அடி வயிற்றில் ஒரு சுழற்சி
தொண்டையில் ஒரு உருண்டை
கண்களில் மூட்டிக் கொண்டு நிற்கும் கண்ணீர்

ஒவ்வொரு தாய்க்கும் ,தாய் அமுதம் சுரக்கும் தந்தைக்கும் பிள்ளைகளை விட்டு பிரியும் தருணத்தில் ஏற்படும் உணர்ச்சி .

ஸ்டீரீங் வீல் பக்கதில் கை தொலைபேசியில் GPS வழி காட்டுகிறது. பின் சீட்டில் இருந்து கொண்டு எட்டி பார்க்கிறேன். 44 நிமிடங்கள் விமனனதளம் சென்றடைய என்கிறது. மனம் அதை 45ஆக ரவுண்டு ஆப் செய்து கொள்கிறது. ஏதோ பேசிக்கொள்கிறோம். ஒரு படபடப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. மறுபடியும் பார்க்கையில் 10 நிமிடம் பின் 9,8,7,6,5 4,3,2,1. இறங்கும் இடம் வந்து இறங்கி, பெட்டிகளை வெளியில் எடுத்து வைத்து விட்டு கட்டிக் கொள்கிறேன் மகளை .
இரண்டு வாரங்கள் முன்பு இளையவளை பிரியும் போதும் இன்று மூத்தவளை பிரியும் போதும் கட்டிக்கொள்ளும் அந்த நொடியில்
மீண்டும் அவர்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டுவிட மாட்டோமா என்று தவிக்கிறேன்.

முடிந்தால் ஒவ்வொரு தாயும் செய்திருப்பாளே !

அனால் அதற்க்காக பெறவில்லையே !

பொங்கும் உணர்ச்சிகளை நன்றாக கையாண்டு, சிரித்து, சின்னதாக மென்மையாக புத்தி சொல்லி ( வேறென்ன வேளா வேளைக்கு சாப்பிட ) இறைவனை துணையிருக்க அழைத்துவிட்டு கையசைத்து விடை கொடுத்தேன்.
மீண்டும் பார்க்கும் வரை கைத்தொலை பேசியும் கணினியும் துணை !
நான் அழுது பிள்ளைகளை பலவீனமாக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி கொண்டேன் மூத்தவள் பிறந்த போதே !இன்று வரை வெற்றி. போக போக எப்படியோ தெரியாது.

பயணங்கள் முடிவதில்லை
அஞ்ஞானங்கள் விடுவதில்லை
மனங்கள் அடங்குவதில்லை
ஆனால் அடங்கித் தான் ஆக வேண்டும் . நமக்காகவும் பிள்ளைகளுக்காகவும்.
புத்தியை வேறு விதமாக மாற்ற பழகுங்கள் . என் கையில் படிக்க புத்தகமும், ஸ்வெட்டர் போடுவதற்கு நூலும் ஊசியும் இருக்கு.

Advertisement

One response to “

  1. நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவைப் படித்தேன். இந்தப் புதிய பதிவை மட்டுமில்லாமல் பல பழைய பதிவுகளையும் – நான் ஏற்கனவே படித்தது, நான் எழுதுவதை நிறுத்திய பிறகு நீங்கள் எழுதியிருக்கும் பதிவுகள் என்று தொடர்ந்து படித்துக் கொண்டே போனேன். சந்தாரா முதல் முறை படித்த போது மனம் அதிர்ந்தது போலவே இப்போதும் அதிர்வை எழுப்பியது.
    பல புதிய படங்களைக் கற்றுக் கொண்டேன். எழுத்துக்கள் என்றுமே வலிமையானவை – யார் எழுதியிருந்தாலும், இல்லையா?
    இன்று காலையிலேயே உங்கள். நினைவு வந்தது. காரணம் சிவசங்கரியின் சமீபத்திய பேட்டி. அவரது புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் தேடித் தேடி வாங்கினீர்களே அந்த நினைவினால்.
    இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்றும் ஓரளவு புரிந்து கொண்டேன்.
    உங்களை நேரில் கண்டது போல ஒரு உணர்வு.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s