பருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்…..

IMG_1963.jpgஅடடா என்ன காம்பினேஷன் மா ….

இத இத…இத தான் நான் எதிர்பாத்தேன்…

காப்பிக்கு மட்டுமில்லாமல்,

பொங்கல் வடை சாம்பார், அடை அவியல், ஆப்பம் குருமா, சப்பாத்தி குருமா, அதோட ஒரு நல்ல சூடான பில்டர் காபி…(கொஞ்சம் இடைவெளி விட்டு)…ஸ்ட்ராங்கா…

சாம்பார் பொரியல், ரசம் வதக்கல்,கூட்டு கறி, தொகையல் சுட்ட அப்பளம், வெத்த கொழம்பு-சுட்ட அப்பளம் உருளைக்கிழங்கு ரோஸ்ட், மோர் கொழம்பு பருப்பு உசிலி என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.

சாப்பாட்டில் மட்டுமா அனு…

இந்த ms ப்ளூ ல ரெட் பார்டர் இருக்கே…எவேர் கிரீன் காம்பினேஷன் !

மாம்பழத்துல பச்சை …சான்சே இல்லை

மயில் கழுத்துல அரக்கு

நல்ல கருத்த பச்சைல மஸ்டர்டு பார்டர் இருக்கும் பாரு….

இப்படி முடியவே முடியாத கலர் காம்பினேஷன்கள்….

(இதனால் தான் ஆண்களுக்கு துணி எடுக்க போகும் போது நமக்கு கழுத்து வரை துக்கமோ)ஆனாலும் அவர்கள் ரொம்ப பாவம் தான்.

சரி காம்பினேஷன் இங்கே நின்று விடுகிறதா என்றால் இல்லை…

இந்த மாங்கா மாலை ல இப்பிடீ…ஒரு ரோ முத்து இருந்தா அழகா இருந்திருக்கும்.

இந்த சேப்பு கல்லுக்கு பதில் பச்சை கல் அமக்களமாக இருக்கும்.

சில …சில சமயத்தில் பெண்கள் பெருந்தன்மையுடன் உள்ளதை உள்ள படி ரசிக்கவும் செய்வார்கள்.

இந்த அன்கட் டைமண்ட் தான்ங்க என் பிரென்ட் கீதா வாங்கினா…

இந்த குட்டி ஜிமிக்கி…..

(ஆபரணங்கள் பற்றி பேசும்போது ஜிமிக்கி பற்றி பேசவில்லை என்றால் என் ஜாதகப்படி கால ஜிமிக்கி தோஷம் வருமாம்)!!!!

காதோட ஒட்டினாபோல எவ்ளோ க்யூட்டா இருக்கு பாருங்களேன்…வைர தோடுக்கு போட்டுக்க பெரிய ஜிமிக்கி இருக்கு …இது தினப்படி போட்டுக்க நல்லாருக்குமா னு பாக்றேன்…

ஆனால் இப்போதெல்லாம் தங்கத்தில் பணம் செலவு செய்வது வேண்டவே வேண்டாம்

சில மாதங்கள் முன் நகை கடையில் நுழைந்தால் ஏதோ இன்ஸ்டாகிறாமில் பக்கங்கள் புரட்டுவது போல் ஒரு அனுபவம். எல்லாமே தங்கம் அல்லாத உலகத்தில் கிடைப்பதால் மலைப்பாக இல்லை. டெம்பிள் ஜுவெல்லரி என்று நிஜ கெம்ப் தோற்கும் அளவுக்கு டிசைன் களும், கற்களும் வந்து விட்டன .

அதையும் தாண்டி ஒரு கல்யாண விழாவிற்கு சென்றால், பக்கத்தில் உள்ளவர், அங்கே ஒரு perfect காம்பினேஷன் பற்றி அங்கலாய்ப்பார். பிள்ளை… கொஞ்சம் நிறம் கம்மி தான் பொண்ண பாகர்ச்ச…என்றும்… பொண்ணு கொஞ்சம் குண்டு ..பிள்ளை சின்னவனா தெரியறான் இல்ல… என்று ஒரே பேத்தலாக பேத்துபவர்கள்…

(பிள்ளை வீட்டார் / பெண் வீட்டார் காதில் விழுந்தால் அந்த நபர் அம்பேல்)

காலை டிபன், சாப்பாடு, புடவை, வேட்டி சட்டை, நகை, பாத்திரம் எதில் வேண்டுமானாலும் காம்பினேஷன் தேடுங்கள் ஆனால் உங்கள் மனைவியோ கணவனோ ஏற்கனவே உங்களுக்கு நிச்சயிக்க பட்டவர்கள். இடையில் புகுந்து பெரிய்ய்ய்ய் பருப்பாட்டம் எதுவும் செய்யாதீர்கள்.

அதற்காக உங்கள் இஷ்டமில்லாமல் தலையில் திணிக்க பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை.

ஏற்படுகிற காம்பினேஷனை முடிந்த மட்டும் நன்றாக கொண்டு போக முற்படலாமே.

If you get married , you stay married

என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. முணுக் முணுக்கென்று எதற்கு எடுத்தாலும் பேச்சுக்கு பேச்சுக்கு வாதிடுவது, சண்டை போடுவது, மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வது(ஆண் பெண் இருவருக்கும் தான் ) இதெல்லாம் தவிர்த்து, வாழ ஆசை படலாம்.

கிடைத்த காம்பினேஷனை நல்ல காம்பினேஷனாக மாற்றலாம்.

பை தி வே… தலைப்பில் உள்ள காம்பினேஷன் மிக அருமையாக இருந்தது.

அமெரிக்க இந்திய ஜுகல்பந்தி இன்று வ்ந்த வீட்டு சமயலறையில்!!!!!

4 responses to “பருப்பு சாம்பாரும் ப்ரஸ்ஸல் ஸ்பரௌட்சும்…..

  1. Buddy, ரொம்ப ரொம்ப சூப்பர்,தலைப்பே அட்டகாசம்,அதுவும் அந்த காம்பினேஷன்ஸ் பார்ட் சான்ஸே இல்ல,ஆமாம் ,நீங்களும் ஜிமிக்கி fan ஆ??அதை பார்த்ததும் ரொம்ப ஜாலியா இருந்தது.அட அட அடா,என்ன அழகான காம்பினேஷன்ஸ்? நம்ப ரெண்டு பேரும் ஏதோ கல்யாண ஆத்துல பேசிக்கற மாதிரி இருந்தது.நகை கடையும் இன்ஸ்டாகிறமும் என்ன ஒரு லவ்லி கம்பரிசன்?நச்சுன்னு இந்த கால இளசுகளுக்கு ஒரு advice அதை விட சூப்பர்!On the whole it was totally enjoyable!
    💐👍👌

    Like

    • Wow ! Wonderful !! What a comparison mate ! Very interesting and poignant..

      சலசல என்று ஒரு நீரோடை போல் ஓடிக்கொண்டு இருக்கிறது உங்கள் நடை. மிகவும் அருமை 😍😍

      Thoroughly enjoyed reading it..
      👍💐❤️❤️

      Like

  2. Aunty, செமையா எழுதறீங்க.. Wonderfully written…

    Like

பின்னூட்டமொன்றை இடுக