுக்கு பின், மூச்சு வாங்கியதுதான் மிச்சமே தவிர, ஒரு மாறுதலும் இல்லாமல் போகவே, நமக்கு யோகா தான்  பெஸ்ட் என்ற முடிவுக்கு வந்ததும் ஒரு யோகா டீச்சர் தேடி ஒரு வழியாக வீடிற்கு வர சம்மதம் வாங்கினேன்.. நான்கு மாதங்கள் யோகா செய்தும், ஒரு மாறுதலும் இல்லை. இதற்கிடையில், நாக்கை கட்டுவதுதான் ஒரே வழி என்ற எண்ணம் வர, காலை எழுந்ததும் வெது வெதுப்பான நீரில், எலுமிச்சை பழம் பிழிந்து சாப்பிட்டேன். எலுமிச்சம் மூடிகள் சேர்ந்தது தான் மிச்சம். காலை எழுந்திருக்கும் போது இருக்கும் வைராக்கியம் நேரம் செல்ல செல்ல , குறைந்து, சமையலறைக்குள் போவதும் வருவதுமாக….. எதற்கு என்று யூகித்திருப்பீர்கள் .நடு நடுவே, என் பெண்ணும் கணவரும் என் வயிற்ரை பார்த்து உண்மையாக கவலை பட்டு, ‘கல்லு போல இருக்கு அம்மாஎன்று சொன்னதும், ‘அனு ப்ளீஸ் டாக்டரை போய் பாருஎன்று என் கணவர் சொன்னதும் அனாவச்யமாக மன வேதனையை கொடுத்ததே தவிர, பின்நாளில் அவர்கள் வார்த்தையின் உண்மையை உணருவேன் என்று தெரியாமல் அவர்கள் மேல் கோபம் வந்தது
இன்றுநாளை  என்று நாட்களை கடத்தினேன். நடுவில், நவராத்திரி வரவும், சரி எல்லோர் வீடுகளுக்கும் விஜயம் செய்து, வெற்றிலை பாக்கு வாங்கிவிட்டு பின் டாக்டரிடம் போவோம்  என்று எண்ணினேன். எப்பொழுதும் சரியாக வரும் மாதவிடாய் ( மா.வி) ஒரு மாதம் வரவில்லை. சரி நவராத்திரி தப்பியது என்று சந்தோஷமாக இருந்தேன். தீபாவளி வருவதற்கு முன்பு மா. வி க்கு நாள் ஆதலால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததுதான் மிச்சம். ஊரில் உள்ள உஷ்ண பண்டங்கள் அனைத்தும் விழுங்கிய பிறகும்வருவேனா பாருஎன்று மா.வி எனக்கு டிமிக்கி கொடுத்ததுதீபாவளிக்கு பிறந்த வீட்டு மனிதர்கள் வந்ததில், தலை கால் புரியாமல், நிறைவாக பண்டிகையை கொண்டாடினேன். அவர்கள் கிளம்பியதும், டாக்டரிடம் போக வேண்டும் என்று நினைத்த போது, என் மகள் ஜுரம் வந்து ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டாள். இரண்டு வாரங்கள் போல அதில் முழுகியதில், மூன்று மாதங்கள் ஆகியும் எனக்கு மா.வி வராதது தற்காலிகமாக மறந்து போனதுஅவள் உடல் நிலை ஒரு மாதிரியாக தேறியதும், என் நிலை உணர்ந்து, ஒரு சுப முஹுர்த்த நன்னாளில், மகப்பேறு மருத்துவரை ஆலோசிக்க சென்றேன். முதல் ஆலோசனையிலேஉங்கள் கர்பபையில் பெரிய கட்டி இருக்கிறது, ஒரு சொநோக்ராபி செய்து வாருங்கள்  என்று  சொன்னார்அவர் சீட்டு எழுதும் போது, ‘மறுபடியும் அறுவை சிகிச்சையா டாக்டர் ?’ என்று நான் கேட்கவும்ஆமாம்என்று சொன்ன அந்த நொடியில், சின்னதாக வயிற்றில் ஒரு சுழற்சி !!!
‘ நீங்கள் சமீபமாக  சொநோக்ராபி எப்போது எடுத்தீர்கள்?’ என்று அவர் கேட்ட கேள்விக்கு, 15 வருடங்களுக்கு முன்பு என்று நான் சொன்ன போது, என்னை அவர் பார்த்த பார்வையை என்னால் மறக்கவே முடியாது….
நீங்கள் படித்தவர்கள் தானே என்று சொல்லாமல்/ கொல்லாமல்சொன்னது / கொன்னது அந்த பார்வை.
வீடிற்கு வந்து, என்னவருக்கு போன் செய்து விஷயத்தை கூறிய பிறகு, என் மகள் ஐஸ்வர்யாவை கட்டிக்கொண்டு, அழுது விட்டு. அவள் எச்சரித்ததை மதிக்காமல் போனதற்கு மன்னிப்பு கேட்டேன். பின்னர் இரவு உணவு முடிந்ததும், மாமனார் மாமியாரிடம் விஷயத்தை கூறிவிட்டு, அப்பாவை என்னுடன் வரும்படி கேட்டுக்கொண்டு மனதில் பாரத்துடன் உறங்க சென்றேன்
சொநோக்ராப்யில்லும் என்னவென்று தெரியாமல் போகவே, சி டி ஸ்கேன் செய்யும் படி கூறினார் டாக்டர். சி.டி. ஸ்கேன் அறையில், நான் இருக்க, அடுத்த அறையில் உள்ள டாக்டர்கள், புருவங்கள் முடிச்சு விழ என் கார்ப பையை தேடிக்கொண்டிருந்தார்கள். சி.டி ஸ்கேன் முடிந்து, வீடு திரும்பியதும், சொல்ல முடியாத, அல்லது சொல்ல தெரியாத  வேதனை.. சில மணி நேரங்களுக்கு பிறகு, சி.டி ஸ்கேன் சென்டரிலிருந்து ஒரு தொலை பேசி  அழைப்பு…. ‘மேடம் நாளை நீங்கள் எம்.ஆர். க்கு வாருங்கள் என்று. சி.டி.ச்கானில் ஒன்றும் சரியாக தெரியவில்லை  அதனால் இந்த டெஸ்ட். உங்களுக்கு இது ப்ரீ என்றனர். மறுநாள் அந்த எம்.ஆர் ரூமில், நான் படுத்திருந்த போது, தாடி வைத்த ஒரு டாக்டர் வந்து, மலையாளம் தெரியுமா அல்லது தமிழா என்று கேட்டார். தமிழ் தான் அனால், மலையாளம் புரியும் என்ற எனது மலையாள புலமையை பறை சாற்றினேன்எத்தனை   குழந்தைகள் என்று கேட்டார். சொன்னேன். என்ன வயது என்ன செய்கிறார்கள் என்று கேட்டார். அதற்க்கும் பதில் சொன்னேன். ‘பின்னே செரிஎன்று கூறிவிட்டு சென்று விட்டார். மறு நாள்ரிப்போர்ட்வாங்கிய பின், அதை எடுத்து சென்று மகபேறு மருத்துவரை சந்தித்தேன். கார்ப பை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி அட்மிட் ஆகா சொன்னார். அதற்க்கு முன்பாக பலப் பல டெஸ்டுகள். அதில் ஒன்று CA125 என்பது. அன்று அது என்ன டெஸ்ட் என்று கூகுளை கேட்க வேண்டும் என்று கூட தோன்றாத மக்கு பிளாஸ்திரியாக இருந்தேன். ஆனால் அது என் நன்மைக்கே என்று உணர்கிறேன். Ignorance is bliss isnt it? என் வீட்டு பக்கத்தில் உள்ள பெரிய ஆசுபத்ரியில் சென்று அட்மிட் செய்து கொண்டேன்டிசம்பர்  மாத இறுதியில்(26 ஆம் தேதி ) நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அது ஒரு மிக பெரிய தனியார் மருத்துவமனை என்பதால், அறுவை சிகிச்சை நடந்த ஓரிரு தினங்களிலேயே டைடிசியன், பிசியோதெரபிஸ்ட் என்று ஒருவர் மாற்றி ஒருவர் வந்து, என்ன சாப்பிட வேண்டும் என்றும், எழுந்து நடக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மூன்றாவது நாலாவது நாள் எழுந்து ரூமை விட்டு வெளியே நடக்க வைத்தார்கள்ஐந்து ஆறு தினங்களில், டாக்டர் வந்து என்னை பார்த்து விட்டு வீடிற்கு செல்ல அனுமதி கொடுத்தார். அறுவை சிகிச்சை காரணமாக, சிறுநீர் வெளியே செல்ல ஒரு குழாய் பொருதப்படிருந்தது. அதை நீக்கி விட்டு நாளை நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியவுடன், சொல்ல முடியாத அளவு சந்தோஷப்பட்டேன்.. அந்த சந்தோஷம் அரை மணி நேரம் தான் நீடிக்கும் என்று நான் அப்போது உணரவில்லை. அந்த குழாயை நீக்கிய உடனே சிறுநீர், ஒழுக தொடங்கியது.. மேலும் ஒரு சில டெஸ்டுகள் செய்த பிறகு, சிறுநீரக பையில் ஓட்டை விழுந்திருப்பது தெரிய வந்தது. மறுபடியும் உடனே, அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும் மூன்று மாதங்கள் பொறுத்து அந்த ஓட்டை தானே மூடாவிட்டால், இன்னொரு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் கூறினார்கள்.
அந்த மூன்று மாதங்கள் என் வாழ்வில் நான் மறக்க முடியாத மாதங்கள்மாமனார், மாமியார், கணவர், மகள்கள், வேலைக்காரி, உற்றார், உறவினர்கள், எல்லோரும் எனக்காக எடுத்து கொண்ட கஷ்டங்கள் சிரமங்கள், வார்த்தையில் சொல்லி மாளாது. என் இரண்டு மருத்துவர்களும் ஒரு நாள் கூட அலுக்காமல், நான் கேட்க்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காமல் பதில் கூறி நான் வாடியிருக்கும் போது, என்னை உற்சாகப்படுத்தி தைர்யம் கூறி, நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து என்னை தேற்றினார்கள்.
அந்த மூன்று மாதங்களும் முடிந்தது, அனால் ஓட்டை மூடவில்லை.. மறுபடியும் அறுவை சிகிச்சைக்கு தயாரானேன்ஏதோ பிறந்த வீட்டுக்கு போவது போல அந்த மருத்துவ மனைக்கு மறுபடியும் சென்று அட்மிட் ஆனேன். நர்சுகளும், ஆயாக்களும், ரொம்ப அன்பாக கவனித்து கொண்டார்கள். மீண்டும் அறுவை சிகிச்சை, ஊசி, மருந்து, வலி வேதனை….. எதை எல்லாம் தாண்டிபிரச்னை தீர்க்கப்பட்டது தெரிந்து நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஒரு வாரத்தில் ஆசுபத்ரியிலிருந்து வீடு வந்து சேர்ந்தேன். பத்து தினங்களுக்கு பிறகு 4 குழாய்கள் எடுக்கப்பட்டு, வீட்டில் எப்போதும் போல சிறு நீர் கழிக்க சொல்லி டாக்டர் சொன்னார்.
வீட்டிற்கு வந்து tube இல்லாமல்catheter bag இல்லாமல் முதல் முதலில் சிறு நீர் கழிக்க பாத்ரூமில் வலது காலை எடுத்து வைத்து, நாவில் நாராயண நாமத்தோடு உள்ளே சென்றேன்.
ஆக இந்த கதையின்  நீதி என்னவென்றால், முப்பத்தைந்து வயதை கடந்த பெண்மணிகள், எதற்காகவும் காத்திராமல், வருடம் ஒரு முறை மகப்பேறு மருத்துவரை தவறாமல் ஆலோசிக்க வேண்டும்தீபாவளி, பொங்கல் போல இதையும் ஒரு பண்டிகை போல இனி வருடா வருடம்  கொண்டாடுவது என்று தீர்மானித்துள்ளேன்.

மனைவி கணவநிடமிரிந்து என்ன எதிர்பார்க்கிறாள்

தன்னிடம் எதிர்பார்க்கப்படும் அன்பும் புரிதலும் தனக்கும் திரும்ப கிடைக்க வேண்டும் என்று
 குடும்பம் சுமக்கும் வலியை தான் புரிந்து கொண்டதை அவர் உணருவதை
,வெற்றியில் பங்கு கொடுக்கவில்லை என்றாலும் தோல்விக்கு கரணம் நீ என்று கூறாமல் இருப்பதை
நோயுற்ற நாட்களிலாவது விலகி இருக்கும் போர்வை தன மேல் போர்தப்படுவதை
 நெற்றி தொட்டழுத்தி காலை பிடிக்க முனைவதை
தன்னை பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் அவள் தன அன்பால் கட்டிப்போடுவதை
 தன பெற்றோருக்கு மனதளவில் மகனாக இருப்பதையும்
 தன பக்கம் நியாயம் பேசினாலும், தொப்புள் கொடியின் பாசத்தில் நெருக்க பட்டிருப்பதை புரிந்து கொள்வதையும்
 “நீயும் களைத்திருப்பாய், வா வெளியே உண்ணுவோம்” என்று கூப்பிடும் பாங்கையும்
நண்பர்கள் வீட்டுக்கு வரும் போது ஆர்பரிக்காமல், அன்பாக அழைத்து காப்பி போட சொல்வதையும்
வீட்டின் நடுக்கூடத்தில் வாக்கு கொடுக்கும் முன்பு மனைவியிடம் கண்களால் ஒரு முறை ஒப்புதல் பெறுவதையும்
 கடைசியாக, தான் விதவை கோலம் பூண்டாலும் தான் இல்லாமல் தன்னவரை யாரிடமும் தவிக்க விடக்கூடாது என்ற பரிதவிர்புக்கு பதில் தெரியாமல் காத்திருக்கிறாள் !!!!!!!!!!!!!!!!!