ஈன்ற பொழுதினும்….

ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் தன் மகன்/மகள் சான்றோன் எனக் கேட்டத் தாய்.

வேறென்ன வேண்டும் ஒரு தாய்க்கு?

தன் உதிரத்தை உணவாக்கி கொடுத்து வளர்த்து தன் பிள்ளை நல்லவனாக அல்லது நல்லவளாக வாழ்வில் திகழ வேண்டும் என்பதை தவிர வேற ஒரு எண்ணம் எந்த தாய்க்கும் இருக்காது.

என் இரண்டாவது கண் இன்று தன் மனதில் உள்ளதை, தன் முதல் வகுப்பு ஆசிரியையை நினைவு கூர்ந்து பெற்ற தாய் அல்லாத தாய் போன்றவள் என்கிற தலைப்பில் ஏழுதியிருப்பது மிக பெருமையாக இருக்கிறது.இங்கே படியுங்கள் அவள் எழுதியதை

https://www.timesofamma.com/

கண்ணீர் மல்க மல்க படித்தேன்.

அந்த ஆசிரியைக்கு நானும் என்றும் கடமை பட்டிருக்கிறேன்.

பிள்ளைகளை பொறுமையுடன் வளர்க்க வேண்டுகிறேன்.

நீங்கள் பெரியவர்கள், உலகம் கண்டவர்கள். அவர்கள் இப்போது தான் பூத்திருக்கிறார்கள்

உங்கள் கண்ணோட்டத்தில் அவர்களையும் பார்க்க சொல்லி வற்புறுத்தாதீர்கள். உங்கள் வயது வரும் போது பார்ப்பார்கள். நம்புங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரின் கண்ணோட்டத்தில் பார்த்தீர்களா …?

இல்லியே …அப்பறம் இப்போது ஏன் ஏதிர்பார்க்கிறீர்கள்?

பொறுமை..தலையாய குணம்.

சும்மா வருவது இல்லை இந்த பதவி

இன்று நீங்கள் காட்டும்.பொறுமையும் அன்பும் நாளை நல்ல மரமாக வளர்ந்து, பின்னாளில் வ்ருக்ஷமாக விரிந்து பரந்து இருக்கும் போது உலகம் ஹா ஹா ஹா என்று அதன் பெருமை பேசும்.

சமீபத்தில், என் நண்பர்கள் மீனாவும் ரங்காவும் தன் மகளை எப்பிடி வளர்த்துள்ளார்கள் என்பதை முகநூலில் படித்தபோது மெய் சிலிர்த்தது. சின்ன வயதில் தானே செய்த ஆபரணங்களை விற்று வந்த காசில் தன் தெருவில் உள்ள தள்ளு வண்டி இஸ்திரி காரரின் மகளுக்கு படிப்பிற்கு அளித்துள்ளாள் அந்த குழந்தை.

எங்கிருந்து வரும் இந்த குணம் 10 -12 வயதில். ?

அதற்கான மார்க்கம் காண்பிக்கும் போது மட்டுமே.

மார்க்கம் யார் காண்பிப்பார்கள்?

பெற்றவர்கள் மட்டுமே!

வாழ்ந்து காட்ட வேண்டும் பிள்ளைகளுக்கு. ஓதினால் மட்டும் போதாது.

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே

அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே

என்று என் தோழி மீனாவுக்கு எழுதினேன். மெய்சிலிர்த்து கண்ணீர் வந்தது என்றாள். ஆனந்த கண்ணீர்.

அந்தப் பொழுதிர்க்காக தவம் கிடக்கிறோம்.அன்று மனதளவில் தளர்ந்த என் குழந்தை இன்று எனக்கு தாய். காலம் மாறும் என்று நான் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை.வாழ்ந்து காட்டி வெற்றி பெறுங்கள்.யார் சொன்னார்கள் படிக்கும் காலத்தில் மட்டும் தான் தேர்வுகள். நீங்கள் பெற்றோர் என்றால் தினம் தினம் தேர்வு தான். எல்லாமே அவுட் ஆப் சிலபஸ் தான் ,😎இது எனக்கு தெரியாதே என்று கையெல்லாம் விரிக்க முடியாது. கூகுளை கேட்காதீர்கள. உங்களை பெற்றவர்கள், அவர்களை பெற்றவர்களை கேளுங்கள். அத்துடன் கொஞ்சம் இந்த கால கணக்கு படி இதமாக பதமாக பொறுக்கும் சூட்டில் குழந்தையை குளிப்பாட்டுங்கள் !!!!வங்கியில் நாம் வைத்திருக்கும் சேவிங்ஸ் அகௌண்ட் போல தான். சிறுக சிறுக சேமிப்பை சேருங்கள் நாளை ஒரு பெரிய பொருள் ஈட்டுவீர்கள்…. வட்டியும் முதலுமாக….என் அனுபவத்தை இங்கே பதித்துள்ளேன். என்னை விட வயதில் மூத்தோர் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள். என்னிலும் இளயவர்களுக்கு என் ஆசிகள். நீங்கள் தளரும் போது என்னை தொடர்பு கொள்ளுங்கள். உதவ காத்திருக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

2 responses to “ஈன்ற பொழுதினும்….

  1. மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு !!! இன்றும் நம குழந்தைகளை யாராவது பாராட்டி பேசினால் மனம் குளிர்கிறது..
    சின்னதாக ஒரு பாராட்டு ஒரு ஊக்குவிப்பு போதும் அவர்கள் வானத்தையும் வில்லாக வளைத்து கொண்டு வருவார்கள்…
    நீங்கள் சொல்வது போல் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு ராக்கெட் சயின்ஸ் அல்ல. பொறுப்புடனும் பொறுமையாகவும் வளர்த்தால் அவர்கள் தங்கள் குழந்தைகளை அதேபோல் கொண்டு வருவார்கள்.. பொறுமை என்ற ஆபரணம் அவர்கள் அணிய வேண்டும்.. அது போதும்..

    Like

  2. Amazing..the values that you insist to inculcate onto the younger generation is very much the need of the hour in this day and age

    Like

பின்னூட்டமொன்றை இடுக