புத்தாண்டு வாக்குறுதிகள்…..நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளும் ஒன்று தான்…
பிரிவுகள்
-
Join 46 other subscribers
பரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்
ஒவ்வொரு நாளும் எனக்கு கிடைத்த வரம்
புத்தாண்டு வாக்குறுதிகள்…..நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளும் ஒன்று தான்…
Posted in கண்ணோட்டம்
குறிச்சொல்லிடப்பட்டது எடை, கரண்ட், கைதொலைபேசி, சவரம், செல், தண்ணீர், பில், புத்தாண்டு, வாக்குறுதிகள், வாளி, வாழ்துக்கள், வெந்நீர், sms
கணித மேதை ராமானுஜமும் நானும் என்ற தலைப்பில் எழுதவேண்டும்a என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதி விட்டார்கள்……
www.ranjaninarayanan.wordpress.com
அவர்களின் ஒவ்வொரு வரியும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும், நான் பேசிக்கொண்டிருந்ததாகவும் இருந்தது !!!!
என்ன ஆச்சர்யம் இப்பிடிக் கூட ஒருவருடன் ஒருவர் எண்ணங்களில் ஒற்றுப் போக முடியுமா என்ன…
இருந்தாலும், என் கண்ணோட்டத்தில் அதே தலைப்பில் எனது எண்ணங்களை வெளியிட நினைத்தேன்.
ஆக பின் வரும் வரிகளில், எனது எண்ணங்கள் ….
ராமானுஜமும் நானும்……
எனக்கும் அவருக்கும் எட்டாத தூரம்……
அவர் மேதை…………. நான் பேதை…..
இருந்தாலும் அவரை பார்த்தும் அவரை பற்றி படித்தும் வியந்து போயிருக்கிறேன்.
கணக்கு ஏனோ என்னோடு நட்பு பாராட்ட மறுத்தது. ( மத்த பாடங்கள் என்ன வாழ்ந்தது என்று கேட்காதீர்கள் ) !!!!
ஆங்கிலம் மட்டும் பாசம் மேலிட ஈஷிக்கொண்டது……!!!
நான் தமிழை காதலித்தேன்…. !!!
எஞ்சியது, அறிவியல், பூகோளம், சரித்ரம்……அவை தூரத்து பங்காளிகள் போல் பட்டும் படாமலும் உறவு கொண்டன என்னிடம்…!!!!
கையே ஆயுதம் என் அம்மாவுக்கு … டீச்சர் வேறு…வலது கை பழக்கமுள்ளவர் தான் என்றாலும், நான் இடது கை பக்கம் உட்கார்ந்திருந்தாலும், செம்மையாக அடி வாங்குவேன்…அவ்வளவு சமத்து பாடம் படிப்பதில்…..
பாவம் எவ்வளவு பாடு பட்டார்கள் என்னோடு என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.
ரொம்ப எதிர்ப்பார்ப்பு… ஈடு கொடுக்க என்னால் முடிய வில்லை.
நானும் எவ்வளவோ போரடிப் பார்த்தேன்.
statement sumsல் கணக்கு புரியும், போடத் தான் வராது…..
குட்டும், அடியும், ஒரு ஸ்டேஜுக்கு மேல் பழகி / மரத்து போனது….
அப்பா மட்டும், என்னையும் அம்மாவையும் ஒரு சேர சமாளிக்கப் பார்ப்பார்….
கொஞ்சம் கவனிச்சு படி என்று என்னையும்,
போனா போட்டம், அதுக்கு புரியராப்ல கொஞ்சம் மெதுவா சொல்லிக்கொடு என்று அம்மாவையும் சமாதானப் படுத்துவார்….
திக்கித் தடுமாறி, பத்தாவது …………………….fail ஆனேன்… ஆனால் கணக்கில் இல்லை.. அறிவியலில்….. ( கூத்து தானே….)!!!
சீ…. வெக்கமாயில்லை ? என்று கேட்கிறீர்களா …?
“இல்லை ” என்று பளிச்சென்று சொல்வேன்….
என் வெட்கப்பட வேண்டும்….
வாழ்க்கை ஒன்றும் அன்று முடிந்து விட வில்லையே….
அது ஒரு சின்ன சறுக்கல் …. அவ்வளவு தான்…
சறுக்கினால் என்ன உயிரா போய் விடும் ?
திரும்ப எழுந்தால் போச்சு….
சிம்பிள் ……
அப்படித்தான் நானும் எழுந்தேன் …வெறியுடன் படித்தேன்… ஒரு வருஷம் போனது போனது தான் ….ஆனால் முழு மூச்சுடன் படித்து 70% வாங்கினேன் அறிவியலில்…..
11வதில் அறிவியல் பாடம் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள் என் பள்ளியில்…..
‘அடக் கடவுளே, ஏதோ மார்க் வாங்கி விட்டேன் என்பதற்காக அறிவியலை தொடரச் சொல்கிறார்களே ” என்ற கவலை…
வேண்டவே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு commerce பக்கம் வந்தேன்…
அங்கேயும் கணக்கு…..
சரி காசிக்கு போனாலும் , பாவம் விடாதா…. என்னவோ சொல்வார்களே… அதை போல், என்னை கணக்கு அனகோண்டா பாம்பு போல் சுற்றி அழுத்தியது……
12இல் பொது பரிட்சையின் போது கண்ணீர் மல்க எழுதிக்கொண்டிருந்தேன்…….
கணக்குக்கு பிரியா விடை கொடுக்கும் தருணம் அல்ல….
ஒரு மண்ணும் தெரியவில்லை …அதனால்…..
எனக்கு அன்று வந்த மேற்பார்வையாளர் கண்களில் பரிதாபம் ….
ஏதோ என் அப்பா அம்மா செய்த புண்யம், மூதாதையர்கள் ஆசீர்வாதம், 72 மார்க் வாங்கி தப்பித்தேன்……70 பாஸ் மார்க்…..
அன்று போட்டேன் ஒரு முழுக்கு…….
பின் ஆங்கில இலக்கியம்…..முடித்து, கழுத்தை என்னவருக்கு நீட்டினால்….தெரிந்த, கணக்கு புலிக்கு நீட்டியிருக்கிறேன் கழுத்தை என்று…..
வேண்டாத தெய்வமில்லை….XX XY க்ரோமொசோன்கள் நல்ல படியாக வந்து, என் சந்ததிகள் கணக்கில் புலியாகவும், சிறுத்தயாகவும், இருக்க வேண்டுமே என்று….
என்னவரோ வாயாலேயே பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய கணக்கெல்லாம் நொடியில் போடுவார்… வாய் பொளந்து கொண்டு பார்ப்பேன்.
ரசிப்பது தப்பில்லையே….எனக்கு நல்ல ரசனையுண்டு….!!!!!
இன்று வரை…எந்த சின்ன கணக்கு போட வேண்டும் என்றாலும், போட்டு விட்டு….’ சரிதானே ‘ என்று என்னவரிடம் ஒரு அப்ரூவல் வாங்கி கொள்கிறேன்…
மளிகை சாமான் வாங்கினாலும், காய்கறி வாங்கினாலும், கரெக்டாக சில்லறை வாங்கி வந்துவிடுவேன்…..
அப்பா என்ன ஒரு மேதை என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது….கணக்கு இல்லேனா வாழ்க்கை இல்லை என்று சொல்வது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது….
என் செல்வங்களில் ஒன்று கணக்கில் என்னை கொண்ட போது , உணர்ந்து, அவளுக்கு உற்சாகம் அளித்து, கணக்கு இல்லாத க்ரூப் எடுத்து படிக்க வைத்து,
சில பல ஏசல்களுக்கு பாத்திரமாகி …..உன்னைபோலவே அவளையும் ஆக்காதே…. என்று கூரினவர்களுக்கு மத்தியில்,
அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று தோன்ற…அவளுக்கு பிடித்த பாடத்தில் சேர்த்துவிட்டேன்….
ஒரு கஷ்டமும் இல்லாமல் படிக்கிறாள் ….
என்னமோ …. யோசித்துப்பார்த்தால், கணக்கோ ஆங்கிலமோ அறிவியலோ….. எதில் புலியோ, பூனையோ… நல்ல மனிதனாக இருக்க வேண்டும் முதலில்….
தைரியம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,
வெற்றியின் முதல் படி தோல்வி….. என்பார்கள்..அப்போ மற்ற படிகள் வெற்றிப் படிகள் தானே… ( இந்த கண்ணோட்டம் ரொம்ப முக்கியம்….. )
எத்தனை முறை விழுகிறோம் என்பது பெரிதல்ல, விழுந்த பின் எழுந்திருக்கிரோமா என்பது தான் கேள்வி…
இவை எல்லாவற்றையும் தாண்டி நமக்கென்று ஒரு வாழ்க்கை கடவுள் வடிவமைத்துள்ளான் என்ற நம்பிக்கை வேண்டும்…..
நமக்கு வராததை பிடித்துக்கொண்டு, மாங்கு மாங்கு என்று போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வருவதில், திறமையை காட்டலாமே….
ராமானுஜருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்……..
Posted in கண்ணோட்டம்
‘ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்…….” என்று நண்பர் ஒருவரது கைத் தொலைபேசியில் ஒலிக்கும் அவரை கூப்பிடும் போது . சட்டென்று நம் மனதில், ஒட்டிக் கொள்ளும் புத்துணர்ச்சி….
Posted in கண்ணோட்டம்
குறிச்சொல்லிடப்பட்டது காபி, தன்னம்பிக்கை, துவண்டு போவதும், மௌனம், வாய் பேசாத, வாழ்க்கை, CCD
எவ்வளவு படித்தாலும், கேட்டாலும், உணர்ந்தாலும், கடைபிடிக்க முயற்சித்தாலும், நடு நடுவே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கை கொடுக்காமல் போனால்,
இன்று காலை செய்தித் தாளில் படித்த ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.
Posted in வாழ்க்கை
குறிச்சொல்லிடப்பட்டது அந்திமக்காலம், இன்றைய இடுகை, சவப்பெட்டி, சுயபரிசோதனை, மண்ணும் மனிதனும், வைரமுத்து
வாரக் கிழமைகளிலோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ, மாதத்தில் ஒரு முறையோ உபவாசம் இருக்கும் போதே, எங்கோ ஒரு மூலையில்,
Posted in ஆன்மாவின் ராகம்
குறிச்சொல்லிடப்பட்டது இந்துமதம், கடைசி காலம், சந்தாரா, சுயநினைவு, ஜெயின், தற்கொலை, த்ருப்தி, மனஉறுதி, முடிவு
கூந்தல் கருப்பு….ஆஹா !!!
Posted in கண்ணோட்டம்
குறிச்சொல்லிடப்பட்டது ஒப்புக்கொண்டேன், கலர், கிண்டல், கூந்தல், கேலி, பக்குவம், பார்வை, பூச்சு, முதிர்ச்சி, யதார்த்தம், வயது, விமர்சனம்
ஆண்பிள்ளை போல் வெட்டப்பட்ட முடி,
நெஞ்சின் நடுவே. குறுக்கே. போடப்பட்ட பை .
வலது கையில் கடிகாரமும், இடது கையில் வளையல்களும்.
பேன்ட் சட்டை,
கழுத்தை ஒட்டி ஒரு மெல்லிய சங்கிலி.
அதில் தொங்கும் ஒரு அழகான பென்டன்ட் …
பார்ப்பவர்களின் கவனத்தை கண்டிப்பாய் ஈர்க்கும் கனிவான, தோழமையான கண்கள்….
இது தான் சுதா
தொலைவிலிரிந்தே அந்த அன்யோன்யத்தை உணர்ந்தேன்
மற்றொரு தோழி மூலம் அறிமுகமானபோது
‘ஹாய் ‘என்று என் கையை பிடித்து குலுக்கியது இன்றும் நினைவில் உள்ளது.
முதல் இரு சந்திப்புகளிலேயே, ஏதோ வலியை பற்றிய பேச்சு எழ yoko yoko வை எனக்கு அறிமுகப்படுத்தியவள்
உடல் வலிக்கு மட்டுமல்லாது. மன வலிக்கும் மருந்துண்டு அவளிடம் ….
அவளது ‘எனெர்ஜி ‘ஒரு தொற்று நோய் ….
அவளையும் அவள் நடவடிக்கைகளையும் தொடர்ந்தால் புரியும்
வாழ்க்கை வாழ்வதற்கே என்று….
அவள் இருக்கும் இடத்தில், சிரிப்புக்கு பஞ்சமே கிடையாது.
யாரைப்பற்றியும் புறம் கூறி நான் பார்த்ததில்லை.
நான்கு வருட இடைவெளிக்கு பிறகு பம்பாய் வந்த பொது தொலைபேசியில் என்னை அழைத்த மறு நிமிடம் ஒப்புக்கொண்டேன்
அவளை பொய் சந்திப்பதற்கு ……
அடுத்த ஒரு மணி நேரத்தில், அவள் தோழியின் வீட்டில் சந்தித்தப்போது ,
கட்டிப் பிடித்துக்கொண்டாள்.
‘கிளிங் ‘
என்று ஒரு சத்தம் ….
என்னை கை தொலைபேசியாகவும் அவளை சார்ஜெராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் ….
( சார்ஜிங் தொடங்கியதன் அறிகுறி தான் அந்த கிளிங் )
அடுத்த முறை பார்க்கும் வரை தாங்கும்…..
அப்பிடிப்பட்ட பெண்மணிக்கு, அஞ்சா நெஞ்சம் கொண்டவளுக்கு, மற்றவர்களின் நலன் விரும்புவளுக்கு
மற்றவர்களால் விரும்பப்படுபவளுக்கு, என் விசிறிக்கு, அவள் ரசிக்கும் என் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Posted in வாழ்த்துக்கள்